Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
Republic Day 2025 Wishes: குடியரசு தினம் அன்னிக்கு உங்களுக்கு பிடிச்சவங்ககிட்ட இத சொல்ல மறந்துடாதீங்க...!
Republic day 2025 Wishes In Tamil: நமது தேசியக் கொடி வானத்தில் உயர்ந்து பறப்பதை காட்டிலும் அழகான மற்றும் பெருமையான தருணம் வேறு என்ன இருக்கிறது? தேசிய கீதமான 'ஜன கண மனா'வை நாம் கேட்கும் போதெல்லாம் நாட்டுபற்று நம்முள் எழும்.
ஒவ்வொரு இந்திய குடிமகனும் நாம் இந்திய நாட்டில் பிறந்ததற்கு பெருமை படுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி இந்தியா தனது குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நாளில் நாடு முழுவதும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவதைக் காணலாம்.

மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் மற்றும் நல்லிணக்கத்துடன் இந்நாளை கொண்டாடுகிறார்கள். குடியரசு தினத்தன்று உங்கள் அன்புக்குரியவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க உங்களுக்கு உதவும் வகையில் எழுச்சியூட்டும் சில வாழ்த்துக்களை இக்கட்டுரையில் பட்டியலிட்டுள்ளோம்.

வாழ்த்து 1
உலகிலேயே மிக நீண்ட அரசியலைப்பு சட்டத்தை எழுதிய டாக்டர். பி.ஆர். அம்பேத்கரை இந்நன்னாளில் நினைவுக்கூறுவோம். அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 2
அரசியலமைப்பு சட்டம் பிரிவு-15இன் படி மதம், சாதி, இனம், மொழி, தொழில், பாலினம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் எந்தவொரு குடிமகனுக்கும் பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறுகிறது. குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3
அனைவரும் சமம் என்ற ஜனநாயக நாட்டில் வாழும் இந்திய குடிமக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4
ஜனநாயகம் மலர்ந்த இன்நன்னாளில் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 5
வேற்றுமையில் ஒற்றுமையும், பன்முக கலாச்சாரமும் நமது தேசத்தின் இருவிழிகளாக இருக்கின்றன. அவற்றை பாதுகாப்பதே நமது நோக்கம் என்று உறுதிமொழி ஏற்போம். குடியரசு தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 6
நாட்டை சீரழிக்கும் மதவெறி, சாதிவெறி, பயங்கரவாதம் ஆகியவற்றை வீழ்த்தி நமது முன்னோர்கள் பெற்றுத்தந்த சுதந்திரத்தை பாதுகாத்து நாட்டின் வளர்ச்சியை ஒருங்கிணைத்து முன்னெடுக்க இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம். குடியரசு தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7
இந்த நாளில், உங்கள் தாய்நாட்டின் மகிழ்ச்சியான தருணங்களை நீங்கள் பாதுகாப்பீர்கள் என்றும் அதை எல்லா பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாப்பீர்கள் என்றும் உறுதியளிக்க வேண்டும். 2024 இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8
இந்த தேசத்தை எப்படி நேசிக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் மாணவருக்கு கற்பிக்கட்டும். ஒவ்வொரு பெற்றோரும் தனது பிள்ளைகளுக்கு கற்பிக்கட்டும். நம் தேசத்தின் அழகை வளர்க்கட்டும். 75ஆவது குடியரசு தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9
இந்த குடியரசு தினத்தன்று நம் நாட்டின் சுதந்திர போராளிகளின் வெற்றியை நினைவு கூர்ந்து மகிழ்கிறோம். அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். ஜெய்ஷிந்த்!

வாழ்த்து 10
குடியரசு தினத்தின் மகிமை என்றென்றும் நம்முடன் இருக்கட்டும். குடியரசு தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 11
இந்த குடியரசு தினத்தன்று, நம் நாட்டின் பொன்னான வரலாறு மற்றும் பாரம்பரியத்தை நினைவில் கொள்வோம். இந்த நாளில் நம் தேசத்தைப் பற்றி பெருமைப்படுவோம். குடியரசு தின வாழ்த்துக்கள்!



Click it and Unblock the Notifications