Latest Updates
-
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க -
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
தீபாவளியப்ப இதுல ஒரு பொருள் வாங்குனாலும் உங்களுக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகுமாம் தெரியுமா?
தீபாவளியின் போது நாம் வாங்கும் சில பொருட்கள் நமது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? பண்டிகையின் போது வாங்கும் இதுபோன்ற பொருட்கள் நமது வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கும்.
ஒவ்வொரு பண்டிகையின் போதும் நாம் வாங்க வேண்டிய பொருட்கள் என்று பல இருக்கும். வீட்டு அலங்கார பொருட்கள் முதல் நமது தனிப்பட்ட தேவைகள் வரை நாம் நிறைய ஷாப்பிங் செய்கிறோம் ஆனால் நமது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் பொருட்களை வாங்குவது பற்றி நாம் எப்போதாவது சிந்தித்து இருக்கிறோமா?

தீபாவளியின் போது நாம் வாங்கும் சில பொருட்கள் நமது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? உண்மைதான் பண்டிகையின் போது வாங்கும் இதுபோன்ற பொருட்கள் நமது வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலையும், அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும். இந்த பதிவில் எந்தெந்த பொருட்கள் உங்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.

உங்கள் துறை சார்ந்த பொருட்கள்
எழுத்தாளர்களுக்கு பேனா, ஓவியர்களுக்கு தூரிகை போன்ற அவரவர் துறை சார்ந்த பொருட்களை வாங்குவதை உறுதிசெய்து கொள்ளவும். தீபாவளி பூஜையின் போது இந்த பொருட்களை உங்கள் பூஜையுடன் சேர்த்து வைத்துக்கொளுங்கள், இது உங்கள் துறையில் உங்களுக்கு பெரிய முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

துடைப்பம்
இது உங்களுக்கு மிகவும் விசித்திரனமானதாக தெரியலாம், ஆனால் தீபாவளியின் போது துடைப்பம் வாங்குவது மிகவும் புனிதமானதாககருதப்படுகிறது. இது ஒருவரின் வீட்டில் இருக்கும் வறுமை மற்றும் துன்பங்களை விரட்டும் என்று கூறப்படுகிறது. இது உங்கள் செழிப்புக்கான வாய்ப்புகளை பிரகாசமாக்குகிறது.

எலக்ட்ரானிக் பொருட்கள்
எலக்ட்ரானிக்ஸில் முதலீடு செய்ய நீங்கள் திட்டமிட்டால் இதுவே சிறந்த நேரம், ஏனெனில் இந்த ஆண்டின் பெரும்பாலான விற்பனைகள் இந்த நாளில்தான் நடக்கும். எனவே, நீங்கள் மின்னணு பொருட்களை வாங்க காத்திருந்தால், அதை வாங்க இதுவே சிறந்த நாள். நேர்மறை ஆற்றலைப் பெற, நீங்கள் அவற்றை வீட்டின் வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும்.

கணக்கு புத்தகம்
வியாபாரம் தொடர்பான வேலைகளில் இருப்பவர்கள் இந்த நாளில் கணக்கு புத்தகம் வாங்குவது நல்லது. அவர்களின் கணக்குகளை பராமரிக்கவும், புதிய கணக்குகளை தொடங்கவும் இதுதான் சிறந்த நாளாகும். சிறந்த முடிவுகளுக்கு, அவர்கள் அதை வீட்டின் மேற்கு திசையில் வைக்க வேண்டும்.

வெள்ளி பாத்திரங்கள்
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின்போது, மக்கள் பாத்திரங்களாக வாங்குவதைக் காணலாம், இதனை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிர்ஷ்டம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த நாளில் வெள்ளி பாத்திரங்களை வாங்க வேண்டும். நேர்மறை ஆற்றலை ஈர்க்க, ஒருவர் தங்கள் வீடுகளின் கிழக்கு திசையில் அவற்றை வைத்திருக்க வேண்டும்.

தங்க நாணயம்
லக்ஷ்மி தேவியுடன் பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தை வாங்க வேண்டும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. உங்களால் தங்க நாணயத்தை வாங்க முடியாவிட்டால் குறைந்தது ஒரு லக்ஷ்மி தேவி படத்தை வாங்கி உங்கள் லாக்கரில் வைக்கவும்.

சங்கு
உங்கள் வீட்டில் சங்கு வைத்திருப்பது உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இது அனைத்து சடங்குகளுடன் வழிபடும்போது, அது உங்கள் வீடு அல்லது பணியிடத்தில் நேர்மறை ஆற்றலை உருவாக்குகிறது. தீபாவளியின் போது இதனை தங்கள் வீட்டில் வைத்திருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் எந்த பணக்கஷ்டத்தையும் சந்திக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

தக்ஷினவர்த்தி சங்கு
இந்த சங்கு மிகவும் அரிதான ஒன்றாகும், இது லக்ஷ்மி தேவியுடன் நெருங்கிய தொடர்புடையது. விஷ்ணு மற்றும் லக்ஷ்மி இருவரும் தங்கள் கையில் இதனை எப்போதும் வைத்திருப்பார்கள். உங்கள் வாழ்க்கையில் செல்வம் அதிகரிக்க இதனை உங்கள் வீட்டில் வைத்துக்கொள்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இந்த சங்கில் பால் ஊற்றி அதனை உங்கள் வீட்டின் அனைத்து மூலைகளிலும் தெளிக்கவும். இது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கும்.



Click it and Unblock the Notifications
