இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் பயங்கர சுயநலவாதியா இருப்பாங்களாம்... இவங்ககிட்ட உஷரா இருங்க...!

ஒரு சுயநலவாதி மற்றவர்களை விட மேன்மையான உணர்வைக் கொண்டிருப்பார்கள். இது ஆணவம் எனப்படுகிறது. மற்றவர்களை விட தாங்கள் சிறந்தவர்கள் அல்லது தகுதியானவர்கள் என்று ஆணவமாக இருக்கிறார்கள்.

இந்த உலகம் மிகப் பெரியது. நம் வாழ்க்கையில் தினமும் நாம் பல்வேறு வகையான மனிதர்களை சந்திக்கிறோம், பேசுகிறோம் மற்றும் பழகுகிறோம். ஆனால், நாம் சந்திக்கும் எல்லா மனிதர்களுக்கும் இங்கு ஒரே மாதிரியானவர்கள் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நாமும் எல்லாரிடமும் ஒரே மாதிரியாக நடந்துகொள்ள மாட்டோம். முன்பின் தெரியாதவர்களிடம் ஒரு மாதிரியும், நன்றாக பழகியவர்களிடம் ஒரு மாதிரியும், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒரு மாதிரியும் நடந்துகொள்வோம். ஆனால், நம்முடைய ஆளுமை பண்புகள் எல்லாரிடமும் ஒரே மாதிரியாக வெளிப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், அது சுயநலமாக இருந்தாலும், பொதுநலமாக இருந்தாலும் எல்லாரிடமும் ஒரே மாதிரியாகத்தான் வெளிப்படும்.

These Signals From A Selfish Person In Tamil

தேவதை போன்ற மனிதர்கள் முதல் அதிக சுயநலம் கொண்ட நபர்கள் வரை, நம் வாழ்க்கை சில மனிதர்கள் இருக்கலாம். ஆனால், சுயநலவாதிகளுடன் இருப்பது உங்களுக்கு நல்லதல்ல. அவர்கள் உங்களை பல்வேறு பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களில் மாட்ட வைக்க வாய்ப்புள்ளது. ஆனால், யார் சுயநலவாதி என்பதை அடையாளம் காண, அவர்களிடம் இருக்கும் அறிகுறிகளை நீங்கள் அடையாளம் காண வேண்டும். அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மற்றவர்களின் தேவைகளை கருத்தில் கொள்ள மாட்டார்கள்

மற்றவர்களின் தேவைகளை கருத்தில் கொள்ள மாட்டார்கள்

சுயநலமாக சிந்திப்பவர்கள் மற்றும் சுயநலவாதியாக இருப்பவர்கள் எப்போதும் மற்றவர்களின் உணர்வுகள் அல்லது தேவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமாட்டார்கள். தங்களுக்கு மட்டுமே நன்மை பயக்கும் முடிவுகளை எடுக்கலாம் அல்லது செயல்களைச் செய்ய விரும்பலாம். மற்றவர்களை பற்றி யோசிக்காதவர்கள் சுயநலவாதிகளாக அடையாளம் காணப்படுகிறார்கள்.

சமரசம் செய்து கொள்வதில்லை

சமரசம் செய்து கொள்வதில்லை

சுயநலவாதிகள் எப்போதும் எந்த விஷயத்திலும் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மற்றவர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை விட தங்கள் சொந்த தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். மேலும் மற்றவர்களின் நலனுக்காக அவர்கள் விரும்பும் ஒன்றை விட்டுவிட தயாராக இருக்க மாட்டார்கள்.

ஆணவம்

ஆணவம்

ஒரு சுயநலவாதி மற்றவர்களை விட மேன்மையான உணர்வைக் கொண்டிருப்பார்கள். இது ஆணவம் எனப்படுகிறது. மற்றவர்களை விட தாங்கள் சிறந்தவர்கள் அல்லது தகுதியானவர்கள் என்று ஆணவமாக இருக்கிறார்கள். இது அவர்களை மட்டுமல்லாது அவர்களை சார்ந்தவர்களுக்கும் பிரச்சனையையும் மன கஷ்டத்தையும் ஏற்படுத்தலாம்.

சுயநலம்

சுயநலம்

மற்றவர்கள் பற்றி எதையும் யோசிக்காமல், தங்கள் அனுபவங்களில் ஆர்வம் காட்டாமல் தங்களைப் பற்றியும் தங்கள் சாதனைகள் அல்லது அனுபவங்களைப் பற்றியும் பேசும் போக்கு அவர்களிடம் அதிகமாக இருக்கலாம். எப்போதும் தான், தனக்கு என்ற எண்ணங்களையும் செயல்களையும் சுயநலவாதிகள் கொண்டிருப்பார்கள். தங்களை பற்றி பெருமையாக பேசுவது அவர்களுக்கு வழக்கமாக இருக்கும்.

நன்றி மனப்பான்மை இல்லை

நன்றி மனப்பான்மை இல்லை

ஒரு சுயநலவாதி, மற்றவர்களிடமிருந்து பெறும் உதவி அல்லது ஆதரவிற்காக நன்றியையோ பாராட்டுதலையோ மற்றவர்களிடம் வெளிப்படுத்த மாட்டார்கள். அவர்கள் எப்போதும் உங்களை ஒரு உதவி செய்யும் ஆளாக மட்டுமே எடுத்துக்கொள்வார்கள், உங்களுக்கு ஏதேனும் ஒன்று என்றால் அதை கண்டுகொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பல உதவிகளை உங்களிடம் கேட்கலாம், பெறலாம். ஆனால் அந்த உதவிகள் உங்களுக்கு திரும்பக் கிடைக்காது.

சுயவிளம்பரம்

சுயவிளம்பரம்

சுய விளம்பரத்திற்கும் சுய நம்பிக்கைக்கும் வேறுபாடு உள்ளது. ஒருவர் தங்கள் திறமைகளை அடுத்தவர் முன்பு வெளிப்படுத்துவது அல்லது கூறுவது தவறில்லை. ஆனால், மற்றவர்களை தாழ்த்தி, தாங்கள்தான் சிறந்தவர் உயர்ந்தவர் என்று கூறுவது சுயவிளம்பரம். இது மிகத் தவறான செயல். சுயவிளம்பரம் செய்துகொள்ளும் நபர், மிக சுயநலவாதியாக இருப்பார்கள்.

மற்றவர்களின் எல்லைகளை புறக்கணித்தல்

மற்றவர்களின் எல்லைகளை புறக்கணித்தல்

சுயநலவாதிகள் மற்றவர்களின் எல்லைகளை கடந்து செல்லலாம் அல்லது அவர்களை முற்றிலும் புறக்கணிக்கலாம். மற்றவர்களின் வசதி அல்லது பாதுகாப்பை விட தங்கள் சொந்த தேவைகள் மற்றும் ஆசைகள் முக்கியம் என்று நம்புகிறார்கள். சுயநலவாதிகள் தங்கள் சொந்த எல்லைக்குள் யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். இதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பார்கள். ஆனால் அது மற்றவர்களுக்கு என்று வரும்போது, அவர்களின் எல்லைக்குள் இவர்கள் செல்ல யோசிக்க மாட்டார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion