Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
இதுல உங்க கண்ணுக்கு முதல்ல எந்த மிருகம் தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை செல்றோம்..
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருந்தாலும், அந்த படங்கள் ஒருவரது மறைக்கப்பட்ட குணாதிசங்களைப் பற்றி வெளிப்படுத்தும். இம்மாதிரியான படங்கள் புதிர் நிறைந்த விளையாட்டு போன்றும் இருக்கும். இந்த படங்களை காணும் போது முதலில் ஒருவரது கண்களுக்கு எது தெரிகிறதோ, அது அந்நபரின் மறைக்கப்பட்ட குணாதிசயங்களை வெளிப்படுத்தும்.
நீங்கள் உங்கள் மறைக்கப்பட்ட குணாதியங்களை தெரிந்து கொள்ள விரும்பினால், ஆப்டிகல் இல்யூஷல் சோதனையை மேற்கொள்ளுங்கள். இணையத்தில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. அதில் ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சிங்கம், ஒட்டகச்சிவிங்கி, யானை, குதிரை போன்ற மிருகங்கள் மறைந்துள்ளன. இதில் இந்த படத்தைப் பார்த்ததும் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிந்தது என்று கூறுங்கள். உங்களின் ஆத்ம விலங்கு என்னவென்பதையும், உங்களின் மறைக்கப்பட்ட குணங்களையும் கூறுகிறோம்.
சிங்கம்
இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் சிங்கம் தெரிந்தால், நீங்கள் துணிச்சலானவர், சவால்களை சமாளிக்கும் திறன் கொண்டவர். உங்களின் அசைக்க முடியாத தன்னம்பிக்கையானது உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் ஊக்குவிக்கும். என்ன தான் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியாக வலிமையானவராக இருந்தாலும், உங்களின் உண்மையான சக்தி, அசைக்க முடியாத தன்னம்பிக்கை தான். நீங்கள் பார்ப்பதற்கு சற்று முரட்டுத்தனமானவராக காணப்பட்டாலும், உங்களை நன்கு அறிந்தவர்களுக்கே உங்களின் அன்பான குணம் தெரியும்.
ஒட்டகச்சிவிங்கி
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒட்டகச்சிவிங்கி தெரிந்தால், நீங்கள் தொலைநோக்கு பார்வையுடையவர் மற்றும் எளிமையான வாழ்க்கையையே வாழ விரும்புவீர்கள். உங்கள் மனதில் ஏராளமான சிறந்த யோசனைகள் இருப்பதோடு, சிறந்த அறிவாற்றல் திறனால் பல சாதனைகளைப் புரிவீர்கள். எந்த ஒரு காரியத்திலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். கருணையுள்ளம் கொண்டவர்கள் மற்றும் கண்ணியத்துடன் நடப்பீர்கள். வதந்திகளை நம்பமாட்டீர்கள். உண்மை எதுவோ அதையே நம்புவீர்கள்.
யானை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் யானை தெரிந்தால், நீங்கள் மிகவும் புத்திசாலி. உங்களின் அமைதியான நம்பிக்கையும், நிலையான உறுதியும், உங்கள் இலக்குகளை எளிதில் அடைய உதவுகிறது. நீங்கள் மற்றவர்களின் கருத்துக்களால் திசைதிருப்பப்படமாட்டீர்கள். உண்மை பக்கம் தான் நிற்பீர்கள். பாசமானவர்கள். அதிக அக்கறை கொண்டவர்கள் மற்றும் உங்கள் மீது அன்பு கொண்டவர்களை நன்கு பாதுகாப்பீர்கள். நல்ல நினைவாற்றலைக் கொண்டிருப்பீர்கள்.
குதிரை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் குதிரை தெரிந்தால், நீங்கள் விசுவாசமானவர்கள் மற்றும் சுதந்திர மனப்பான்மையைக் கொண்டிருப்பீர்கள். சாகசத்தை அதிகம் விரும்புவீர்கள். நீங்கள் சற்று முரட்டுத்தனமானவராக வெளிப்பட்டாலும், உங்கள் அன்புக்குரியவர் உங்கள் உண்மையான இயல்பை அறிவார்கள். உங்களுக்கு ஒருவரைப் பிடித்துவிட்டால், அவர்களுக்கு மிகவும் விசுவாசமாக இருப்பீர்கள். குடும்பம் மற்றும் நண்பர்களின் பிணைப்பால் நீங்கள் வலிமையைப் பெறுகிறீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications