Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? பூமியின் எல்லைக்கு அப்பால் என்ன உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும்
ஆபரேஷன் சிந்தூர் முதல் ஆபரேஷன் ஜிஞ்சர் வரை - பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கொடுத்த கொடிய பதிலடிகள்!
India's Response To Pakistan's Terror Attacks: பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புகள் அவ்வப்போது இந்தியாவில் தாக்குதலை நடத்துவது வழக்கம். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம்மில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலால் 30-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாகிஸ்தானிற்கு தக்க பதிலடியை கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நன்கு பொறுமையாக யோசித்து திட்டமிட்டு ஆபரேஷன் சிந்தூர் மூலம் தரமான பதிலடியை கொடுத்தது.
தற்போது இந்தியா பாகிஸ்தானிற்கு இடையே பயங்கரமாக மோதல் நடந்து வருகிறது. இந்தியா போரை கைவிட நினைத்தாலும், பாகிஸ்தான் அதற்கு ஒத்துவராமல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இருப்பினும், விரைவில் போர் கைவிடப்பட்டு, நிலைமை சரியாகும் என்று நம்புவோம்.

பயங்கரவாத விஷயத்தில் இந்தியா ஒருபோதும் அமைதியாக இருந்ததில்லை. ஒவ்வொரு முறை பாகிஸ்தான் இந்தியாவின் மீது தாக்குதலை நடத்தும் போதும், இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்திற்கும், அதன் பயங்கரவாத அமைப்புகளுக்கும் மறக்க முடியாத அளவில் தக்க பதிலடியை கொடுத்துதான் வந்துள்ளது. இப்போது பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு இதுவரை இந்தியாவின் கொடிய பதிலடிகளின் பட்டியலைக் காண்போம்.
1. ஆபரேஷன் ஜிஞ்சர்
2011 ஆம் ஆண்டு குப்வாராவில் உள்ள குகல்தார் மலைத்தொடரில் அமைந்துள்ள தொலைதூர இராணுவ நிலையின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக இந்தியா ராணுவம் ஆபரேசன் ஜிஞ்சர் தாக்குதலை மேற்கொள்டது. இது எல்லை தாண்டிய மிகவும் கொடிய சர்ஜிக்கல் தாக்குதல்களில் ஒன்றாகும். இந்த நடவடிக்கையில் சாத்தியமான இலக்குகளைக் கண்டறியும் வேவுப் பணிகள் அடங்கும். இந்த தாக்குதலின் போது இரு தரப்பிலும் குறைந்தது 13 வீரர்கள் உயிரிழந்தனர்.
2. ஆபரேஷன் ஹாட் பர்சூட்
மணிப்பூரின் சண்டேல் மாவட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கியிருந்து 6 டோக்ரா படைப்பிரிவின் இந்திய இராணுவ அணியின் மீது தாக்குதல் நடத்தியதிற்கு பதிலடியாக, இந்திய 2015 ஆம் ஆண்டு ஜூன் 09 ஆம் தேதி ஆபரேஷன் ஹாட் பர்சூட் என்ற பெயரில் எல்லை தாண்டிய தாக்குதலை நடத்தியது.
3. ஊரி சர்ஜிக்கல் ஸ்டிரைக்
ஜம்மு காஷ்மீரின் ஊரி பகுதியில் உள்ள இந்திய ராணுவ தலைமையகத்தின் மீது பாகிஸ்தானிய தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, 2016 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற பெயரில் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 19 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
4. பாலக்கோடு வான்வழித் தாக்குதல்
பிப்ரவரி 14 ஆம் தேதி பாகிஸ்தானிய தீவிரவாதிகள் புல்வாமாவில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட தாக்குதல் தான் பாலகோட் வான்வழித் தாக்குதல். பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலின் போது வழியில் சென்று கொண்டிருந்த ராணுவ அணியை குறிவைத்து அழித்தது. இதைக் கண்டித்து மேற்கொண்டது தான் இந்த பாலகோட் வான்வழித் தாக்குதல். இது 2019 பிப்ரவரி 26 ஆம் தேதி பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழுவின் பயிற்சி முகாம் என்று கூறப்படும் இடத்தில் இந்தியப் போர் விமானங்களால் நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலாகும்.
5. ஆபரேஷன் சிந்தூர்
சமீபத்தில் பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம்மில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா எடுத்த நடவடிக்கை தான் ஆபரேஷன் சிந்தூர். இதில் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து அழித்தது. இதில் பல பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் லஷ்கர், ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத குழுக்களின் தளங்களாகக் கூறப்படும் முசாபராபாத், கோட்லி, பஹாவல்பூர், ராவலகோட், சக்ஸ்வரி, பீம்பர், நீலம் பள்ளத்தாக்கு, ஜீலம் மற்றும் சக்வால் ஆகிய இடங்களில் உள்ள முகாம்களை இந்தியாவின் 24 துல்லிய ஏவுகணைகள் தாக்கி தரைமட்டமாக்கின.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications