Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
வருகிற 2025-ல் கடனில் இருந்து முழுமையா விடுபடணுமா? இந்த வாஸ்து டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க...
New Year 2025 Vastu Tips In Tamil: சந்தோஷமான வாழ்க்கை என்பது கடனில்லாத வாழ்க்கை தான். ஆனால் நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையினால் கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவோம். சில சமயங்களில் சூழ்நிலைகளால் அதிகமாக கடனை வாங்கிவிட்டு, அதை அடைக்க முடியாமல் சிரமப்படுவோம். நீங்களும் அப்படி கடன் வாங்கி அதை அடைக்க முயற்சித்தும், அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அதற்கு வாஸ்து குறைபாடுகள் காரணமாக இருக்கலாம்.
வாஸ்துப்படி, ஒருவரது நிதி நிலை சிறப்பாக இருக்க வேண்டுமானால், குடியிருக்கும் வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் வாஸ்துப்படி இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், அந்த வீட்டில் பண பிரச்சனை இருப்பதோடு, அந்த வீட்டுக்காரர் கடனாளியாக வாழ்க்கையை கழிக்க வேண்டியிருக்கும். ஆனால் வருகிற 2025 புத்தாண்டில் உங்கள் கடன் பிரச்சனை தீர வேண்டுமானால், ஒருசில வாஸ்து பரிகாரங்களை செய்யுங்கள். இதனால் 2025-ல் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், செழிப்பாகவும் இருக்கும்.

1. பணம் வைக்கும் திசை
வாஸ்துப்படி, வீட்டில் பணம் சேமித்து வைக்க சிறந்த திசை வடக்கு திசை தான். இந்த திசையில் அலமாரியை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த வடக்கு திசையில் தான் குபேரர் மற்றும் லட்சுமி தேவி குடியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த திசையில் பணத்தை வைப்பது பண பிரச்சனைக் குறைப்பதோடு, கடன் தொல்லையில் இருந்தும் விடுவிக்கும்.
2. லட்சுமி மற்றும் குபேரர் வழிபாடு
வாஸ்துப்படி, வடக்குத் திசையில் லட்சுமி தேவி மற்றும் குபேரர் சிலை அல்லது படத்தை வைத்து வழிபட்டு வந்தால், நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். அதுவும் காலையில் மற்றும் மாலையில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்யும் போது வாழ்க்கையில் உள்ள பணம் மற்றும் பிற பிரச்சனைகள் நீங்கி, வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முக்கியமாக இந்த வழிபாட்டினால் நல்ல நிதி ஆதாயம் கிடைத்து, குடும்பத்தில் அமைதி பெருகும்.
3. அரச மர வழிபாடு
வாஸ்துப்படி, சனிக்கிழமை முக்கியத்துவம் வாய்ந்தது. அதுவும் இந்நாளில் காலையில் குளித்துவிட்டு அரச மரத்தடியில் தீபம் ஏற்றி, வலம் வந்து வணங்கினால், கடன் இருந்து விடுபடலாம். ஏனெனில் அரச மரத்தில் விஷ்ணு பகவான் வசிப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது. எனவே இந்த மரத்தை வணங்கி வலம் வந்தால், வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.
4. செவ்வாய்கிழமை கடனை அடைக்கவும்
சாஸ்திரங்களின் படி, ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தால், அந்த கடனை செவ்வாய்க்கிழமைகளில் திருப்பி செலுத்தினால், கடன் தொல்லையில் இருந்து விரைவில் விடுபடலாம். அதோடு இந்நாளில் கடனை அடைக்கும் போது, கடன் சுமை குறைந்து, நிதி நிலையும் மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications