Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
செவ்வாய் கேது சேர்க்கை முடிவு: நவம்பர் முதல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Mars Ketu Conjunction End On 30 October 2023: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். செவ்வாய் ராசியை மாற்றுவதற்கு 45 நாட்கள் ஆகும்.
அந்த வகையில் அக்டோபர் 03 ஆம் தேதி செவ்வாய் துலாம் ராசிக்குள் நுழைந்தார். இந்த துலாம் ராசியில் ஏற்கனவே கேது பயணித்து வருகிறார். இதனால் அக்டோபர் 03 முதல் துலாம் ராசியில் செவ்வாய் கேது சேர்க்கை நிகழ்ந்தது.

இந்த சேர்க்கையானது அசுபமானதாக கருதப்படுகிறது. இந்த சேர்க்கையினால் பல ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பலவிதமான வேதனைகளை சந்திக்கக்கூடும். இந்நிலையில் அக்டோபர் 30 ஆம் தேதி கேது புதன் ஆளும் கன்னி ராசிக்கு செல்கிறார்.
இதனால் செவ்வாய் கேது சேர்க்கை முடிவுக்கு வரப் போகிறது. இதன் விளைவாக நவம்பர் மாதத்தில் இருந்து சில ராசிக்காரர்களின் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். இப்போது செவ்வாய் கேது சேர்க்கை முடிவால் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 7 ஆவது வீட்டில் செவ்வாய் கேது சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இந்த சேர்க்கையானது அக்டோபர் 30 ஆம் தேதி முடிவதால், மேஷ ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வழக்கத்தை விட பண வரவு சிறப்பாக இருக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அலைச்சல் குறையும் மற்றும் மன அழுத்தம் நீங்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் கேது சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இந்த சேர்க்கை முடிவுக்கு வருவதால் துலாம் ராசிக்காரர்களுக்கு நவம்பர் முதல் அற்புதமாக இருக்கப் போகிறது. வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு எதிர்பார்த்த புதிய வேலை கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். முக்கியமாக நீண்ட நாட்களாக கைக்கு வராமல் சிக்கியிருந்த பணம், கைக்கு வந்து சேரும்.
மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டில் செவ்வாய் கேது சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இந்த சேர்க்கை முடிவுக்கு வருவதால் இதுவரை பணப் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அது நீங்கும். புதிய தொழிலை தொடங்க நினைப்பவர்கள், நவம்பர் முதல் அந்த தொழிலை தொடங்க முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு அபரிமிதமான லாபம் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். சட்ட விஷயங்களில் நல்ல ஆதாயம் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். முக்கியமாக கடன் பிரச்சனையில் இருந்து விடுபடக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications