Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்!
இந்த 8 தேதிகளில் பிறந்தவங்க பணத்தை சம்பாதிப்பதில் கில்லாடிகளாம்.. உங்களோட பிறந்த தேதி என்ன?
Numerology And Wealth: நாம் ஒவ்வொருவருமே நல்ல வசதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறோம். அதற்கு பணம் மிகவும் இன்றியமையாதது. அந்த பணத்தை சம்பாதிக்க அல்லும் பகலும் அயராது உழைத்தும் வருகிறோம். அதோடு பணம் அதிகம் சேர வேண்டும் என்பதற்காக பல வழிகளையும் தேடி வருகிறோம். ஆனால் அனைவரிடமும் இப்படி பணம் நிலைத்திருப்பதில்லை.
இந்துக்களின் பண்டைய வேதங்களின் படி, எண்கள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த எண்களைக் கொண்டு கணித்து கூறப்படும் ஒரு வகையான ஜோதிடம் தான் எண் கணிதம் அல்லது நியூமராலஜி.

இந்த நியூமராலஜியில் பிறந்த தேதியைக் கொண்டு கணக்கிட்டு ஒற்றை இலக்க எண்ணாக கொண்டு வரப்பட்ட 1-9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த எண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரக அதிபதிகளைக் கொண்டுள்ளன. உதாரணமாக, ஒருவர் 25 ஆம் தேதி பிறந்திருந்தால், அவரது விதி எண் 2+5=7 ஆகும்.
அந்த வகையில் ஒருவரது பிறந்த தேதி அந்நபரின் நிதி வாழ்க்கை மற்றும் பணத்துடனான அவர்களின் உறவு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி நன்கு அறியலாம். நீங்கள் உங்கள் பிறந்த தேதிப்படி பண விஷயத்தில் எப்படிப்பட்டவராக இருப்பீர்கள் என்பதை அறிய விரும்பினால், தொடர்ந்து படியுங்கள்.
எண் 1
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பிறவியிலேயே நன்கு பணத்தை சம்பாதிக்கும் திறனை கொண்டவர்கள். இவர்களின் வரம்பற்ற படைப்பால் திறன் மற்றும் தைரியம், இவர்களால் நிறைய பணத்தை சம்பாதிக்க வைக்கும். ஆனால் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நல்ல தொடர்ச்சியான வளர்ச்சியைக் காண விரும்பினல், அதிகப்படியான தன்னம்பிக்கை, கோபம் மற்றும் மனக்கிளர்ச்சியைத் தவிர்க்க வேண்டும்.
எண் 2
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நிறைய செல்வத்தை பெற முடியாமல் சிரமப்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது முன்முயற்சியின்மை மற்றும் வலுவான விருப்பம் இல்லாமை தான். இவர்கள் நன்கு திட்டம் தீட்டக்கூடியவர்கள் ஆனால் அவர்களால் அதை சரியாக செயல்படுத்த முடிவதில்லை. எனவே நல்ல வெற்றியைக் காண வேண்டுமானால் சரியாக திட்டம் தீட்டி, அதை நடைமுறைப்படுத்த முயலுங்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நிறைய பணத்தை சம்பாதிக்க திங்கட்கிழமைகளில் விரதம் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
எண் 3
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்திசாலிகள் மற்றும் நன்கு சிந்தித்து செயல்படக்கூடியவர்கள். இதுவே இவர்களின் பலம். ஆனால் இவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நிறைய பணத்தை சம்பாதிக்க வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
எண் 4
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் இதுவே இவர்களின் இலக்குகளை அடைய முக்கிய காரணமாக உள்ளது. இவர்களின் இலக்குகளை அடைவதில் தடையை ஏற்படுத்த யாராலும் முடியாது. ஆனால் அதற்கு இவர்கள் எதிர்மறை எண்ணங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஒரே நாளில் பணக்காரர் ஆக எந்த ஒரு குறுக்குவழியையும் மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும். இவர்கள் நிதி நிலையில் முன்னேற்றத்தை காண விநாயகரை வழிபட அறிவுறுத்தப்படுகிறது.
எண் 5
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் பலம் நல்ல அறிவாற்றல் மற்றும் வணிக புத்திசாலித்தனம் தான். இவர்கள் தனது புத்திசாலித்தனம் மற்றும் இன்ஜினியரிங் துறையில் நல்ல பணத்தை சம்பாதிப்பார்கள். ஆனால் இவர்களின் ஒரே பலவீனம் அமைதியின்மை தான். தொழிலில் நல்ல பணத்தை சம்பாதிக்க ஒவ்வொரு புதன்கிழமையும் பசுவிற்கு புல் மற்றும் வெல்லத்தை கொடுங்கள்.
எண் 6
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மற்றும் நிறைய செல்வ வளத்தைக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதிக பணத்தை செலவழிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆடம்பரமான வாழ்க்கைகாக நிறைய பணத்தை செலவழிப்பீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு இவர்கள் வியாழக்கிழமைகளில் சிறிது இனிப்புக்களை சாப்பிட வேண்டும்.
எண் 7
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணத்தை அதிகம் சம்பாதிக்க முதலில் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அதோடு, சிறிது நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். இவர்களிடம் உள்ள ஒரு பெரிய பலம், பெரிய கனவை காண்பது தான். அந்த கனவை அடையவும், நிறைய பணத்தை சம்பாதிக்கவும், இவர்கள் பயத்தை கைவிட வேண்டும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றலைத் தடுக்க கருப்பு நாய்க்கு பிஸ்கட்/ரொட்டியைக் கொடுங்கள்.
எண் 8
8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் நிதி நிலையானது வாழ்க்கை நோக்கிய அவர்களின் அணுகுமுறையைப் பொறுத்தது. இவர்கள் நம்பிக்கையுடன் இருந்தால், வெற்றியுடன் செல்வத்தையும் பெறுவார்கள். ஆரம்பத்தில் இவர்கள் சமூகத்தில் தங்களுக்கான இடத்தை உருவாக்க போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இவர்கள் எதிர்மறையாக சிந்திப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த ஒரு விஷயம் இவர்களின் நிதி வாழ்க்கையின் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இவர்கள் தங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த அரச மரத்தடியில் நெய் விளக்கு ஏற்ற அறிவுறுத்தப்படுகிறது.
எண் 9
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணத்தை சம்பாதிக்கும் திறனைக் கொண்டவர்கள். ஆனால் அதற்கு அவர்கள் நன்கு திட்டமிட வேண்டும் மற்றும் தங்களின் யோசனைகளை பொறுமையாக செயல்படுத்த வேண்டும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் நிதி நிலையில் முன்னேற்றத்தைக் காண ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் அனுமன் சாலிசாவை பாராயணம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











