Latest Updates
-
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்...
மஹா சங்கடஹர சதுர்த்தி 2024 : தேதி, பூஜைக்கான உகந்த நேரம் எது? விநாயகருக்கு விரதம் இருக்கும் முறை என்ன?
நமக்கு வரும் வினைகள் அனைத்தையும் தீர்ப்பவர் விநாயகர்.. வினை தீர்க்கும் விநாயகப் பெருமானை மகாசங்கடஹர சதுர்த்தியான இன்று எப்படி வழிபட வேண்டும்? பூஜை செய்ய உகந்த நேரம் என்ன? அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பது குறித்த முழு தகவல்களையும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
ஆவணி மாதம் வரும் 2024 மகா சங்கடஹர சதுர்த்தி
ஆவணி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் நான்காவது நாளான சதுர்த்தி திதி அதாவது வளர்பிறை சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி என்று இந்தியா முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். ஆனால் வளர்பிறை சதுர்த்திக்கு முன்பு வரும் தேய்பிறை சதுர்த்தி மகா சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று மகா சங்கடஹர சதுர்த்தி.. புதிதாக சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்க துவங்குபவர்கள் மஹா சங்கடஹர சதுர்த்தியில் தங்களின் விரதத்தை துவங்கலாம். அப்படி இன்று முழுவது விரதம் இருந்தால் ஓராண்டு விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்..

ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்திக்கு விநாயகருக்கு விரதம் இருக்க முடியாதவர்கள் அல்லது மாதந்தோறும் வரும் சதுர்த்தி நாளில், விநாயகரை வழிபாட்டு, பூஜை செய்ய முடியாதவர்கள் ஆவணி மாதம் வரும் மகா சங்கடஹர சதுர்த்தி அன்று, விரதம் இருந்து வழிபட்டால், ஓராண்டு முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
பூஜைக்கான உகந்த நேரம்
ஆவணி மாதம் மகா சங்கடஹர சதுர்த்தி, ஆகஸ்ட் 22 வியாழக்கிழமையான இன்று வருகிறது. ஆவணி மாதம் தேய்பிறை திதி தொடக்க நேரம் இன்று காலை 6:15 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3:45 மணிக்கு முடிவடைகிறது.. எப்பொழுதுமே சூரிய உதய நேரத்தில் என்ன திதி இருக்கிறதோ அதுதான் அன்றைய திதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் சங்கடகர சதுர்த்தி என்பதே மாலை நேரத்தில் விநாயகரை வழிபடுவதை குறிக்கும். அதனால் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் சதுர்த்தி திதி பிறக்கிறது இதனால் வியாழக்கிழமையான இன்று (ஆகஸ்ட் 22ஆம் தேதி) மகா சங்கடகர சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கலாம்.
ஆடி மாதம் எப்படி அம்பிகைக்கு உரியதோ, அதே போல் ஆவணி மாதம் முழுவதுமே விநாயகருக்கு உரியதாகும். விநாயகப் பெருமான் அவதரித்தது ஆவணி மாதத்தில் என்பதால், இந்த மாதத்தின் எந்த நாளில் விநாயகரை மனதார வழிபட்டாலும் அவரின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். அதிலும் ஆவணியில் வரும் சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். விநாயகரை வழிபடும் போது சந்திரனை சேர்த்து வணங்குதல் சிறப்பு. காரனம் விநாயகர் சந்திரனுகுரியவர் ஆவார்.. பலவிதமான பிரச்சனைகள் நீங்கும்.. வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்..
அத்துடன் இன்று விநாகயருக்கு தேனால் அபிஷேகம் செய்து, அந்த அபிஷேக தேனை வாங்கி வந்து வீட்டில் வைக்க வேண்டும். தினமும் காலையில் விநாயகரை வேண்டி, இந்த தேனை ஒரு ஸ்பூன் குடித்து வந்தால் தீராத நோய்கள் தீரும். மருத்துவ செலவுகள் குறையும். கொழுக்கட்டை, லட்டு செய்து விநாயகருக்கு படைத்து விட்டு மற்றவர்களுக்கு கொடுக்கும் போது வியாபாரம் பெருக, கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும் என்பது நம்பிக்கை
விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்
வாழ்வில் முன்னேற்றம் இல்லை என்பவர்களும், திருமணம் ஆக வேண்டும், குழந்தை வரம் வேண்டும் என்பவர்களும் விநாயகருக்கு அபிஷேகம் செய்து, இனிப்பு பிரசாதங்களை மற்றவர்களுக்கு கொடுப்பதினால் கைமேல் பலன் கிடைக்கும்.. இதனால் பணம் வருவதில் இருக்கும் தடைகளும் நீங்கும், அனைத்து விதமான துன்பங்களும் விலகும். மகா சங்கடஹர சதுர்த்தி அன்று மாலையில் இந்த வழிபாட்டினை செய்வது மிகவும் விசேஷமானதாகும். கண்டிப்பாக அடுத்த வருடம் ஆவணி மாத சதுர்த்திக்குள் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்..



Click it and Unblock the Notifications











