Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
தம்பதிகளே! வாஸ்துபடி நீங்க 'இத' செஞ்சா... உங்க திருமண வாழ்க்கை வேற லெவலில் இருக்குமாம் தெரியுமா?
இரும்பு கட்டிலில் உறங்குவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அது உங்களுக்கும் உங்கள் துணைக்கும் நிம்மதியான தூக்கத்தை தராது. இது உங்களுடைய தூக்கத்தை கெடுக்கும். மேலும் பதற்றம் மற்றும் சச்சரவுகளுக்கு இது வழிவகுக்கும்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானது. திருமணம் அவர்களின் வாழ்க்கைக்கு அர்த்தத்தை கொடுக்கிறது. வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வே திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால், எல்லாருடைய திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாகவும் இணக்கமாகவும் இருப்பதில்லை. திருமணத்தைச் சுற்றிலும் பல பிரச்சனைகள் மற்றும் சிக்கல்கள் உள்ளன. இவை ஒவ்வொரு தம்பதிகளையும் நீண்ட காலம் வரை அதிகமாக சோதிக்கலாம். இவர்களுக்கிடையேயான பிரச்சினைகளை அவர்களால் தீர்க்க முடியுமா? வலுவாக இணைந்திருப்பார்களா? அல்லது பரிதாபமாக அவர்களின் திருமண உறவு தோல்வியில் முடியுமா? என்பது அவர்களின் கையில் உள்ளது.

ஒவ்வொரு தம்பதியினரும் தங்கள் திருமணத்தை வலுப்படுத்த விரும்புகிறார்கள். இந்த விஷயத்தில், ஆர்வமுள்ள தம்பதிகள் அனைவருக்கும் வாஸ்து ஒரு பெரிய உதவியாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உங்கள் திருமணத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கும் வாஸ்து குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள். அவற்றை சரி செய்து உங்கள் திருமண உறவில் மகிழ்ச்சியாக வாழுங்கள்.

படுக்கைகளை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும்
இரும்பு கட்டிலில் உறங்குவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அது உங்களுக்கும் உங்கள் துணைக்கும் நிம்மதியான தூக்கத்தை தராது. இது உங்களுடைய தூக்கத்தை கெடுக்கும். மேலும் பதற்றம் மற்றும் சச்சரவுகளுக்கு இது வழிவகுக்கும். மரக்கட்டிலில் தூங்குங்கள். அது உங்களுக்கு நல்ல நிம்மதியான உறக்கத்தை கொடுக்கும். இரண்டு மெத்தைகளை தனித்தனியாக வாங்கி ஒன்றாக இணைக்க வேண்டாம். அதற்கு பதிலாக ஒரு பெரிய மெத்தையை வாங்கி, அதில் தம்பதிகள் இருவரும் தூங்குங்கள்.

சுவர்களில் வைக்க வேண்டிய வண்ணங்கள்
வடகிழக்கு பகுதியில் உள்ள சுவரில் நீலம் அல்லது ஊதா நிறம் இருப்பதை தம்பதிகள் உறுதி செய்ய வேண்டும். அங்குள்ள இடமும் திறந்திருக்க வேண்டும் மற்றும் வெளிச்சம் உள்ளே வர வேண்டும். இது திருமணமான தம்பதிகளிடையே மகிழ்ச்சியான எண்ணங்களையும் தெளிவையும் உறுதி செய்யும். இதனால், தினமும் உங்கள் நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்கலாம்.

பிரதான படுக்கையறை
மாஸ்டர் பெட்ரூம் வீட்டின் தென்மேற்கு பகுதியில் இருக்க வேண்டும். இது ஆணின் சக்தியை சமநிலைப்படுத்துகிறது மற்றும் ஆணை பெண்ணின் பக்கம் சாய்க்கிறது. இது இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரியையும் கொண்டு வருகிறது. இவ்வாறாக படுக்கையை அமைப்பது, திருமணத்தில் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்துகிறது. உங்களுக்குள் நெருக்கம் அதிகரித்து நீண்ட காலம் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழலாம்.

மென்மையான வண்ண விளக்குகள்
மென்மையான அல்லது சூடான நிற விளக்குகள் உங்கள் வீட்டிற்கு சரியான அமைப்பை கொடுக்கும். வெளிர் நிற தாள் கொண்ட விளக்குகள் யாரையாவது திருமணம் செய்ய எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம். மலர் வடிவமைப்புகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மென்மையான வண்ண விளக்குகள் உங்கள் மனநிலையை மாற்றி, உங்கள் துணையுடன் நெருக்கமாக இருக்க உதவும்.

சமையலறை
சமையலறை தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும், ஏனெனில் இது இரு கூட்டாளிகளையும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நிலையானதாக மாற்றும். சமையலறையில் ஆரஞ்சு நிற பெயிண்ட் அடிப்பது, திருமணமான தம்பதிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். குறிப்பாக தென்கிழக்கு திசையில் சமையலறை இருந்தால், நீங்கள் வேற லெவலில் மகிழ்ச்சியாக வாழலாமாம். இது திருமண உறவை ஒளிரச் செய்து தம்பதிகள் இருவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

திரைச்சீலைகள் மற்றும் போர்வைகளின் நிறம்
இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமானது திருமணமான தம்பதியர்களுக்கு மங்களகரமானது என்று கூறப்படுகிறது. போர்வைகள், தாள்கள், திரைச்சீலைகள் போன்றவற்றின் நிறமாக இந்த நிறத்தையே பயன்படுத்துங்கள். ஆனால் அவற்றை சிறிது நேரம் மட்டுமே பயன்படுத்துவதில் கவனமாக இருங்கள். அதை நீடிக்க வேண்டாம்.



Click it and Unblock the Notifications