Latest Updates
-
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!
நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு படி 2026-ல் திவாலாக போகும் நாடுகளும், போரில் சிக்கப் போகும் நாடுகளும் என்னென்ன தெரியுமா?
2026 ஆம் ஆண்டு பிறந்து கிட்டதட்ட 4 மாதங்கள் முடிந்து விட்டது.இந்த வருடம் தொடங்கிய காலம் முதலே உலகம் பதட்டமான சூழலை எதிர்கொண்டு வருகிறது. 2026-ஆம் ஆண்டிற்கான தீர்க்கதரிசனங்கள் குறித்த விவாதங்கள் உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளன. இந்த சூழலில், புகழ்பெற்ற பிரெஞ்சு தீர்க்கதரிசியான நாஸ்ட்ராடாமஸ் வெளியிட்ட கணிப்புகள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.

ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா போர், பணவீக்கம் மற்றும் விண்ணைத் தொடும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு போன்ற சவால்களை உலகம் தொடர்ந்து எதிர்கொண்டு வரும் சூழலில், நாஸ்ட்ராடாமஸின் 500 ஆண்டுகள் பழமையான இந்த கணிப்புகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன. நாஸ்ட்ராடாமஸின் மற்ற கணிப்புகளைப் போல இந்த கணிப்புகளும் உண்மையானால், உலகம் ஒரு பெரும் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். 2026-ஆம் ஆண்டின் மீதமுள்ள நாட்களில் உலகம் சந்திக்கப்போகும் அழிவுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
நாஸ்ட்ராடாமஸின் 2026 பற்றிய கணிப்புகள்
நாஸ்ட்ராடாமஸின் கணிப்பின்படி, 2026-ஆம் ஆண்டின் மத்தியில் மூன்றாம் உலகப் போர் தொடங்கக்கூடும்; இது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். மதம் மற்றும் தேசியத்தின் பெயரால் மக்கள் ஒருவரையொருவர் கொன்று குவிப்பார்கள். துரதிர்ஷ்டவமாக, உலகின் மத்திய மற்றும் கிழக்கு நாடுகளில் இத்தகைய சூழல் ஏற்கனவே உருவாகியுள்ளது.
கடற்படை போர்
2026-ஆம் ஆண்டில், ஒரு பெரும் கடற்போர் உலகையே உலுக்கும் என்று அவரது கணிப்புகள் கூறியுள்ளன. நாஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி, மிக பிரம்மாண்டமான ஒரு கப்பல் கடலில் மூழ்கக்கூடும் அல்லது ஒரு கடற்போர் வெடிக்கக்கூடும். ஒரு நாட்டின் தவறான முடிவு, கடல்சார் பதற்றங்களை தீவிரப்படுத்தி, அது வல்லரசு நாடுகளுக்கு இடையில் நேரடி மோதலை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாஸ்ட்ராடாமஸின் குறிப்புகளின்படி, ஒரு கப்பல் கடலில் மூழ்கும் அந்த நாளில், கடலின் வலிமை உலக அரசியலையே மாற்றியமைக்கும்.
பொருளாதார நெருக்கடி
2026-ஆம் ஆண்டிற்கான நாஸ்ட்ராடாமஸின் அடுத்த கணிப்பு, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற முக்கிய உலக வல்லரசுகள் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கக்கூடும் என்றும், இது மிகப்பெரிய போராட்டங்களுக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிடுகிறது. இந்த நாடுகள் கடுமையான பணவீக்கத்தையும் எதிர்கொள்ள நேரிடும், மேலும், இந்த நெருக்கடியின் விளைவாகப் பல உலகத் தலைவர்கள் வீழ்ச்சியடைவர்.
இயற்கைப் பேரழிவுகள்
நாஸ்ட்ராடாமஸின் கணிப்பின்படி, 2026-ஆம் ஆண்டில் ஏற்படும் கடும் வெப்பம் பல இடங்களை பாலைவனங்களாக மாற்றக்கூடும். இதற்குப் பிறகு, திடீரெனப் பெய்யும் கனமழையானது பரவலான வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும். அதீத மழைப்பொழிவு, நீர்மட்ட உயர்வு மற்றும் பேரழிவுமிக்க வெள்ளங்கள் ஆகியவற்றின் காரணமாகச் சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் பெரும் சேதம் விளையக்கூடிய, ஒரு 'பேரழிவு ஆண்டாகவும்' இந்த ஆண்டு விவரிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதத் தாக்குதல்
நாஸ்ட்ராடாமஸின் மற்றொரு கணிப்பு, 2026-ஆம் ஆண்டில் நிகழக்கூடிய ஓர் அணு ஆயுதத் தாக்குதலையும், விண்வெளித் திட்டங்களின் வீழ்ச்சியையும் சுட்டிக்காட்டுகிறது. செவ்வாய் கிரகத்தின் மீது இருள் சூழ்ந்துகொள்ளும் என்றும், ஒரு வல்லரசு நாடு அணு ஆயுதத் தாக்குதலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் என்றும் அந்தக் கணிப்பு கூறுகிறது.
கோதுமை மற்றும் தானியங்களின் விலையேற்றம்
நாஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனங்களின் படி, உலகின் பல நாடுகளில் கோதுமை மற்றும் பிற தானியங்களின் விலை உச்சத்தைத் தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டில், கோதுமை விலையானது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியது, இது உலகம் முழுவதையும், குறிப்பாக வளரும் நாடுகளை பாதித்தது. தற்போது, 2022-இல் ஏற்பட்ட இந்தத் தானிய விலையேற்றத்தை, நாஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனத்துடன் சமூக ஊடகங்களில் உள்ள மக்கள் தொடர்புபடுத்திப் பேசி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications

