Latest Updates
-
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம்
மகா சிவராத்திரி நாளில் சிவனுக்கு இந்த 5 மலர்களை வாங்கி கொடுங்க.. சிவனின் பரிபூர்ண அருள் கிடைக்கும்..
Maha Shivratri 2024: இந்து நாட்காட்டியின் படி, மாசி மாதத்தின் கிருஷ்ண பக்ஷ சதுர்தசி நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்நாளானது சிவபெருமானை வழிபட ஏற்ற நாளாகும். இந்நாளில் சிவனின் அருளைப் பெற சிவ பக்தர்கள் கடுமையாக விரதமிருந்து, கண் விழித்து சிவபெருமானை வழிபடுவார்கள்.
இந்த மகா சிவராத்திரி நாளன்று இரவு கண் விழித்து சிவனின் லிங்க ரூபத்தை வழிபடுபவர்களுக்கு புண்ணியம் கிடைப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்நாளில் சிவபெருமானும், பார்வதி தேவியும் திருமணம் செய்து கொண்டனர். எனவே திருமணமானவர்கள் இந்நாளில் விரதமிருந்து கண் விழித்து வழிபட்டால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

சிவபுராணத்தின் படி, சிவபெருமானின் ஆசீர்வாதத்தைப் பெற, மகா சிவராத்திரி நாளில் அவருக்கு ஒருசில பூக்களை படைத்து வழிபட வேண்டும். அப்படி வழிபடுவதன் மூலம், சிவனின் ஆசி கிடைத்து, ஆசைகளை நிறைவேறுவதாக கூறப்படுகிறது. இப்போது எந்த பூக்களை மகா சிவராத்திரி நாளில் சிவனுக்கு படைத்து வழிபட வேண்டும் என்பதைக் காண்போம்.
1. கருஊமத்தை பூ
சிவபெருமானுக்கு கருஊமத்தை பூ என்றால் மிகவும் பிடிக்கும். எனவே சிவனின் வழிபாட்டில் கருஊமத்தை பூ மற்றும் பழங்கள் மிகவும் முக்கியமானவையாக திகழ்கிறது. இந்த பூவும், பழமும் இல்லாமல் சிவ பூஜை முழுமையற்றதாக கருதப்படுகிறது. இந்த பூக்களையும், பழங்களையும் சிவனுக்கு படைத்து ஒருவர் வழிபட்டால், அவர் அனைத்து துக்கங்களில் இருந்தும் விடுபடுவர். மேலும் திருமண வாழ்வில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீரும். அதோடு நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும்.
2. செம்பருத்தி பூ
சிவபுராணத்தின் படி, சிவபெருமானுக்கு சிவப்பு நிற பூக்களை அர்ப்பணித்து வழிபடுவது மிகவும் நல்லது. அதுவும் செம்பருத்தி பூக்களை ஒவ்வொன்றாக எடுத்து சிவ மந்திரத்தைக் கூறி அர்ப்பணிப்பதன் மூலம், வாழ்வில் சந்திக்கும் பிரச்சனை அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.
3. மல்லிகைப் பூ
நீண்ட நாட்களாக வாகனம் வாங்க வேண்டுமென்று ஆசை இருந்து, ஆனால் அதற்கான நிதி நிலையைப் பெற முடியாமல் இருந்தால், அவர் மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானுக்கு மல்லிகைப் பூவை அர்ப்பணித்து வழிபட வேண்டும். இப்படி செய்வதனால் வாகன சுகத்தைப் பெறுவதோடு, சிவபெருமானின் அருளால் அதிர்ஷ்டம் எப்போதும் ஆதரவாக இருக்கும். இதனால் செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
4. ரோஜாப் பூ
மகா சிவராத்திரி நாளன்று சிவபெருமானுக்கு ரோஜாப் பூக்களை அர்ப்பணிப்பது மிகவும் நல்லது. இதனால் ஒருவரது ஆரோக்கியம் மேம்படுவதோடு, திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். எனவே திருமண வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்க சிவபெருமானுக்கு சிவ பூஜையின் போது ரோஜா பூக்களை அர்ப்பணிக்க வேண்டும்.
5. ஆளி மலர்
ஆளி மலரை மகா சிவராத்திரி நாளன்று சிவபெருமானுக்கு அர்ப்பணித்து வழிபட்டால், சிவனின் கவனத்தை ஈர்க்கலாம் என நம்பப்படுகிறது. ஏனெனில் ஆளி மலர் சிவபெருமானுக்கு பிடித்த மற்றொரு பூவாகும். இந்த பூவை சிவனுக்கு படைத்து வழிபடும் நபர், சிவபெருமானுக்கு பிடித்த நபராவார். அதோடு இந்த பூ விஷ்ணு பகவானின் ஆசியையும் பெற உதவி புரியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications