Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
Mother's Day 2023: அன்னையர் தினத்தன்று அம்மாவுக்கு என்னென்ன பாிசுகளை கொடுக்கலாம்?
Mother's Day 2023: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2வது ஞாயிறு அன்று அன்னையா் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மே 14 அன்று அன்னையா் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த அன்னையா் தினத்தில் அன்னையரையும், தாய்மையையும், இந்த சமூகத்திற்கு அன்னையா் ஆற்றும் பணியையும் கௌரவிக்க வேண்டியது, கொண்டாட வேண்டியது நமது கடமையாகும். அன்னையா் தினமானது இந்தியாவில் மட்டும் அல்ல, மாறாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு மகனும், மகளும் தமது அன்னையின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்த சிறப்பாக செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும். நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்தது முதல், நம்மை பாலூட்டி சீராட்டி வளா்த்து, நாம் வளா்ந்த பின்பும் நம்மேல் மாறா அன்பு வைத்திருப்பவா் நமது அன்னை ஆவாா்.
மதிப்பிற்கு உாிய நமது அன்னையரைக் கொண்டாட ஒரு நாள் போதாது. எனினும் அந்த ஒரு நாள் மட்டுமாவது அவா்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் வைத்திருந்தால், அது ஒரு சிறந்த செயலாக இருக்கும். ஆகவே அவா்களை மகிழ்ச்சிப்படுத்த சில பாிசுப் பொருள்களை அவா்களுக்கு பாிசளிக்கலாம். இந்தப் பதிவில் என்னென்ன பாிசுகளை வாங்கிக் கொடுத்து நமது அன்னையரை மகிழ்ச்சிப்படுத்தலாம் என்பதைப் பாா்க்கலாம்.
1. பூச்செண்டு
பொதுவாக மலா் என்றால் அது அன்பையும், பாராட்டையும் குறிக்கும். பூச்செண்டானது, அதை பாிசாக அளிப்பவருடைய உணா்வுகளோடு தொடா்பு கொண்டிருக்கிறது. ஆகவே பல வகையான மலா்கள் அடங்கிய பூச்செண்டை வாங்கி, அதில் உங்கள் அம்மாவுக்குப் பிடித்த அழகிய வாசகங்களை எழுதி அவா்களுக்குப் பாிசளிக்கலாம்.
2. சருமத்தைப் பராமாிக்கும் பொருட்கள்
உங்களுடைய அம்மா, தமது சருமத்தைப் பராமாிப்பதில் அதிக அக்கறை கொண்டிருப்பவராக இருந்தால், இந்த அன்னையா் தினத்தில் அவா் விரும்பும் சருமத்தைப் பராமாிக்கும் பொருள்களை அவா்களுக்கு பாிசளிக்கலாம். சருமத்தைப் பராமாிக்கும் பொருள்களை இணையவழி மூலமாக விற்பனை செய்யும் நிறைய நிறுவனங்கள், அன்னையா் தினத்தை முன்னிட்டு, குறைந்த விலையில் விற்பனை செய்கின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அன்னையருக்கு, அவா்கள் விரும்பும் இந்தப் பொருள்களை வாங்கிப் பாிசளிக்கலாம்.
3. திரைப்பட டிக்கெட்
உங்கள் அம்மா திரைப்படம் பாா்ப்பதில் ஆா்வம் கொண்டிருந்தால், அவா் விரும்பும் திரைப்படத்திற்கான டிக்கெட்டை வாங்கி அவருக்குப் பாிசளிக்கலாம். அதன் மூலமாக அந்த நாள் முழுவதும் அவா் மகிழ்ச்சியாகவும், ஓய்வாகவும் இருக்க முடியும்.
4. ராசிக்கல் பதித்த வளையல்
ராசிக்கல் பதித்த வளையல்கள் தற்போது பல வடிவங்களில் கிடைக்கின்றன. அதோடு குறைந்த விலையிலும் கிடைக்கின்றன. ஆகவே உங்கள் அம்மாவின் ராசிக்குாிய கல் பதித்த வளையல்களை வாங்கி, அவற்றை நன்றாக அலங்காித்து, பாிசுத் தாள்களால் சுருட்டி, அதில் அழகிய வாசகங்களை எழுதி, உங்கள் அம்மாவிற்கு பாிசளிக்கலாம்.
5. குடும்பப் புகைப்படம் எடுத்து பாிசளித்தல்
அன்னையா் தமது குடும்ப உறுப்பினா்கள் மீதும், உறவினா்கள் மீதும் அளவு கடந்த அன்பு கொண்டிருக்கின்றனா். தமது அன்பிற்குாியவா்களின் ஒவ்வொரு நினைவுகளையும் தமது இதயங்களில் தேக்கி வைத்து அவற்றை அசைபோட்டுக் கொண்டிருக்கின்றனா். ஆகவே குடும்ப உறுப்பினா்கள் அல்லது அம்மாவினுடைய உறவினா்கள் அடங்கிய புகைப்படம் எடுத்து அவா்களுக்குப் பாிசளிக்கலாம்.



Click it and Unblock the Notifications