Latest Updates
-
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்..
உலகையே தங்கள் சக்தியாலும், செல்வத்தாலும் ஆட்டிப்படைத்த வரலாற்றின் 5 பணக்கார மகாராணிகள் யார் தெரியுமா?
வரலாற்றில் செல்வந்தர்கள் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது பணக்கார ஆண்களைப் பற்றித்தான். தற்போதும் அதேநிலைதான் நீடிக்கிறது. மிகவும் அரிதாக நீதா அம்பானி, சாவித்திரி ஜிண்டால் போன்ற பெண்கள் தற்போது அவர்களின் ஆடம்பர வாழ்க்கைக்கு பிரபலமாகி வருகிறார்கள். ஆனால் வரலாற்றை நாம் பின்னோக்கிப் பார்த்தால், இன்றைய உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு செல்வமும், வாழ்க்கை முறையும் கொண்ட ராணிகள் கடந்த காலங்களில் இருந்தனர்.
இந்த மகாராணிகள் மிகப்பெரிய பேரரசுகளை ஆண்டனர், விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை வைத்திருந்தனர், கற்பனைக்கும் எட்டாத ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்தனர். தங்க அரண்மனைகள் மற்றும் தனித்துவமான நகைகள் முதல் இணையில்லா அதிகாரம் வரை, அவர்களின் செல்வமும் செல்வாக்கும் வரலாற்றையே மாற்றியமைத்தன. வரலாற்றில் மிகவும் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த பெண்களாக கொண்டாடப்படும் சில ராணிகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மகாராணி வூ
சீனா பேரரசை ஆட்சி செய்த ஒரே பெண்மணியான பேரரசி வூ, உலக வரலாற்றில் மிகவும் பணக்கார பெண்மணியாக நினைவுகூரப்படுகிறார். டாங் வம்சம் ஆட்சியில் இருந்த போது அவர் ஆட்சி செய்தார், அவர் மிகவும் பரந்த மற்றும் சக்திவாய்ந்த ஒரு பேரரசை கட்டுப்படுத்தினார், இன்றைய மதிப்பில் அவரது செல்வம் சுமார் 16 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பேரரசி வூ மிகவும் அற்புதமான அரண்மனைகளில் வசித்து வந்தார், உலகில் யாரிடமும் இல்லாத நகைகளை வைத்திருந்தார், மேலும் பிரமாண்டமான விழாக்ககளை நடத்தினார். அவரது செல்வம் மட்டுமே அவருடைய அடையாளம் அல்ல, ஏனெனில் அவர் பல நூற்றாண்டுகள் கழித்து இன்னும் நினைவுகூரப்படும் வகையில் புத்திசாலித்தனமாக மிகப்பெரிய அரசை உருவாக்கினார்.
கேத்தரின் தி கிரேட்
ரஷ்யாவின் மிகவும் பிரபலமான ஆட்சியாளர்களில் ஒருவரான கேத்தரின் தி கிரேட், உலக வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்தவராகவும், நம்பமுடியாத அளவிற்கு செல்வம் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரியணையில் இருந்தார், அந்த காலத்தில் ரஷ்யா உலகின் வலிமையான பேரரசுகளில் ஒன்றாக வளர்ந்தது.
தற்போதைய மதிப்பீட்டின் படி, அவரது சொத்து மதிப்பு சுமார் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. கேத்தரின் கலைப்பொருட்கள், தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற பொக்கிஷங்களால் அலங்கரிப்பட்ட பிரமாண்டமான அரண்மனைகளில் வசித்து வந்தார். அவரது ஆட்சியின் கீழ், ரஷ்யா ஒரு சக்திவாய்ந்த பேரரசாக மாறியது.
கிளியோபாட்ரா
வரலாற்றின் சக்திவாய்ந்த ராணி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது எகிப்து பேரரசி கிளியோபாட்ராதான். கிளியோபாட்ரா VII, தனது அழகு, புத்திசாலித்தனம் மற்றும் அபரிமிதமான செல்வத்திற்காக நினைவுகூரப்படுகிறார். இன்றைய மதிப்பில் அவரது சொத்து மதிப்பு சுமார் 96 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கிளியோபாட்ரா ஒப்பிடமுடியாத ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்தார், அவர் ஒரு திறமையான ஆட்சியாளர் மற்றும் இராஜதந்திரியாகவும் இருந்தார். கிளியோபாட்ராவின் அழகு, சக்தி மற்றும் செல்வம் அவரை வரலாற்றில் மிகவும் பிரபலமான பெண்களில் ஒருவராக மாற்றியது.
காஸ்டிலின் இசபெல்லா
ஸ்பெயினின் சக்திவாய்ந்த ராணியான காஸ்டிலின் இசபெல்லா, அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்த கிறிஸ்டோபர் கொலம்பஸின் வரலாற்றுப் பயணத்திற்கு நிதியளித்தன் மூலம் மிகவும் பிரபலமானராக மாறினார். இன்றைய மதிப்பில் அவரது செல்வம் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவரது கணவர் மன்னர் ஃபெர்டினாண்டுடன் சேர்ந்து, அவர் ஸ்பெயினை சக்திவாய்ந்த பேரரசுகளில் ஒன்றாக மாற்றினார்.
ஹட்செப்சூட்
பண்டைய எகிப்தின் மிகவும் வெற்றிகரமான பாரோக்களில் ஒருவரான ஹட்செப்சூட், அவரது மகத்தான செல்வம் மற்றும் சக்திவாய்ந்த ஆட்சிக்காக நினைவுகூரப்படுகிறார். இன்றைய மதிப்பில், அவரது செல்வம் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் மதிப்புடையதாக நம்பப்படுகிறது. அவர் தனது அரண்மனைகள் மற்றும் கோவில்களை தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற ரத்தினங்களால் நிரப்பினார். ஹட்செப்சூட் எகிப்தில் அற்புதமான நினைவுச்சின்னங்களை உருவாக்குவதிலும், வர்த்தக பாதைகளை விரிவுபடுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தினார், இது எகிப்தின் செல்வத்தை மேலும் அதிகரித்தது.



Click it and Unblock the Notifications
