Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
நியூமராலஜி படி இந்த 2 தேதில பிறந்த ஆண்கள் அதிர்ஷ்டசாலியாகவும், பவர்புல்லானவர்களாகவும் இருப்பார்களாம்...!
நியூமராலஜி ஜோதிடத்தின் முக்கியமான பிரிவாக கருதப்படுகிறது. ஜோதிடத்தில் இருக்கும் நமது ராசி, கிரகங்கள் மற்றும் விண்மீன்கள் நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறதோ, அதேபோல் நாம் பிறந்த தேதியும் நம் வாழ்க்கையை பாதிக்கிறது என்று நம்பப்படுகிறது.
எண் கணிதத்தில், எண்கள் 1 முதல் 9 வரை கொடுக்கப்பட்டுள்ளன. எண் கணிதத்தின்படி சில எண்களில் பிறந்த ஆண்கள் அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் எந்தத் துறையில் சென்றாலும், நிறையப் புகழும், பணமும் சம்பாதிப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த எண்களில் பிறந்த ஆண்கள் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

எண் 5
எந்த ஒரு மாதத்திலும் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் எப்போதும் துணையிருக்கும். 5 ஆம் வீட்டின் அதிபதி புதனாவார். ஜோதிடத்தில், புதன் ஆளும் கிரகமாக கருதப்படுகிறது. எனவே இந்த நன்னாளில் பிறந்தவர்கள் மிகவும் கம்பீரமானவர்களாக இருப்பார்கள்.
அதிர்ஷ்ட எண் 5-ல் பிறந்தவர்கள் சிந்தனையில் உறுதியாகவும், புத்திசாலியாகவும், வாழ்க்கையில் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் எப்பொழுதும் ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள். எண் 5 பேர் முடிவெடுப்பதில் வல்லவர்கள். எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும், அதை விரைவாக முடிவெடுக்கிறார்கள்.
சிறந்த வணிகர்கள்
எண் 5-ல் பிறந்தவர்கள் மிகவும் புத்திக்கூர்மையானவர்கள். இந்த எண்ணில் பிறந்தவர்கள் வணிக எண்ணம் கொண்டவர்கள் மற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எதார்த்தமாக சிந்திக்கிறார்கள். அவர்கள் சிறந்த தொடர்பு திறன் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் வார்த்தைகளால் யாரையும் எளிதில் ஈர்க்கிறார்கள்.
அவர்களின் பகுத்தறியும் திறனும் மற்றவர்களை விட சிறந்ததாக இருக்கும். அதனால்தான் இந்த எண்ணில் பிறந்தவர்கள் மிக வேகமாக முன்னேறுகிறார்கள். அவர்கள் தங்கள் சாதனைகளால் வேலைத் துறையில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள், ஆனால் அவர்கள் வணிகம் செய்தால் பெரிய வணிகர்களாக மாறலாம். எண் 5-ல் பிறந்தவர்கலால் மிக விரைவாக பணம் சம்பாதிக்க முடியும்.
எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்
எண் 5-ல் பிறந்தவர்களின் குணாதிசயங்களில் ஒன்று, அவர்கள் சூழ்நிலைகளைக் கண்டு அஞ்சி எளிதில் விட்டுவிட மாட்டார்கள். அவர்கள் எல்லாவற்றையும் அமைதியாக தீர்க்க முயற்சிக்கிறார்கள். சில நேரங்களில் அவர்களின் தீவிரமற்ற தன்மை அவர்களுக்கு சிரமங்களை உருவாக்கலாம், ஆனால் அவர்கள் இந்த குறைபாட்டை ஈடுசெய்தால், சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் திறன் அவர்களுக்கு உள்ளது.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை
அவர்களின் குடும்ப உறவுகள் இயல்பானவையாக இருக்கலாம். எண் கணிதத்தின்படி, எண் 5-ல் பிறந்தவர்கள் இரண்டு திருமணங்களைச் செய்ய வாய்ப்புள்ளது. அவர்களின் காதல் உறவுகள் நிரந்தரமானவை அல்ல, அவர்கள் வாழ்க்கையில் பல காதல்கள் வர வாய்ப்புள்ளது, ஆனால் அவர்களது குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவே இருக்கும்.
எண் 9
எண் 9 நியூமராலஜியில் மிகவும் செல்வாக்குமிக்க, வலுவான மற்றும் அதிர்ஷ்ட எண்ணாக கருதப்படுகிறது. நீங்கள் மாதத்தின் 9, 18 மற்றும் 27 ஆம் தேதிகளில் பிறந்திருந்தால், நீங்கள் 9 ரேடிக்ஸ் என்று அழைக்கப்படுவீர்கள்.
அவர்கள் வாழ்வில் பணத்துக்கு பஞ்சமில்லை
எண் கணிதத்தின் படி, எண் 9-ல் பிறந்தவர்கள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் வலுவான சக்தி கொண்டவர்கள். அவர்கள் வாழ்க்கையில் எதைச் சாதிக்க விரும்புகிறாரோ, அதை அடைவதையே எப்போதும் நினைக்கிறார்கள்.
புத்திசாலித்தனம் மற்றும் வலுவான சக்தியின் இந்த கலவையானது அவர்களுக்கு வாழ்க்கையில் நிறைய முன்னேற்றத்தை அளிக்கிறது. அவர்கள் எங்கு சென்றாலும் உயர் பதவிகளை அடைகிறார்கள். நிர்வாகத்திலும் பெரிய பதவியைப் பெறுகிறார்கள். அதனால்தான் அவர்கள் நிறைய பெயர், புகழ் மற்றும் பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் வாழ்வில் எப்போதும் பணத்துக்குப் பஞ்சம் இருக்காது.
செல்வத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
எண் 9-ல் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையை செல்வத்துடன் வாழ விரும்புகிறார்கள். அவர்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுக்காக நிறைய பணம் செலவழிக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம், உணவு, எல்லாமே உயர்தரத்தில் இருக்கும். இவர்கள் இயல்பிலேயே மிகவும் தைரியமும், கோபமும் கொண்டவர்கள். ஆனால் அவர்களைப் பற்றி யார் என்ன நினைக்கிறார்கள், அது அவர்களுக்குப் பொருட்டல்ல. அவர்கள் தங்கள் சொந்த விதிமுறைகளில் வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

