Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
உலகையே தனது கவர்ச்சியால் மயக்கிய மர்லின் மன்றோவின் வாழ்க்கையின் இருண்ட பக்கங்கள்...!
மர்லின் மன்றோ 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான மற்றும் சினிமாவின் அடையாளமாக திகழ்ந்தவர். சினிமா இருக்கும்வரை மர்லின் மன்றோவின் பெயர் நிலைத்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
மர்லின் மன்றோ 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான மற்றும் சினிமாவின் அடையாளமாக திகழ்ந்தவர். சினிமா இருக்கும்வரை மர்லின் மன்றோவின் பெயர் நிலைத்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அவர் திரைப்படங்களில் நடித்த காலத்தில் அவர் திறமையான நடிகையாகவும், பாடகியாகவும் கருதப்படவில்லை, மேலும் மற்ற நடிகைகளை ஒப்பிடும்போது இவருக்கு குறைவான ஊதியமே வழங்கப்பட்டது.

இன்று மர்லின் மன்றோ மிகவும் அடையாளம் காணக்கூடிய மற்றும் புகழ்பெற்ற ஒருவர், பலரால் விரும்பப்படுபவராக உள்ளார். அவர் சிறந்த நடிகையாக இருந்த போதிலும் அவரது கவர்ச்சியும், அழகும் அவருக்கு பிற்காலத்தில் பெரும்புகழை தேடித்தந்தது. உலகப்புகழ் பெற்ற அனைவருக்குமே ஒரு கருப்பு பக்கம் இருக்கும், ஆனால் மர்லின் மன்றோவின் கருப்பு பக்கம் சோகம் நிறைந்ததாக இருந்தது. இந்த பதிவில் மர்லின் மன்றோ பற்றிய சில ஆச்சரியமளிக்கும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

கடினமான குழந்தைப்பருவம்
மர்லின் மன்றோவின் உண்மையான பெயர் நார்மா ஜீன் பேக்கர். குழந்தைப்பருவத்தில் அவர் அனாதை இல்லத்தில் வசித்து வந்தார். அவரது தாயார் சித்த பிரம்மையால் பாதிக்கப்பட்ட பிறகு அவர் 11 வளர்ப்பு பெற்றோர்களை பெற்றார். ஒரு பெற்றோரிடம் இருந்து இன்னொரு பெற்றோரிடம் தொடர்ந்து மாறியது அவரது கல்வியை பாதித்தது. இந்த காலக்கட்டத்தில் அவர் பாலியல்ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டார்.

திருமணம்
தனது 16 வது பிறந்த நாளுக்குப் பிறகு அவரது வளர்ப்பு பெற்றோர் கலிபோர்னியாவிற்கு சென்றனர். மீண்டும் ஒரு வளர்ப்பு பெற்றோர் மற்றும் அனாதை இல்லத்தை தவிர்ப்பதற்காக அவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். எனவே அவர் ஜேம்ஸ் டகெர்டியை மணந்தார், ஆனால் அவர் 1943 இல் யு.எஸ். மெர்ச்சண்ட் மரைனில் சேர்ந்தபோது அவரது திருமணம் முடிவுக்கு வந்தது. கடினமான குழந்தைப்பருவமும், தோல்வியுற்ற திருமணமும் அவரை வலிமையான மற்றும் நெகிழ்ச்சியான பெண்ணாக மாற்றியது. ஆனால் இந்த அனுபவங்கள் அவரது பாதுகாப்பின்மை மற்றும் குறைபாடுகள் அவரை 20 ஆம் நூற்றாண்டின் சோகமான பெண்ணாக மாற்றியது.

அவருக்கு வைரங்கள் பிடிக்காது
மர்லின் மன்றோ, "டயமண்ட்ஸ் ஆர் எ கேர்ள்ஸ் பெஸ்ட் ஃப்ரெண்ட்" என்ற பாடலைப் பாடுவதில் பிரபலமானவர் என்றாலும், அவர் உண்மையில் விலையுயர்ந்த நகைகளின் ரசிகர் அல்ல. அவர் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் அவரது இரண்டாவது கணவரான ஜோ டிமாஜியோவால் வழங்கப்பட்ட முத்து மற்றும் ஒரு வைர மோதிரத்தைத் தவிர்த்த நகைகள் மட்டுமே.

மத மாற்றங்கள்
மர்லின் மன்றோ 18 வயதில் ஒரு கிறிஸ்தவராக ஆனார். அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில் அவர் மாற்று ஆன்மீகத்தில் ஈடுபட்டார், ருடால்ப் ஸ்டெய்னர் வழங்கிய தத்துவமான மானுடவியல் ஆர்தர் மில்லருடன் 1956 ஆம் ஆண்டு திருமணத்திற்கு முன்பு அவர் யூத மதத்திற்கு மாறினார்.

அவரது ஆடையின் மதிப்பு பல கொடிகள்
மர்லின் மன்றோவின் ஆடைகளின் மதிப்பு இன்று பல கோடிகளாகும். ஜான் எஃப். கென்னடிக்கு "பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு. ஜனாதிபதி" என்று பாடியபோது அவர் அணிந்திருந்த பிரபலமான உடை உலகையே ஆச்சரியப்படுத்தும் விலைக்கு விலைபோனது. அமெரிக்க மதிப்பில் 4.8 மில்லியனுக்கு போனது. இதன் இப்போதைய மதிப்பு கிட்டதட்ட 35 கோடி ஆகும். இது 20 ஆம் நூற்றாண்டின் நாகரிகத்தை வரையறுக்கும் ஆடைகளில் ஒன்றாகும், இது சுத்தமான டல்லே வடிவமைப்பு, சிறிய, ஒளிரும் படிகங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

நிர்வாண படங்களுக்கு வெறும் 50 டாலரே கொடுக்கப்பட்டது
பிளேபாய் இதழில் வெளிவந்த பிரபலமான நிர்வாண புகைப்படங்களுக்கு மர்லின் மன்றோவுக்கு $ 50 மட்டுமே வழங்கப்பட்டது. இந்த புகைப்படங்கள் முதலில் 1949 ஆம் ஆண்டில் புகைப்படக் கலைஞர் டாம் கெல்லி என்பவரால் எடுக்கப்பட்டது மற்றும் அவை காலெண்டரில் பயன்படுத்தப்பட்டன. பல வருடங்கள் கழித்து ஹக் ஹெஃப்னர் புகைப்படங்களை $ 500 க்கு வாங்கி அவற்றை பிளேபாய் இதழின் தொடக்க இதழில் பயன்படுத்தினார் மற்றும் இந்த புகைப்படங்களிலிருந்து மில்லியன் கணக்கில் சம்பாதித்தார்.

புத்தக ஆர்வம்
மர்லின் மன்றோவின் புத்தக அலமாரி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இறக்கும் போது, பல முதல் பதிப்புகள் உட்பட 400 க்கும் மேற்பட்ட புத்தக தொகுதிகளை அவர் வைத்திருந்தார். அவர் எடுத்த ஆயிரக்கணக்கான புகைப்படங்களில், அவர் குறிப்பாக தனது எழுத்தைக் காட்டிய புகைப்படங்களை விரும்பினார்.

அவரது கல்லறைக்கு 20 ஆண்டுகள் மலர் வைக்கப்பட்டது
இறப்பதற்கு முன், மர்லின் மன்றோ ஜோ டிமாஜியோ அவருக்கு முன் இறந்தால் ஒவ்வொரு வாரமும் தனது கல்லறையில் பூக்களை வைப்பதாக உறுதியளித்தார். அவர் தனது வாக்குறுதியைக் கடைப்பிடித்தார், அரை டஜன் சிவப்பு ரோஜாக்களை வாரத்திற்கு மூன்று முறை 20 வருடங்களாக அவரது கல்லறையில் வைத்தார்.

குழந்தை ஆசை
கதையாசிரியர் ஆர்தரை திருமணம் செய்து கொண்ட பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆசை மர்லின் மன்றோவிற்கு வந்தது. குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் ஆசையாக இருந்தது. ஆனால் எக்டோபிக் பிரகனன்சி என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் கருச்சிதைவு ஏற்பட்டது. இறுதிவரை அவரின் குழந்தை ஆசை நிறைவேறவில்லை.

விருதுகள்
மர்லின் மன்றோ உலகப்புகழ் பெற்ற நடிகையாக இருந்த போதிலும், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருந்த போதிலும் அவரது நடிப்புத் திறனுக்காக ஒருபோதும் ஆஸ்கார் விருது பெறவில்லை, அதற்காக பரிந்துரைக்கப்படவும் இல்லை. ஆனால் சம் லைக் இட் ஹாட் என்ற படத்தில் சுகர்கேன் என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக கோல்டன் குளோப் விருது பெற்றார்.



Click it and Unblock the Notifications











