For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகை மாற்றிய சாதனையாளர்களின் வித்தியாசமான தூங்கும் முறைகள் என்ன தெரியுமா?

|

இன்று உலக தூக்க தினம். உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் பிடித்த மற்றும் அவசியமான ஒரு விஷயமென்றால் அது தூக்கம்தான். நல்ல தூக்கம் உள்ளவர்களே உண்மையில் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்பவர்கள். ஒருவரின் ஆரோக்கியமான வாழ்விற்கு நல்ல தூக்கம் என்பதை அடிப்படையான ஒன்றாகும்.

World Sleep Day 2020: Sleep Habits of Highly Successful People

கால வரையறையின்றி தூங்குபவர்கள் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது. தூங்குவதில் ஒரு திட்டமிடலும், ஒழுக்கமும் வேண்டும். உலகில் வெற்றிகரமானவர்கள் என்று அடையாளப்படுத்தப்படுபவர்களின் தூக்க முறையானது சாதாரண மக்களுடன் ஒப்பிடும் போது வித்தியாசமானதாக உள்ளது. இந்த பதிவில் உலகின் முக்கியமானவர்களின் தூங்கும் முறை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பில் கேட்ஸ்

பில் கேட்ஸ்

பில் கேட்ஸை உலகில் தெரியாதவர்கள் யாருமில்லை. உலக பணக்காரர்களில் இவரின் பெயரை தவிர்த்து ஒரு பட்டியலை ஒருபோதும் தயாரிக்க முடியாது. மிகப்பெரிய தொழிலதிபரும், முதலீட்டாளராக உள்ளார். 1975 ஆம் ஆண்டில், கேட்ஸ் மற்றும் பால் ஆலன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவினார். இது உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக மாறியது. இவர் 12 மணி முதல் 7 மணி வரை என ஒரு நாளுக்கு இவர் 7 மணி நேரம் தூங்குகிறார்.

மார்க் ஸுக்கர் பெர்க்

மார்க் ஸுக்கர் பெர்க்

இவருக்கு அறிமுகம் என்பதே தேவையில்லை. பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருக்கும் இவர் இளம் வயதில் உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்தவராவார். இவர் இரவு 12 மணி முதல் காலை 8 மணி வரையென ஒருநாளைக்கு 8 மணி நேரம் தூங்குகிறார்.

டிம் குக்

டிம் குக்

பிரபல அமெரிக்க தொழிலதிபரான டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இதற்கு முன்னால் இவர் தலைமை இயக்க அதிகாரியாக பணியாற்றினார். இவர் 9:30 முதல் 4:30 வரை என ஒரு நாளுக்கு 7 மணி நேரம் தூங்குகிறார்.

MOST READ: கொடூரமாக கொல்லப்பட்ட உலகத்தின் முக்கியமான தலைவர்கள்... உலக வரலாற்றின் கருப்பு பக்கங்கள்...!

இந்திரா நூயி

இந்திரா நூயி

இந்திர கிருஷ்ணமூர்த்தி நூயி இந்தியாவில் பிறந்தவர், அமெரிக்க குடியுரிமை பெற்ற தொழில் அதிபரான இவர் பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக உள்ளார். உலகில் அதிக வருமானத்தை வழங்கும் உணவு மற்றும் குளிர்பான நிறுவனமாக இது உள்ளது. இவர்கள் ஒரு நாளைக்கு 11 மணி முதல் 4 மணி வரை என 5 மணி நேரம் மட்டுமே தூங்குகிறார்.

பராக் ஒபாமா

பராக் ஒபாமா

பராக் ஒபாமா அமெரிக்காவின் 44 வது ஜனாதிபதியாக பணியாற்றிய ஒரு உலக பிரபலமான அரசியல்வாதி ஆவார். அமெரிக்க வெள்ளை மாளிகையை அலங்கரித்த முதல் கருப்பின ஜனாதிபதி இவர்தான். இவர் ஒருநாளைக்கு 1 மணி முதல் 7 மணி வரை என 6 மணி நேரம் தூங்குகிறார்.

பெஞ்சமின் பிராங்க்ளின்

பெஞ்சமின் பிராங்க்ளின்

அமெரிக்காவை உருவாக்கியவர்களில் பெஞ்சமின் பிராங்க்ளின்-க்கு பெரும்பங்கு உள்ளது. பல்துறை அறிஞராக இருந்த பிராங்க்ளின் எழுத்தாளர், அரசியல் கோட்பாட்ட்டாளர், விஞ்ஞானி என பல துறைகளில் நிபுணராக இருந்தார். இவர் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை என 7 மணி நேரம் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

MOST READ: 22 வயதில் தன் உயிரை கொடுத்து தன் பயணிகளை காப்பாற்றிய இந்தியாவின் உண்மையான சிங்கப்பெண் யார் தெரியுமா?

வின்ஸ்டன் சர்ச்சில்

வின்ஸ்டன் சர்ச்சில்

வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு பிரிட்டிஷ் அரசியல்வாதியாக இருந்தார், அவர் 1940 முதல் 1945 வரை யுனைடெட் கிங்டமின் பிரதமராகவும், 1951 முதல் 1955 வரை மீண்டும் பிரதமராக இருந்தார். இவர் அதிகாலை 3 மணி முதல் 8 மணி வரை என 5 மணி நேரம் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

தாமஸ் ஆல்வா எடிசன்

தாமஸ் ஆல்வா எடிசன்

தாமஸ் எடிசன் ஒரு அமெரிக்க கண்டுபிடிப்பாளர் மற்றும் விஞ்ஞானி ஆவார். ஃபோனோகிராப், மோஷன் பிக்சர் கேமரா, மின்விளக்கு என இவரின் கண்டுபிடிப்புகள் உலக வரலாற்றை மாற்றியது. இவர்கள் இரவு 11 முதல் அதிகாலை 4 வர என 5 மணி நேரம் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஜெஃப் பெசோஸ்

ஜெஃப் பெசோஸ்

ஜெஃப் பெசோஸ் ஒரு அமெரிக்க தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர். Amazon.com-ன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இ-காமர்ஸின் வளர்ச்சியில் அவர் மாபெரும் பங்கைக் கொண்டுள்ளார். அவர் இரவு 10 மணி முதல் 5 மணி வரை என 7 மணி நேரம் தூங்குகிறார்.

MOST READ: இந்த ராசிக்காரங்க பண்றதெல்லாமே பொய் சத்தியம்தானாம்.. தெரியாம கூட இவங்கள நம்பிராதீங்க...!

நீல் படேல்

நீல் படேல்

இந்திய இளைஞரான இவர் Crazy Egg, Hello Bar மற்றும் KISSmetrics நிறுவனத்தின் நிறுவனராக உள்ளார். Amazon, NBC, GM, HP மற்றும் Viacom நிறுவனங்களின் வருவாயை அதிகரிக்க இவர் உதவி செய்து கொண்டு இருக்கிறார். இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை என ஒருநாளைக்கு இவர் 8 மணி நேரம் தூங்குகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Sleep Day 2020: Sleep Habits of Highly Successful People

Find out the sleep habits of highly successful people
Desktop Bottom Promotion