Latest Updates
-
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
மார்ச் மாசம் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்... உங்க ராசியும் இதுல இருக்கா?
March 2024 Monthly Horoscope: 2024 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த மார்ச் மாதத்தில், சுக்கிரன், செவ்வாய், சூரியன், புதன் ஆகிய கிரகங்கள் ராசியை மாற்றுவதோடு, சனி மற்றும் புதன் அஸ்தமன நிலையில இருந்து உதயமாகவுள்ளன.
இப்படி மார்ச் மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், இன்னும் சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருப்பதால், கவனமாக இருக்க வேண்டியிருக்கும்.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் மார்ச் மாத கிரக பெயர்ச்சிகளால் சில ராசிக்காரர்களுக்கு இம்மாதமானது பிரச்சனைகளை நிறைந்திருக்கப் போகிறது. இப்போது 2024 மார்ச் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு மார்ச் மாத கிரக பெயர்ச்சிகளால், தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப் படலாம். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதுவும் 5 ஆவது வீட்டில் சூரியன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் ஒன்றிணைந்து இருப்பதால், வியாபாரிகள் தங்கள் தொழிலில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதோடு குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சனைகள் தலைத்தூக்கும். அதுமட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்களிடையே மோதல்கள் அதிகரிக்கும். மொத்தத்தில் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு மார்ச் மாத கிரக பெயர்ச்சிகளால் நல்ல மரியாதை கிடைக்கும். இருப்பினும் நிறைய அலைச்சலை சந்திக்க நேரிடும். இம்மாதத்தில் சனி பகவானும், செவ்வாயும் ஒன்றிணைவதால், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். நீங்கள் அதிகம் கோபப்படுவீர்கள். இந்த கோபத்தால் உறவுகளில் மற்றும் பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே சற்று கவனமாக இருங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் மார்ச் மாதத்தில் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். ஆனால் அது கடின உழைப்புக்கும், போராட்டத்திற்கும் பின்னரே கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குழந்தைகள் தொடர்பான சில கவலைகள் அதிகரிக்கும். மேலும் இம்மாதத்தில் ஒருவித குழப்பத்துடனேயே இருப்பீர்கள். மேலும் செய்யும் வேலைகளில் திருப்தி அடையமாட்டீர்கள். தேவையில்லாத செலவுகளை அதிகம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் கவனமாக இருந்தால், பணத்தை சேமிக்க முடியும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதத்தில் வருமானத்திற்கு பதிலாக செலவுகள் அதிகரிக்கும். சனி பகவானின் ஏழரை தாக்கத்தால் தேவையில்லாத அலைச்சல்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதோடு தேவையில்லாத செலவுகளும் அதிகரிக்கும். மேலும் மன அழுத்தம் மற்றும் மன கவலைகள் போன்றவை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, குடும்ப பிரச்சனைகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் தேவையில்லாத சண்டைகள் ஏற்படும். இந்த சண்டைகள் பிரிவினையை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications