தம்பியை மணந்த ராணி முதல் தலை வெட்டப்பட்டு இறந்த ராணி வரை உலக வரலாற்றை மாற்றிய 6 ராணிகள் இவங்கதான்...!

வரலாறு முழுவதுமே பல பெண்கள் தங்களின் ஆட்சிமுறை மற்றும் தந்திரத்தால் தங்களின் பெயரை நிலைநிறுத்தியுள்ளனர். வரலாற்றில் ஆண்களே எப்போதும் ஆதிக்கம் செலுத்துபவராக இருந்து வந்தாலும் சில பெண்கள் விதிவிலக்காக ஆதிக்கம் செலுத்தும் ராணியாக இருந்தனர்.

ராணிகள் தங்கள் ராஜ்ஜியத்தை நிர்வகிப்பதற்கு இராணுவத்தில் முக்கிய பங்கு வகித்தனர், அவர்கள் இணைந்து ஆட்சி செய்தாலும் அல்லது சில சூழ்நிலைகளில் சிம்மாசனத்தின் வாரிசாக போருக்குச் சென்றாலும், அவர்கள் தங்கள் வலுவான தலைமையை நிறுவினர் மற்றும் தங்கள் கடுமையான ஆட்சி முறையால் வரலாற்றில் புகழ் பெற்றார்கள்.

Most Powerful Queens in the World History in Tamil

இந்த பதிவில் பாலின சமத்துவத்திற்கு வழிவகுத்த சக்தி வாய்ந்த பெண்கள் யார் மற்றும் அவர்கள் எந்த வம்சத்தை சார்ந்தவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

எலிசபெத் I

எலிசபெத் I ஆங்கிலேய அரியணையில் ஏறவில்லை, ஏனென்றால் ரோமன் கத்தோலிக்கர்கள் அவரை முறைகேடான குழந்தையாகக் கருதினர், பின்னர் அவர் ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும், 1558 இல் அவர் பல தடைகளுக்கு பிறகு அரியணையில் அமர்ந்தார் மற்றும் அவரது 45 ஆண்டுகால பரபரப்பான ஆட்சியின் மூலம் வரலாற்றில் முத்திரை பதித்தார் மற்றும் மிகவும் வெற்றிகரமான ஆங்கில ஆட்சியாளராக அறியப்படுகிறார்.

அவர் தனது ஆட்சியின் கீழ் இங்கிலாந்து தேவாலயத்தை நிறுவினார் மற்றும் ராணி அன்னே பொலினின் ஒரே மகள் ஆவார். எலிசபெத் ராணியாக இருந்த காலம் முக்கியமாக கலை மற்றும் நாடகப் பிரிவில் பிரிட்டன் மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்தது.

ஹாட்ஷெப்சுட்

ராணியும் பாரோவின் மனைவியுமான அவர், செட் திருவிழாவில் தாடியைத் தாங்கி, பாரோவின் சடங்கு பந்தயத்தை நடத்தும் அடையாளத்தை ஏற்றுக்கொண்டார். அவர் கிட்டதட்ட இருப்பது ஆண்டுகள் ஆட்சி செய்து தன் சகோதரனை மணந்தார், ஆனால் அவரால் குழந்தை பெற முடியவில்லை.

எகிப்தில் உள்ள ஒரு கோவிலின் சுவர்கள், அவர் பன்ட் உடன் வர்த்தகப் பணிகளுடன் நுபியாவில் ஒரு போரை நடத்தினார் என்பதைக் குறிக்கிறது. இருப்பினும், அவரது மரணத்திற்குப் பிறகு வந்த ஆட்சியாளர்கள் அவரது அடையாளங்களை அழிக்க அனைத்து முயற்சிகளும் செய்தனர்.

மரியா தெரசா

அரச சட்டத்தின் நடைமுறை அனுமதியின் கீழ் ஆஸ்திரியாவில் ஆட்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்படி அவர்கள் வரிசையில் அடுத்த நபராக இருந்தால் மட்டுமே ஆட்சியாளராக முடியும். மரியா தெரசா ஐரோப்பாவின் செஸ் விளையாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எளிய சிப்பாய்.

ஆனால், அவர் யாராலும் வெல்ல முடியாத முடியாத இராஜதந்திர திறன்களைக் கொண்டிருந்ததற்காக வரலாற்றில் நினைவுகூரப்படுகிறார், விரைவில் அவர் இராணு பலத்தை அதிகரித்தார், அங்கு ஆரம்பத்தில் அவரை எதிர்த்த பல பிரபுக்களுடன் கூட்டணியை உருவாக்கி, யாராலும் எதிர்க்க முடியாத ராணியாக மாறினார்.

ஆனி போலின்

அரசர் ஹென்றி VIII இன் இரண்டாவது மனைவி இங்கிலாந்தின் வரலாற்றை மாற்றினார், ஏனெனில் அவர் அரகோனின் கேத்தரின் உடனான தனது முதல் திருமணத்தை முறித்துக் கொண்டார், அதனால் அவர் அரியணையை கைப்பற்றினார்.

இது 1533 இல் ரோமன் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து விலகலை ஏற்படுத்தியதால், இங்கிலாந்தின் வரலாற்றில் இது ஒரு மிகபெரும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது, அன்னேவின் செயல்பாடுகளே ஹென்றியை இந்த நடவடிக்கை எடுக்கவும், இங்கிலாந்து திருச்சபையின் உச்ச தலைவராக தன்னை அறிவிக்கவும் தூண்டியது. பின்னாளில் அவரின் தலை துண்டிக்கப்பட்டாலும், அவர் ஆங்கில வரலாற்றின் முழு போக்கையும் மாற்றினார்.

நெஃபெர்டிட்டி

14 ஆம் நூற்றாண்டில், நெஃபெர்டிட்டி எகிப்தின் ராணியானார் மற்றும் எகிப்தின் பல கடவுள்களை வணங்குவதில் இருந்து சூரியக் கடவுளான அடோவை மட்டும் வழிபடும் மத மாற்ற செயல்பாடுகளுக்கு தலைமைத் தாங்கினார்.

அவருடைய பெயரின் அர்த்தம் 'ஒரு அழகான பெண் வந்திருக்கிறாள்' என்று மொழிபெயர்க்கப்படுகிறது. ஏனெனில் அவர் எல்லையில்லாத உடல் அழகுடனும், வசீகரமான முகத்துடனும் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் தனது கணவரின் துணை ஆட்சியாளராக செயல்பட்டார் மற்றும் எகிப்தின் மதத்தில் பெரிய மாற்றங்களைச் செய்தார். அதேசமயம் ஆறு குழந்தைகளுக்கு தாயாகவும் இருந்தார்.

கிளியோபாட்ரா VII

ரோமானியர்கள் கட்டுப்பாட்டிற்குள் வருவதற்கு முன்பு எகிப்தை ஆண்ட எகிப்தின் கடைசி பாரோவான இவர் தனது ஆட்சியின் போது எல்லையில்லா அதிகாரத்தையும், செல்வாக்கையும் கொண்டிருந்தார். கிளியோபாட்ரா, அவரது ரோமானிய தளபதிகளுடனான உறவுகளுக்காக அறியப்பட்டவர் மற்றும் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

அவரது கணவரும் ரோமானிய தளபதியுமான மார்க் ஆண்டனி தனது உயிரை மாய்த்துக் கொண்ட பிறகு பாம்பு கடித்து தற்கொலை செய்து கொண்டார். 17 வயதில் ஆட்சிக்கு வந்த கிளியோபாட்ரா புத்திசாலி மற்றும் அரசியல் மதிப்புமிக்கவர். அதனால்தான் இப்போதும் ராணி என்றால் அனைவரின் நினைவிற்கும் முதலில் வருவது கிளியோபாட்ராவின் பெயராக இருக்கிறது. அவருடைய மரணத்திற்குப் பிறகு அவர் கடவுளாக வணங்கப்பட்டார்.

Story first published: Sunday, March 3, 2024, 13:20 [IST]
Desktop Bottom Promotion