Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
இந்த படத்தில் உங்க கண்ணுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. காதல் பற்றிய உங்களோட எண்ணத்தை சொல்றோம்..
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பவை பார்க்க கவர்ச்சிகரமாக இருப்பதோடு, அவற்றில் பல்வேறு விஷயங்கள் மறைந்திருக்கும். இதனால் இப்படியான படங்களை பார்க்கும் போது ஒவ்வொருவரின் கண்களுக்கும் ஒவ்வொரு விஷயங்கள் தெரியும். இப்படி ஒருவருக்கு என்ன தெரிகிறதோ, அதைக் கொண்டு அந்நபரின் குணங்கள் கணித்து கூறப்படுகின்றன.
இணையத்தில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உலா வருகின்றன. அவற்றில் மிகவும் சுவாரஸ்யமான, அதே சமயம் ஒருவரது ரகசியமான குணங்களை வெளிப்படுத்தும் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதலில் உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ, அது காதல் பற்றிய உங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும்.

பூக்கள் தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் பூக்கள் தெரிந்தால், நீங்கள் காதல் ஒருபோதும் மறைந்துவிடக்கூடாது என்று நினைப்பீர்கள். ஆனால் காதல் விஷயங்களில் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பது உங்களுக்கான அறிவுரை. எப்போதும் எந்நேரமும் உங்கள் வாழ்க்கைத் துணை ரொமான்டிக்காக இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடாது. ஏனெனில் ஒவ்வொருவரும் தினமும் பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பார்கள். எனவே எவராலும் 24 மணிநேரமும் ரொமான்டிக்காக இருக்க முடியாது என்பதை புரிந்து கொண்டால், காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
பட்டாம்பூச்சிகள் தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் பட்டாம்பூச்சி தெரிந்தால், காதல் பற்றி உங்களுக்கு ஒரு வலுவான உணர்வு உள்ளது. மேலும் அன்பால் அனைத்தையும் வெல்ல முடியும் என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். உங்கள் வழிகளில் வரும் ஒவ்வொரு சவால்களையும் தடைகளையும் கடந்து செல்ல அன்பால் மட்டுமே முடியும் என்று நம்புவீர்கள். காதல் வாழ்க்கை என்று வரும் போது நீங்கள் நம்பிக்கையானவராக இருப்பீர்கள்.
பெண்ணின் முகம் தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு பெண்ணின் முகம் தெரிந்தால், அன்பினால் மட்டுமே உங்களை முழுமைப்படுத்த முடியும் என்று நம்பும் ஒரு வகையான நபர். காதல் ஒரு சிறந்த உணர்வு மற்றும் அது ஒருவரது வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியை கொண்டு வருகிறது. அதே வேளையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க உங்கள் வாழ்க்கைத் துணையை முழுமையாக சார்ந்திருப்பத் தவிர்க்க வேண்டும். மாறாக, உங்களை மகிழ்ச்சி அடைய செய்யக்கூடிய விஷயங்களை அறிந்து அவற்றை முயற்சிக்க வேண்டும். ஏனெனில் மற்றவர்களை அதிகமாக சார்ந்திருப்பது அவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
வானம் தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் வானம் தெரிந்தால், நீங்கள் உறவில் உடலுறவு மற்றும் உடல் நெருக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். உங்கள் துணையை காதலிப்பது பற்றி நிறைய பகல் கனவு காண்பீர்கள். ஒரு நெருங்கிய உறவில் செக்ஸ் ஒரு முக்கியமான அம்சம் என்பது உண்மை என்றாலும், எந்நேரமும் படுக்கையில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
