Latest Updates
-
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
இந்தியாவின் லண்டன் என்று அழைக்கப்படும் அழகிய நகரம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோங்குரா முட்டை குழம்பு ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - ஹோடடலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
சன்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப டென்ஷன் நிறைந்த நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (02 August 2026-08 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது!
15000 கோடி வீடு மட்டுமின்றி முகேஷ் அம்பானி குடும்பத்திடம் வேறு என்னென்ன ஆடம்பர சொத்துக்கள் இருக்கு தெரியுமா?
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் யாரென்றால் கண்ணை மூடிக்கொண்டு அனைவரும் முகேஷ் அம்பானி என்று கூறிவிடுவார்கள். முகேஷ் அம்பானி இந்தியா மட்டுமின்றி உலகளவில் மிகவும் புகழ்பெற்ற செல்வந்தர்களில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற அவரது இளைய மகனான அனந்த் அம்பானியின் பிரமாண்ட திருமணம் அவரை உலகம் முழுவதும் பிரபலமாக்கியது.
அவரது தலைமையின் கீழ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் புதிய உயரங்களைத் தொட்டது. முகேஷ் அம்பானியின் குடும்பம் மும்பையில் உள்ள ரூ.15,000 கோடி மதிப்புள்ள ஆன்டிலியா என்ற ஆடம்பரமான வீட்டில் வசிக்கிறது. இது உலகின் இரண்டாவது மிகவும் விலையுயர்ந்த வீடாகும். இந்த வீடு மும்பை நகரத்தின் மிகவும் ஆடம்பரமான இடங்களில் ஒன்றில் அமைந்துள்ளது.

அம்பானி குடும்பம் பெரும்பாலும் தங்கள் ஆடம்பரமான வீட்டிற்காகவும், அதிலுள்ள வசதிகளுக்காகவும் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கிறது, ஆனால் அவர்களின் ஆடம்பர வாழ்க்கை ஆன்டிலியாவையும் தாண்டி நீள்கிறது. அம்பானி உலகம் முழுவதும் பல ஆடம்பரமான சொத்துக்களைக் கொண்ண்டுள்ளனர், அவை அவர்களின் இணையற்ற வெற்றியைப் பிரதிபலிக்கின்றன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மும்பையின் ஆன்டிலியா - ரூ.15,000 கோடி
மும்பையின் அல்டமவுண்ட் சாலையில் அமைந்துள்ள ஆன்டிலியா, 568 அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கிறது. 27 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தில் ஒரு கோவில், விருந்தினர் அறைகள், ஒரு ஐஸ்கிரீம் பார்லர் மற்றும் ஒரு தனியார் திரையரங்கம் உள்ளன. இது மும்பையின் அல்டமவுண்ட் சாலையில் அமைந்துள்ளது. இந்தக் கட்டிடத்தின் ஆறு தளங்கள் அவர்களின் கார் சேகரிப்புக்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
Abode, Mumbai - ரூ.5000 கோடி
அனில் அம்பானியின் அபோட் என்ற வீடு மும்பையின் பாலி ஹில்லில் அமைந்துள்ளது. 17 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடம் 16,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இது ஒரு ஹெலிபேட் மற்றும் சொகுசு கார்கள் நிறைந்த ஒரு கேரேஜைக் கொண்டுள்ளது.
மாண்டரின் ஓரியண்டல், நியூயார்க் - ரூ.2000 கோடி
மாண்டரின் ஓரியண்டல், மன்ஹாட்டனின் அழகிய காட்சிகளைக் கொண்டுள்ளது. அம்பானி ஹோட்டலின் தாய் நிறுவனத்தின் 73.4 சதவீத பங்குகளை வாங்கினார். இந்த ஹோட்டலில் 248 அறைகள், ஒரு ஓரியண்டல் ஸ்பா மற்றும் ஒரு உடற்பயிற்சி மையம் உள்ளன.
துபாயின் பாம் ஜுமேராவில் ஒரு ஆடம்பரமான வில்லா - ரூ.640 கோடி
துபாயின் பாம் ஜுமேராவில் உள்ள அனந்த் அம்பானியின் வீட்டில், 10 படுக்கையறைகள், உட்புற மற்றும் வெளிப்புற நீச்சல் குளங்கள், ஏழு ஸ்பா, முழுமையாக பொருத்தப்பட்ட பார் மற்றும் 70 மீட்டர் நீளமுள்ள ஒரு தனியார் கடற்கரை என ஆடம்பரங்கள் கொட்டி கிடக்கிறது. அவர்களின் இந்த சொத்து 2022 இல் ஒரு சாதனையை படைத்தது, இது உலக அளவில் அம்பானி குடும்பத்தின் ஆடம்பரமான வாழ்க்கை மீதான ஆர்வத்திற்கு உதாரணமாக இருக்கிறது.
லண்டன், ஸ்டோக் ஹவுஸ் - ரூ.592 கோடி
லண்டனின் பக்கிங்ஹாம்ஷையரில் அமைந்துள்ள ஸ்டோக் ஹவுஸ் அம்பானி குடும்பத்திடம் இருக்கும் ஒரு ஆடம்பரமான பாரம்பரிய சொத்தாகும். அம்பானி குடும்பத்தினர் இதை 2021 இல் ரூ.592 கோடிக்கு வாங்கினர்.
Sea Wind, Mumbai
கஃபே பரேடில் அமைந்துள்ள சீ விண்ட், 17 மாடி கட்டிடமாகும், இது ஒரு காலத்தில் அம்பானி குடும்பத்தினரின் தங்குமிடமாக இருந்தது, ஒவ்வொரு சகோதரரும் வெவ்வேறு மாடியில் வசித்து வந்தார். தற்போது, அனில் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த தளங்களில் இரண்டில் வசித்து வருகின்றனர், மேலும் இந்த இடம் 2022 இல் அன்மோல் அம்பானியின் திருமணம் உட்பட குறிப்பிடத்தக்க குடும்ப நிகழ்வுகளின் தளமாக இருந்தது.



Click it and Unblock the Notifications
