Latest Updates
-
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
புதன் பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 21 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க பல பிரச்சனைகளை சந்திக்க போறாங்க..
Mercury Transit In Sagittarius 2023: நவகிரகங்களில் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் கிரகங்களிலேயே குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். மேலும் இவர் மிதுனம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
புதனின் ராசி மாற்றத்தின் போது அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் புதன் நவம்பர் 27 ஆம் தேதி விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குள் நுழைந்தார். தனுசு ராசியானது குரு பகவானின் ராசியாகும்.

தனுசு ராசியில் புதன் நுழைவதால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைத்தாலும், இன்னும் சில ராசிக்காரர்கள் இப்பெயர்ச்சியால் பல பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.
இப்போது புதன் தனுசு ராசிக்குள் நுழைந்ததால், எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. சிலர் கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. மழைக்காலம் என்பதால் பலவிதமான தொற்றுக்களை சந்திக்க நேரிடும்.
இது தவிர வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கையில் ஏராளமான பிரச்சனைகளை தலைத் தூக்கும். முக்கியமாக உங்களின் பேச்சால், உறவுகளில் விரிசல் ஏற்படலாம். அதோடு பல இழப்புக்களையும் சந்திக்க வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இக்கால கட்டத்தில் கெட்ட பழக்கங்களில் இருந்து வலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது. சிலர் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படலாம்.
குறிப்பாக செரிமான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிமும். அதிகமாக வாக்குவாதத்தில் ஈடுபட நேரிடும். இந்த வாக்குவாதத்தினால் உடன் பிறந்தவர்களுடனான உறவு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே சற்று கவனமாக இருங்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் பலவிதமான தடைகளை சந்திக்க நேரிடும். உறவுகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம்.
ஆரோக்கிய விஷயத்திலும் அசால்ட்டாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது பெரிய மருத்துவ செலவை செய்ய வைத்துவிடும். வியாபாரம் செய்பவர்கள் கவனக் குறைவால் பெரிய நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளதால், உஷாரா இருக்க வேண்டும். முக்கியமாக பண பரிவர்த்தனைகளை செய்யும் போது ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
