Latest Updates
-
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல -
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம்
மகா சிவராத்திரிக்கு முன் உங்க கனவுல இதெல்லாம் வந்துச்சா.. அப்ப ஜாக்பாட் அடிக்கப்போகுதுன்னு அர்த்தம்..
Maha Shivratri 2024: இந்த ஆண்டின் மகா சிவராத்திரி மார்ச் 08 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தில், மகா சிவராத்திரி நாளானது சிவ பக்தர்களுக்கு மிகவும் முக்கியமான நாளாகும். இந்நாளில் சிவன் மற்றும் பார்வதி தேவியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் சிவன் கோவில்களுக்கு செல்வார்கள். மேலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.
மகா சிவராத்திரி நாளில் சிவனை நினைத்து விரதமிருந்து வழிபட்டு வந்தால், சிவபெருமான் மகிழ்ச்சியடைந்து தனது பக்தர்களின் விருப்பங்கள் மற்றும் வேண்டுதல்களை நிறைவேற்றுவார். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ சதுர்தசி அன்று வரும் மகா சிவராத்திரி மிகவும் மங்களகரமாக கருதப்படுவதோடு, மகா சிவராத்திரிக்கு முன் நடக்கும் ஒருசில விஷயங்கள் அதிர்ஷ்டமாக கருதப்படுகின்றன.

அதுவும் சிவராத்திரிக்கு முன் கனவில் ஒருசிலவற்றைக் காண்பது அல்லது ஒருசில நிகழ்வுகளைக் காண்பது, ஒரு நல்ல அறிகுறிகாக கருதப்படுகின்றன. இப்போது மகா சிவராத்திரிக்கு முன் கனவில் எந்த விஷயங்கள் வருவது நல்லது மற்றும் அவை எதைக் குறிக்கின்றன என்பதைக் காண்போம்.
கனவில் கருப்பு நிற சிவலிங்கம்
மகா சிவராத்திரிக்கு முன் ஒருவர் தனது கனவில் கருப்பு நிற சிவலிங்கத்தைக் காண்பது மங்ளகரமானதாக கருதப்படுகிறது. பொதுவாக சிவலிங்கமானது சிவபெருமானின் அடையாளமாகும் மற்றும் மகா சிவராத்திரிக்கு முன் இப்படி சிவலிங்கத்தைக் காண்பது வேலையில் பதவி உயர்வு ஏற்படப் போவதைக் குறிக்கிறது.
கனவில் வில்வ இலை அல்லது மரத்தை காண்பது
மகா சிவராத்திரிக்கு முன் வில்வ இலை அல்லது வில்வ மரத்தைக் காண்பது, நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கனவில் வில்வத்தைக் காண்பது, பணப்பிரச்சனை நீங்கப் போவதைக் குறிக்கிறது. அதோடு அனைத்து பிரச்சனைகளும் முடிவுகு வரப்போவதையும் உணர்த்துகிறது.
கனவில் நந்தியை காண்பது
மகா சிவராத்திரிக்கு முன் கனவில் நந்தி அல்லது காளை வருவது, அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. நந்தி என்பது சிவபெருமானின் வாகனம். நந்தி இல்லாமல் சிவபெருமானின் குடும்பம் முழுமையற்றதாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட நந்தியை கனவில் கண்டால், சிவனின் பரிபூர்ண அரேள் கிடைக்கப் போகிறது மற்றும் தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றி அடையப் போகிறது என்பதைக் குறிக்கிறது.
கனவில் பாம்பை காண்பது
நிறைய பேர் அடிக்கடி கனவில் பாம்பை காண்பார்கள். அதுவும் இந்த பாம்பை மகா சிவராத்திரிக்கு முன் கண்டால், அல்லது பாம்பின் சப்தத்தைக் கேட்டால் அல்லது பாம்பு புற்றைக் கண்டால், மிகவும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. இம்மாதிரியான கனவு ஒரு பெரிய அளவிலான பணம் உங்களைத் தேடி வரப்போகிறது என்பதைக் குறிக்கிறது.
சிவலிங்கத்தை வழிபடுவது போன்ற கனவு
மகா சிவராத்திரிக்கு முன் உங்கள் கனவில் சிவலிங்கத்தை வழிபடுவது போன்று வந்தால், சிவபெருமான் உங்களால் மகிழ்ச்சியாக உள்ளார் என்று அர்த்தம். இப்படியான கனவு ஒருவருக்கு வந்தால், அந்நபரின் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கப் போகிறது என்று அர்த்தம்.
கனவில் ருத்ராட்சத்தைக் காண்பது
பொதுவாக கனவில் ருத்ராட்சம் வருவது நல்லது. அதுவும் மகா சிவராத்திரிக்கு முன் கனவில் ருத்ராட்சத்தைக் காண்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த கனவானது வாழ்வின் தொல்லைகள், நோய்கள், தோஷங்கள் நீங்கப் போகிறது என்பதைக் குறிக்கிறது. மேலும் நிலுவையில் உள்ள வேலைகள் விரைவில் வெற்றிகரமாக முடிவடையப் போவதையும் உணர்த்துகிறது.



Click it and Unblock the Notifications