Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
இந்த 3 தேதிகளில் பிறந்தவங்க புத்திசாலியாம்.. எல்லா இடத்துலயும் பாராட்டுக்களை பெறுவாங்களாம்..
Numerology In Tamil: ஜோதிடத்தின் ஒரு கிளை தான் நியூமராலஜி என்னும் எண் கணிதம். இந்த நியூமராலஜியின் படி, ஒருவரது பிறந்த தேதியின் தாக்கமானது அந்நபரின் வாழ்க்கை முழுவதும் இருக்கும். இந்த எண் கணித்தில் ஒருவரது விதி எண்ணானது அவரது பிறந்த தேதியைக் கொண்டு பெறப்படுகிறது. எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்களைக் கொண்டு ஒருவரைப் பற்றி கணித்து கூறப்படுகிறது. இந்த 9 எண்களுக்கும் அதிபதிகள் உள்ளனர்.
இவற்றில் வணிகம், வியாபாரம், புத்திசாலித்தனம் ஆகியவற்றின் அதிபதி தான் புதன். இந்த புதனுக்குரிய எண் 5 ஆகும். 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த 5 என்ற எண்ணிற்கு உரியவர்கள் மிகவும் புத்திசாலிகள், படிப்பாளிகள், வியாபாரத்தில் கொடிகட்டி பறப்பார்கள். இந்த விதி எண் 5-க்கு உரியவர்களைப் பற்றி இப்போது காண்போம்.

தொழிலில் கொடிகட்டி பறப்பார்கள்
எண் கணிதத்தின் படி, விதி எண் 5-க்கு உரியவர்கள் பெரிய தொழிலதிபர்களாக இருப்பர். வாழ்க்கையில் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். தங்களின் புத்திசாலித்தனத்தால் வியாபாரத்தில் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். எப்பேற்பட்ட பிரச்சனைகளில் இருந்தும் புத்திசாலித்தனத்தால் சமாளித்து எளிதில் வெளிவருவார்கள். மிகுந்த நகைச்சுவை உணர்வைக் கொண்டிருப்பார்கள். கடின உழைப்பாளிகளாக இருப்பார். எடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டார்கள்.
செல்லும் இடங்களில் பாராட்டைப் பெறுவார்கள்
நியூமராலஜியின் படி, விதி எண் 5-க்கு உரியவர்கள் பணியிடத்தில் கடுமையாக உழைப்பார்கள். இந்த கடின உழைப்பினாலேயே பணியிடத்தில் பாராட்டுக்களைப் பெறுவார்கள். பேச்சாற்றலை கொண்டிருப்பார்கள். தங்கள் பேச்சால் நிறைய பேரின் மனதை வெல்வார்கள். பேச்சு தொடர்பான துறையில் இருந்தால், அதில் கொடிகட்டிப் பறப்பார்கள். அதோடு இந்த எண்ணிற்கு உரியவர்கள் கவர்ச்சிகரமான ஆளுமையையும், தோற்றத்தையும் கொண்டிருப்பார்கள். நிறைய நகைச்சுவை குணம் கொண்டவர்கள்.
ரொமான்டிக்கான திருமண வாழ்க்கை
விதி எண் 5-க்கு உரியவர்களின் காதல் வாழ்க்கையானது சற்று குழப்பமாகவே இருக்கும். திருமணத்திற்கு முன் இவர்கள் காதல் விவகாரங்களில் சிக்கி சின்னாபின்னமாவிர்கள். சொல்லப்போனால் இவர்களுக்கு காதல் செட் ஆகாது. ஆனால் திருமணத்திற்கு பின் இவர்களின் வாழ்க்கை ரொமான்டிக்காகவும், இனிமையாகவும் இருக்கும். தனது வாழுக்கைத் துணையின் மீது அதிக அக்கறையை கொண்டிருப்பார்கள். மொத்தத்தில் திருமண வாழ்க்கையானது மிகவும் ரொமான்டிக்காக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications