Latest Updates
-
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
அக்டோபர் மாசத்துல இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. இல்லன்னா வேலை போயிடும்..
October 2023 Monthly Horoscope: 2023 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த அக்டோபர் மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இந்த கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் மாதத்தில் தொடக்கத்திலேயே புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. அதைத் தொடர்ந்து சூரியன் துலாம் ராசிக்கு செல்லவிருக்கிறார். மாத இறுதியில் ராகு, கேது பெயர்ச்சி நிகழவுள்ளன.

இப்படி 5 முக்கிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதால், பல ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவதோடு, சில ராசிக்காரர்கள் சற்று கூடுதல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இப்போது அக்டோபர் மாத கிரக பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் இம்மாதத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த ராசிக்காரர்கள் இம்மாதத்தில் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் வெற்றி கிடைக்காது. தேவையற்ற செலவுகளால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் சில சவால்களை சந்திக்க நேரிடும். நிதி நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்படும்.
அக்டோபர் மாதத்தின் இறுதி வரை ராகு, குரு சேர்ந்து பயணிப்பதால், இந்த ராசிக்காரர்கள் செலவுகள் அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் சற்று மோசமான பலனைப் பெறுவார்கள். சிலர் நஷ்டத்தை சந்திக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் கவனமாக வேலையை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதமானது மிகவும் மோசமானதாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சனியின் பார்வை 8 ஆவது வீட்டில் விழுவதால், இந்த ராசிக்காரங்கள் தங்கள் வேலையை இழக்கும் சூழல் ஏற்படலாம்.
மேலும் செவ்வாயின் நிலையால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நஷ்டங்களை சந்திக்கும் வாய்ப்புள்ளது. எதிரிகள் இம்மாதத்தில் ஆதிக்கம் செலுத்துவார்கள். நிதி நிலையும் மோசமாக இருக்கும். பண பிரச்சனையால் பல முக்கியமான வேலைகள் தடைபடும்.
மீனம்
மீன ராசிக்காரர்களும் அக்டோபர் மாதத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதுவும் ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதோடு தொழில் மற்றும் நிதி வாழ்க்கையிலும் அசால்ட்டாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ராகுவுடன், சனியின் தாக்கமும் அதிகமாக இருப்பதால், மற்ற ராசிக்காரர்களை விட இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இம்மாதத்தில் தேவையற்ற பயணங்களால் அதிகம் அலையக்கூடும். பணிபுரிபவர்கள் சவால்களை சந்திப்பார்கள். சிலருக்கு திடீரென்று வேலை போகவும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
