Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Tirupati: திருமணமா? இனி திருப்பதி கோயிலில் மாங்கல்யம் வாங்கலாம்.. எப்படி?
திருப்பதி கோயிலில் பக்தர்களுக்காக மாங்கல்யத்தை விற்க திருமலை திருப்பதி அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. உங்கள் குடும்பத்தில் திருமணமா? திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் மாங்கல்யத்தை வாங்கி, இலவசமாக ஏழுமலையானை தெரிசிக்கலாம்.. அது எப்படி என்ற முழு விவரத்தை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பக்தர்களுக்கு மாங்கல்யம் விற்க முடிவு செய்தது. இதிலிருந்து, திருமண வாழ்க்கையில் நுழைபவர்கள் திருப்பதியில் மாங்கல்யம் வாங்கிக் கொள்ளலாம். அதாவது தங்கத்தில் தாலி வாங்கி ஏழுமலையானின் அருளை பெறலாம்.

இந்த கூட்டத்தில், “ 2024-25ஆம் ஆண்டிற்கான 5,141 கோடி ரூபாயுடன் கூடிய ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆளும் குழு ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதல் படி, புதுமணத் தம்பதிகளுக்கு பாத பூஜைக்குப் பிறகு பிரசாதம் வழங்கப்படும். 5 மற்றும் 10 கிராம் மாங்கல்யம் திருப்பதிக்கு வரும் தங்க காணிக்கையிலிருந்து தயாரிக்கப்படுவதாக தேவஸ்தானம் நிர்வாக குழு தெரிவித்திருந்தது.
ஏற்கனவே திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளை தனித்துவமான கல்யாணமஸ்து திட்டத்தின் மூலம் ஏழை தம்பதிகளுக்கு 32,000 திருமணங்களைச் செய்து வைத்துள்ளது. அவர்களுக்கு 2 கிராம் தங்க தாலி நன்கொடையாக தேவஸ்தானம் நிர்வாகம் வழங்கியது. அவர்கள் யாரும் கடந்த 17 ஆண்டுகளில் வேறு மதத்திற்கு மாறவில்லை. மேலும் எல்லா செல்வங்களையும் பெற்று நலமாக உள்ளார்கள் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவிக்கிறது.
தற்போது இது போன்ற ஏழுமலையானின் அருளைப் பெற்ற மாங்கல்ய விற்பனையை அறிமுகப்படுத்துவதன் மூலம், அது அவர்களின் பந்தத்தை மேலும் வலுப்படுத்தி, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை நடத்த உதவும் என்கின்றனர் தேவஸ்தான புரோகிதர்கள் மற்றும் நிர்வாகிகள். இந்த மங்கள சூத்திரங்கள் 5 கிராம் மற்றும் 10 கிராம் அளவில் நான்கு அல்லது ஐந்து டிசைன்களில் விலைக்கு ஏற்றவாறு தயாரிக்கப்படும். இவற்றுடன், லட்சுமி காசும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது," என்று வாரியக் கூட்டத்திற்குப் பிறகு தேவஸ்தான தலைவர் பூமனா கருணாகர் ரெட்டி கூறினார்.
மேலும், பட்ஜெட் மதிப்பீட்டின்படி, 2024-25ல் ரூ.1,611 கோடியில் உண்டியல் வசூலை திருப்பதி தேவஸ்தானம் எதிர்பார்க்கிறது. தினமும், சராசரியாக, திருமலை கோவிலுக்கு ஸ்ரீவாரி உண்டியலில் குறைந்தபட்சம், 4.5 கோடி முதல், 5 கோடி ரூபாய் வரை நன்கொடையாகப் பெறப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானத்தின் பட்ஜெட் ரூ.5,000 கோடியைத் தாண்டியது இதுவே முதல்முறை எனவும் தெரிவித்தார்.
ரொக்க பிரசாதம் தவிர, திருமலை கோவிலுக்கு தங்கம், வெள்ளி மற்றும் பிற உலோகங்களும் கிடைக்கின்றன. வெங்கடேஸ்வரா கோவிலுக்கு பக்தர்களிடமிருந்து நன்கொடையாக சராசரியாக ஒரு டன் தங்கம் கிடைக்கிறது. பல வங்கிகளில் டெபாசிட் தொகைக்கு வட்டியாக ரூ.1,068 கோடியும், பிரசாத விற்பனை மூலம் ரூ.600 கோடியும், தரிசன டிக்கெட் விற்பனை மூலம் ரூ.338 கோடியும் வருமானம் ஈட்டுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் மதிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், ஏழுமலையான் திருவடிகளில் வைத்து பூஜிக்கப்பட்ட பின்னர், விற்பனை செய்யப்பட இருக்கும் தங்க தாலிகளை தேவையான பக்தர்கள் பணம் செலுத்தி வாங்கி கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது...



Click it and Unblock the Notifications











