Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
இந்த தேதிகளில் பிறந்தவங்க பிறவியிலேயே குபேரனின் ஆசியை பெற்றவர்களாம்.. இவங்களுக்கு பண கஷ்டமே ஏற்படாதாம்..
Numerology In Tamil: ஜோதிடத்தைப் போன்றே எண் கணிதத்தைக் கொண்டும் ஒருவரைப் பற்றிய பல விஷங்களை அறிந்து கொள்ள முடியும். அதுவும் ஒருவரது பிறந்த தேதியின் கூட்டுத் தொகையின் ஒற்றை இலக்க எண்ணைக் கொண்டு, அந்நபரின் எதிர்காலம் கணித்து கூறப்படுகிறது.
இந்த 1-9 வரையிலான ஒற்றை இலக்க எண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரக அதிபதிகளைக் கொண்டுள்ளன. அந்த கிரக அதிபதிகளுக்கு உரிய குணங்கள் தான் அந்த எண்ணைச் சேர்ந்தவர்களுக்கும் இருக்கும்.

அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் பிறவியிலேயே செல்வத்தின் தெய்வமான குபேரனின் சிறப்பான ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளனர். இவரது ஆசியைப் பெற்றிருப்பதால், இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு வாழ்நாளில் பண கஷ்டமே இருக்காது மற்றும் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் அனைத்து காரியங்களிலும் வெற்றி காண்பார்கள். இப்போது எந்த தேதிகளில் பிறந்தவர்கள் பிறவியிலேயே குபேரனின் ஆசியைப் பெற்றவர்கள் என்பதைக் காண்போம்.
விதி எண் 1 மற்றும் 7-க்கு உரியவர்கள் அதிர்ஷ்டசாலிகள்
1 முதல் 9 வரையிலான விதி எண்களில் சில விதி எண்களைக் கொண்டவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் மற்றும் பிறவிலேயே லட்சுமி தேவி மற்றும் குபேரனின் ஆசியைப் பெற்றவர்கள். இவர்கள் எந்த குடும்பத்தில் பிறக்கிறார்களோ, அந்த குடும்பத்தினர் இவர்களின் பிறப்புக்கு பிறகு நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள்.
மேலும் இவர்கள் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும், அதில் வெற்றி காண்பார்கள். அத்தகைய விதி எண்கள் தான் 1 மற்றும் 7. இவ்விரு விதி எண்களுக்கு உரியவர்கள் நல்ல அதிர்ஷ்டசாலிகள் மற்றும் வெற்றிகளைக் குவிப்பார்கள் மற்றும் தங்கள் பெற்றோருக்கு அதிர்ஷ்சாலிகளாக இருப்பர்.
விதி எண் 1 மற்றும் 7-க்கு உரியவர்கள் யார்யார்?
எந்த ஒரு மாதத்தின் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. அதேப் போல் 7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த 1 மற்றும் 7-ஐ விதி எண்ணாக கொண்டவர்கள் பிறவியில் இருந்தே நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்வார்கள். இவர்கள் தோல்வி என்பதையே காணமாட்டார்கள்.
விதி எண் 1 குணாதியங்கள்
விதி எண் 1-ஐ சேர்ந்தவர்கள் பிறவியில் இருந்தே மிகவும் புத்திசாலிகள் மற்றும் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். இந்த எண்ணிற்கு உரியவர்கள் தங்கள் குடும்பத்திற்கு ஒரு அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள்.
மேலும் இந்த எண்ணிற்கு உரியவர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகவும் வேகமாக முன்னேற்றத்தைக் காண்பார்கள். எப்போதும் செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்வார்கள். இந்த எண்ணிற்கு உரியவர்கள் பெரும்பாலும் அரசியல், சிவில் சர்வீஸ், போலீஸ் போன்ற துறைகள் மிகச்சிறப்பான தொழிலாக இருக்கும்.
விதி எண் 7 குணாதிசயங்கள்
விதி எண் 7-ஐ சேர்ந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இவர்கள் தங்கள் பிறப்பாக தங்கள் குடும்பத்தை பிரகாசமாக்குவார்கள். இந்த எண்ணிற்கு உரியவர்கள் மிகவும் தைரியசாலிகள், எதைக் கண்டும் அச்சம் கொள்ளமாட்டார்கள் மற்றும் அதிக தன்னம்பிக்கையைக் கொண்டவர்கள்.
இந்த எண்ணிக்கு சொந்தமானவர்கள் பெரும்பாலும் வணிகம் மற்றும் அரசியலில் பிரகாசமாக ஜொலிப்பார்கள். இந்த எண்ணிற்கு உரியவர்களும் குபேரனின் ஆசியை பிறவியில் இருந்தே பெற்றவர்கள் மற்றும் இவர்களுக்கு பண கஷ்டம் என்பதே வாழ்வில் இருக்காது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications