Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
கிரக தோஷங்கள் நீங்க இந்த வழிபாட்டு தளங்களுக்கு சென்று வாருங்கள்..!
ஒரு மனிதனின் வாழ்வை நவகிரகங்கள்தான் தீர்மானிக்கிறது. நன்மைகள் மற்றும் தீமைகள் என்பது இந்த நவகிரகங்களின் அமைப்பால்தான் நடக்கின்றன. ஒருவர் போன பிறவியில் செய்த புண்ணியம்தான் இந்த பிறவியிலும் நன்மைகளாக அமைகிறது. அதேபோன்று போன பிறவியில் செய்த பாவங்கள்தான் இந்த பிறவியில் தோஷங்களாக வருகிறது என்பதை கேள்விபட்டிருக்கிறோம்.
ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு சிறப்பு உடையது. ஜோதிடத்தில், நவ கிரகங்களின் பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ஒரு ஜாதகத்தில் கிரகங்களின் தாக்கத்தை வைத்தே அவர்களின் வாழ்க்கை கணிக்கப்படுகிறது. கிரகங்கள் செயலிழந்தால் தோஷங்கள் வரும் என கூறப்படுகிறது. கிரக தோஷங்களை நீக்கும் வழிபாட்டுத் தலங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1. சூரியன்
கிரகம்: சூரியன்.
ஸ்தலம்: சூரியனார் கோவில்.
நிறம்: சிவப்பு.
தானியம்: கோதுமை.
வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர்.
மலர்: செந்தாமரை.
உலோகம்: தாமிரம்.
நாள்: ஞாயிறு.
ராசிகற்கள்: மாணிக்கம்.
பலன்கள்: காரிய சித்தி.
சூரியனார் கோவில்
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை அருகே அமைந்துள்ளது. கும்பகோணத்துக்கு கிழக்கே கும்பகோணம் - பூம்புகார் சாலையில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது. ஆடுதுறை இரயில் நிலையத்தில் இறங்கி அணைக்கரை செல்லும் பேருந்தில் ஏறி இக்கோவிலை அடையலாம்.
முதலாவதாக, நவ கிரகத்தில் முதல் கிரகமாக இருக்கும், சூரிய பகவானை ஞாயிற்றுக் கிழமை வழிபட்டு வருபவர்களுக்கு வாழ்க்கையில் எல்லா வளமும், நலமும் கிடைக்கும். தினசரி சூரிய நமஸ்காரம் செய்து வருபவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வி என்பதே ஏற்படாது. சீரான சிந்தனையும் தெளிவான முடிவு எடுக்கும் திறன் வளர கூடிய அற்புத ஆற்றலைப் பெறுவார்கள்.
2. சந்திரன்
கிரகம்: சந்திரன்
ஸ்தலம்: திங்களூர்
நிறம்: வெள்ளை
தானியம்: அரிசி
வாகனம்: வெள்ளை குதிரை
மலர்: வெள்ளரளி
உலோகம்: ஈயம்
நாள்: திங்கள்
ராசிகற்கள்: முத்து
பலன்கள்: தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்.
திங்களூர் சந்திரன் கோவில்
அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் சந்திர தோஷ பரிகார ஸ்தலம் திங்களூரில் அமைந்துள்ளது. ஜாதக ரீதியாகத் தோஷம் மற்றும் சந்திரனால் ஏற்படும் இடர்பாடுகளை நீக்குகின்ற திருத்தலங்களில் ஒன்று.
இந்த சந்திர பகவானை திங்கட்கிழமை தோறும் வழிபட்டு வருபவர்களுக்கு எல்லா புகழும் பெறக்கூடிய வாய்ப்புகள் கிட்டும். கோவிலுக்கு சென்றால் திங்கட் கிழமையில் நவகிரகத்தில் சந்திரனுக்கு உரிய வஸ்திரத்தை சாற்றி சந்திர பகவான் மந்திரங்களை உச்சரித்து அவரை வழிபட்டு வந்தால் மனதில் இருக்கும் சஞ்சலங்கள் நீங்கி மனம் ஒருநிலைப்படும்.
3.குரு
கிரகம்: குரு.
ஸ்தலம்: ஆலங்குடி.
நிறம்: மஞ்சள்.
தானியம்: கொண்டை கடலை.
வாகனம்: அன்னம்.
மலர்: வெண்முல்லை.
உலோகம்: பொன்.
நாள்: வியாழன்.
ராசிகற்கள்: புஷ்பராகம்.
பலன்கள்: சகல சம்பந்துக்கள், மற்றும் வித்தைகள் தேர்ச்சி.
குரு பகவான் கோயில் ஆலங்குடி
நவகிரக தலங்களில் குரு பகவான், பரிகாரத் தலமாக விளங்குவது திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் கோவில். இந்த தலம் குருவின் தோஷத்தை மட்டுமின்றி, அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கக் கூடிய தலமாக விளங்குவது இதன் தனிச்சிறப்பாகும். இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற தென்கரை தலங்களில் 98-வது தலம்.
செவ்வாய் பகவானை வழிபட்டு வருபவர்களுக்கு தைரியம் அதிகரிக்கும். நம்மை சுற்றி இருக்கும் எத்தகைய பகைவர்களையும் எதிர்கொள்ளும் தைரியம் கிடைக்கும். திருமண தடைகள் அகலவும் சொந்த வீடு அமையவும் வழிபட வேண்டிய கிரகம் செவ்வாய் பகவான் ஆகும்.
4. கிரகம்: புதன்
தலம்: திருவெண்காடு.
நிறம்: பச்சை.
தானியம்: பச்சைபயிர்.
வாகனம்: குதிரை.
மலர்: வெண்காந்தல்.
உலோகம்: பித்தளை.
நாள்: புதன்.
ராசிகற்கள்: மகரந்தம்.
பலன்கள்: சகல சாஸ்திரம் மற்றும் ஞானம்.
திருவெண்காடு புதன் பகவான் கோயில்
சுவேதாரண்யேசுவரர் கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இது புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது.
புதன் பகவானை வழிபட்டு வந்தால் நல்ல அறிவாற்றலும் பெருகும். புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி வழிபட்டு வந்தால் படித்தது மறந்து போகாது. அது மட்டுமின்றி அவர்களுக்கு படிக்கும் பொழுது கவனம் சிதறாமல் மனம் ஒருமுகப்படும்.
5. வெள்ளி
கிரகம்: வெள்ளி
ஸ்தலம்: கஞ்சனூர்.
நிறம்: வெள்ளை.
தானியம்: மொச்சை.
வாகனம்: கருடன்.
மலர்: வெண்தாமரை.
உலோகம்: வெள்ளி.
நாள்: வெள்ளி.
ராசிகற்கள்: வைரம்.
பலன்கள்: விவாகம் மற்றும் பிராப்தம் செளபாக்கியம் மலட்டுத்தன்மை நீங்கும்.
சுக்கிர பகவான் கோயில்
கும்பகோணம் அருகே அமைந்துள்ளது சுக்கிர பகவானின் தலமான் கஞ்சனூர் கிராமம். புனிதத் தலங்களில் மிக முக்கியமாகக் கருதப்படுவது இந்த கோயிலும் ஒன்று இங்கே பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்து தரிசனம் செய்கிறார்கள். கஞ்சம் என்றால் தாமரையில் இருப்பவன் என்று பொருள். அதாவது பிரம்ம தேவன் வழிபட்ட தலமாதலால் இத்தலத்திற்கு கஞ்சனூர் என்று பெயர் ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவானை வழிபட்டு வர எல்லா வளமும், நலமும் உண்டாகும். திருமண யோகம் கிடைக்க, சுக்கிர பகவானை வழிபட வேண்டும். குழந்தை பாக்கியம், கடன் தொல்லை நீங்க, வீடு, மனை, சொத்துக்கள் போன்ற சுகபோக வாழ்க்கைக்கு தேவையான அத்தனை சம்பத்துக்களையும் பெறுவதற்கு சுக்கிர வழிபாடு செய்து வருவது நல்லது.
6. கேது
கிரகம்: கேது
ஸ்தலம்: கீழ்பெரும்பள்ளம்.
நிறம்: பல நிறம்.
தானியம்: கொள்ளு.
வாகனம்: சிங்கம்.
மலர்: செவ்வள்ளி.
உலோகம்: கருங்கல்.
நாள்: ஞாயிறு.
ராசிகற்கள்: வைடூரியம்.
பலன்கள்: வறுமை, வியாதிகள் நீங்கும்.
கீழ்பெரும்பள்ளம் கேது பகவான் கோயில்
நவக்கிரகங்களில் ஒருவரான கேது பகவான் அனுக்ரஹ மூர்த்தியாக காட்சியளித்து, கேது தோஷ நிவர்த்தி அளிக்கும் தலமாக விளங்குகிறது மயிலாடுதுறை மாவட்டம், கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள அருள்மிகு நாகநாதர் கோயில். மயிலாடுதுறை மாவட்டத்தில் காலப் பழமையும், சாலப் பெருமைகளும் கொண்டதாக உள்ள ஆன்மிகத் தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது, கீழப்பெரும்பள்ளம் அருள்மிகு நாகநாதர் கோயில். இங்கு இறைவன் ஸ்ரீ நாகநாதசுவாமி என்ற திருப்பெயருடன் சிவலிங்கத் திருமேனியாக காட்சியளிக்கிறார். அன்னை ஸ்ரீ சௌந்தரநாயகி என்ற திருப்பெயருடன் அருளுகிறார்.
சனி நாளில் சனி பகவான் வழிபாடு செய்துவர ஆயுள் பலம் பெருகும். நீண்ட ஆயுளுக்கு சனிக்கிழமையில் சனிபகவான் வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். அடுத்து, நாம் செய்யும் பாவத்திற்கு ஏற்ப தண்டனையையும், புண்ணியத்திற்கு ஏற்ப அதிர்ஷ்டத்தையும் கொடுக்கக்கூடிய சனிபகவான் வழிபாடு மேற்கொள்வது நலம் தரும்.
7. சனி
கிரகம்: சனி
ஸ்தலம்: திருநள்ளாறு.
நிறம்: கருப்பு.
தானியம்: எள்.
வாகனம்: காகம்.
மலர்: கருங்குவளை.
உலோகம்: இரும்பு.
நாள்: சனி.
ராசிகற்கள்: நீலம்.
பலன்கள்: வியாதிகள், பயம், மற்றும் தீராத கடன்கள் நீங்கும்.
திருநள்ளாறு சனி பகவான் கோயில்
இத்தலத்தில் சனீசுவரன் இறைவன் வணங்கி பேறு பெற்றார். அதனால் இத்தலத்தில் உள்ள சனீசுவரன் புகழ்பெற்று விளங்குகிறார். இத்தல சனீசுவரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட பல சனிகளின் பிரட்சனை தீரும். நள தீர்த்தத்தில் நீராடி சனீசுவரை தரிசனம் செய்து, இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர் வழிபட்டு பேறு பெறுகின்றனர்.
8.செவ்வாய்
கிரகம்: செவ்வாய்.
ஸ்தலம்: வைதீஸ்வரன் கோவில்.
நிறம்: சிவப்பு.
தானியம்: துவரை.
வாகனம்: ஆட்டுக்கடா.
மலர்: செண்பகம்.
உலோகம்: செம்பு.
நாள்: செவ்வாய்.
ராசிகற்கள்: பவழம்.
பலன்கள்: பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம்.
வைதீஸ்வரன் கோவில்
நாகை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள செவ்வாய் ஸ்தலமான வைத்தியநாதர் சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவன் இந்த ஸ்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். 5 கோபுரங்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது ஸ்தலத்தின் சிறப்பு.
செவ்வாய் பகவானை வழிபட்டு வருபவர்களுக்கு தைரியம் அதிகரிக்கும். நம்மை சுற்றி இருக்கும் எத்தகைய பகைவர்களையும் எதிர்கொள்ளும் தைரியம் கிடைக்கும்.திருமண தடைகள் அகலவும் சொந்த வீடு அமையவும் வழிபட வேண்டிய கிரகம் செவ்வாய் பகவான் ஆகும்.
9. ராகு
கிரகம்: ராகு
ஸ்தலம்: திருநாகேஸ்வரம்.
நிறம்: கரு நிறம்.
தானியம்: உளுந்து.
வாகனம்: ஆடு.
மலர்: மந்தாரை.
உலோகம்: தாமிரம் மற்றும் கருங்கல்.
நாள்: ஞாயிறு.
ராசிகற்கள்: கோமேதகம்.
பலன்கள்: எந்த காரியத்திலும் ஜெயம் அடைதல்.
ராகு கோயில் திருநாகேஸ்வரம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருநாகேஸ்வரம் ஊரில் அமைந்துள்ள நாகநாத சுவாமி கோவில் நவகிரகங்களில் ராகு பரிகார தலமாக விளங்குகிறது. பாடல் பெற்ற சிவத்தலங்களில் இக்கோவிலும் ஒன்று. மனித தலையும் பாம்பு உடலும் கொண்டவர் ராகு பகவான்.
செவ்வாய் பகவானை வழிபட்டு வருபவர்களுக்கு தைரியம் அதிகரிக்கும். நம்மை சுற்றி இருக்கும் எத்தகைய பகைவர்களையும் எதிர்கொள்ளும் தைரியம் கிடைக்கும்.திருமண தடைகள் அகலவும் சொந்த வீடு அமையவும் வழிபட வேண்டிய கிரகம் செவ்வாய் பகவான் ஆகும்.



Click it and Unblock the Notifications











