Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 3 தேதிகளில் பிறந்தவங்க செம புத்திசாலிங்களாம்.. வியாபாரத்தில் கொடிகட்டி பறப்பாங்களாம்..
Numerology In Tamil: எண் கணிதத்தின் படி, ஒருவரது குணாதிசயங்கள், பண்புகளை எளிதில் அறிய முடியும். ஜோதிடத்தில் ஒருவரது ராசியைக் கொண்டு அந்நபரின் குணங்களை அறியப்படுகின்றன. அதேப் போல் எண்கணிதத்தில் ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நபரின் குணங்கள் கூறப்படுகின்றன.
எண் கணிதத்தில் 1-9 வரையிலான எண்ணெய் உள்ளன. இந்த எண்களானது பிறந்த தேதியின் கூட்டுத் தொகையின் ஒற்றை இலக்க எண்ணாகும். உதாரணமாக, ஒருவர் 15 ஆம் தேதி பிறந்தால், அவருக்கு உரிய எண் 1+5=6 ஆகும்.

இந்த எண்களின் அடிப்படையில் ஒருவரது குணங்கள், எதிர்காலம் போன்ற அனைத்து விஷயங்களையுமே தெரிந்து கொள்ளலாம். அதுவும் இந்த எண்கள் ஒவ்வொன்றிற்கும் அதிபதிகள் உள்ளனர். இந்த அதிபதிகளைக் கொண்டு தான் அந்நபரின் குணங்கள் கூறப்படுகின்றன.
அந்த வகையில் குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருப்பர். புத்திசாலித்தனத்தின் காரணியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனத்திற்கு மட்டுமின்றி, வியாபாரம், பேச்சு, படிப்பு ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படுகிறார். இப்போது எந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்திசாலித்தனமானவர்கள், என்பதைக் காண்போம்.
எண் 5
எண் கணிதத்தின் படி, எண் 5-க்கு உரியவர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருப்பர். ஏனெனில் இந்த எண்ணின் அதிபதி புதன். 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புதனின் பரிபூர்ண அருளை பிறவியில் இருந்தே பெற்றவர்கள. இதனால் இவர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருப்பர். அதோடு, இவர்கள் மிகவும் தைரியமானவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகளும் கூட.
எண் 5-க்கு உரியவர்களின் குணங்கள்
நியூமராலஜியின் படி, எண் 5-க்கு உரியவர்கள் மிகவும் புத்திசாலிகள். முக்கியமாக புத்திசாலித்தனத்தால் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். அதோடு இந்த தேதிகளில் பிறந்தவர்கள் லட்சுமி தேவியின் ஆசியையும் பெற்றவர்கள. மேலும் இவர்கள் புத்திசாலித்தனம் மற்றும் திறமை ஆகியவற்றால் எங்கு சென்றாலும், நல்ல மரியாதையைப் பெறுவார்கள். இவர்கள் தங்களின் அதிர்ஷ்டத்தை விட கர்மாவை நம்புவார்கள். அதோடு இவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை எளிதில் சமாளிக்கும் திறனைக் கொண்டிருப்பார்கள்.
வெற்றிகரமான வியாபாரிகள்
எண் 5-க்கு உரியவர்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு சவாலையும் ஏற்று போராடி வெற்றி பெறுவார்கள். புதிய திட்டங்களின் மூலம் நல்ல லாபத்தைக் காண்பார்கள். வியாபாரத்தில் ரிஸ்க் எடுக்க தயங்கமாட்டார்கள். வேலையை விட வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். முக்கியமாக இவர்களிடம் உள்ள மிகச்சிறந்த குணம், எந்த ஒரு விஷயத்திற்கும் அதிகம் வருத்தப்பட்டு, சோர்ந்து போகமாட்டார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள்.
கையில் பணம் அதிகம் புரளும்
எண் 5-க்கு உரியவர்கள் மிகவும் புத்திசாலிகள் மட்டுமின்றி, பண விஷயத்தில் அதிர்ஷ்டசாலிகளும் கூட. இவர்கள் கையில் வாழ்நாள் முழுவதும் நல்ல செல்வத்துடன் இருப்பார்கள். அதே சமயம் சமூகத்தில் நல்ல மதிப்புடனும், மரியாதையுடனும் இருப்பர். வழக்கமாக இந்த தேதிகளில் பிறந்தவர்கள் வியாபாரிகளாக இருப்பர்.
ஒருவேளை இவர்கள் பணிபுரிந்தால் அந்த அலுவலகத்தில் உயர் பதவியின் இருப்பார்கள். இவர்கள் தங்கள் பேச்சால் பல காரியங்களை சாதிப்பார்கள். நன்கு பேசக்கூடியவர்கள். பேச்சாலேயே பலரை ஈர்ப்பார்கள். இந்த எண்ணிற்கு உரியவர்கள் எந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்பதை நன்கு அறிந்தவர்கள். ஆனால் காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, பல ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications