Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
கிரகணத்தின் போது ஏன் உணவின் மேல் துளசி மற்றும் கசகசாவை சேர்க்கணும்-ன்னு சொல்றாங்க தெரியுமா?
Lunar Eclipse 2025: சந்திர கிரகணம் என்பது ஒரு வானியல் நிகழ்வாக இருந்தாலும், இது ஒரு மோசமான நிகழ்வாக கருதப்படுகிறது. பொதுவாக ஒரு ஆண்டில் 4 முறை கிரகணங்கள் ஏற்படும். அந்த வகையில் இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதி நிகழவிருக்கிறது. இந்த சந்திர கிரகணத்தின் போது சந்திரன் சிவப்பு நிறத்தில் இருப்பதால், இது இரத்த நிலவு என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த அற்புதமான வானியல் நிகழ்வானது செப்டம்பர் 07 ஆம் தேதி இரவு 9.58 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு 1.28 மணிக்கு முடிவடைகிறது. இந்த கிரகணத்தின் போது எதிர்மறை ஆற்றல் அதிகமாக பரவுவதாக கூறப்படுகிறது. இதனால் கிரகண காலத்தில் எதையும் சமைக்கக்கூடாது மற்றும் சாப்பிடக்கூடாது என்று கூறுகிறார்கள்.

அதோடு வீட்டில் சமைத்த உணவு இருந்தால், அதில் எதிர்மறை ஆற்றல் நுழையாமல் இருக்க அதில் துளசி இலைகள் மற்றும் கசகசாவை போட்டு வைக்கிறார்கள். ஆனால் ஏன் இவ்விரண்டை மட்டும் சேர்க்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஏன் துளசி?
நல்ல நறுமணமிக்க துளசி மிகவும் புனிதமான செடிகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. சொல்லப்போனால் துளசியில் லட்சுமி தேவி வாசம் செய்வதாக கூறப்படுகிறது. அதோடு துளசி ஏராளமான மருத்துவ குணங்களையும் கொண்டது. புராணங்களின் படி, இப்படிப்பட்ட துளசியை கிரகணத்தின் போது பால், நீர் மற்றும் உணவில் சேர்த்தால், கிரகணத்தின் போது வீசும் எதிர்மறை எதிர்வீச்சால் உணவில் எவ்வித எதிர்மறையான விளைவுகளும் ஏற்படாமல் இருக்கும் என்றும், அதன் காரணமாகவே துளசியை கிரகண காலத்தில் உணவில் சேர்ப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இன்றும் பலர் கிரகணம் தொடங்குவதற்கு முன், சூதக் காலத்தில் துளசி செடியை சமைத்த உணவுகளில் சேர்க்கின்றனர். அதோடு இந்த துளசி இலைகளை வீட்டின் மைய பகுதியிலோ அல்லது வீட்டில் வாசலிலோ வைப்பதன் மூலம் எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழையாது மற்றும் வீட்டைச் சுற்றி நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்கும்.
ஏன் கசகசா?
கிரகண காலத்தில் நம் முன்னோர்கள் துளசிக்கு அடுத்தப்படியாக உணவில் அவசியம் சேர்க்க வேண்டியதாக கூறும் மற்றொரு பொருள் தான் கசகசா. வேதங்களில் மிகச்சிறிய விதைகளான கசகசா மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இது சீதா தேவியின் தலைமுடியில் இருந்து தோன்றியதாக கூறப்படுகிறது.
மற்றொரு நம்பிக்கைகளின் படி, விஷ்ணு வாமன அவதாரத்தை எடுக்கும் போது, அவரது உதிர்ந்த முடியில் இருந்து கசகசா தோன்றியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தான் இது புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கசகசாவை கிரகணத்தின் போது உணவுகளின் மீது தூவினால், அந்த உணவுகள் கிரகணத்தின் போது வீசும் எதிர்மறை கதிர்களால் பாழாகாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications