Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை நெஜத்துல கவுன்சிலராமே... அவர பத்தி இன்னும் பல சுவாரஸ்யங்கள் இதோ...
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடினை விஜே சித்ரா பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்க இருக்கிறோம். அவருடைய படிப்பு, குடும்பம் முதல் தொலைக்காட்சி பயணங்கள் வரை முழுமையான தொகுப்பாக இது அமையும்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக தன்னுடைய நடிப்புத் திறனால் கவர்ந்திழுக்கும் நடிகை சித்ரா ஒரு விஜே என்பது நமக்குத் தெரிந்தது தான். ஆனால் அவர் அதையும் பல சீரியல்கள், நிகழ்ச்சித் தொகுப்பு மட்டுமின்றி பல்வேறு விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
இது மட்டுமில்லாமல் இவர் ஒரு சிறந்த டான்சர். அதையெல்லாம் விட இவர் ஒரு சைக்காலஜிஸ்ட்டாம். இதுபோன்று இவரைப் பற்றி பேச இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவரைப் பற்றிய முழுமையான சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

குடும்பம்
இவர் பிறந்தது 1992 ஆம் வருடம் மே மாதம் 2 ஆம் தேதி. இவருக்கு ஒரு அண்ணனும் ஒரு அக்காவும் இருக்கிறார்கள். சித்ரா வயிற்றில் குழந்தையாக இருக்கும்போது இரண்டு குழந்தை போதும் என்று கருவை கலைக்க முயற்சி செய்தார்களாம். ஆனாலும் போராடி பிறந்திருக்கிறார் சித்து. ச்ச.. இப்படியொரு அழகான குழந்தைய யாராவது வேண்டாம்னு சொல்ருவாங்களா? தனக்காக கஷ்டப்பட்ட குடும்பத்தை ஓஹோன்னு வாழ வெச்சிக்கிட்டு இருக்காங்க.

படிப்பு
இவர் முதுகலை வரை படித்திருக்கிறார். தன்னுடைய பிஎஸ்சி இளங்கலைப் பட்டத்தை டாக்டர் எம்ஜிஆர் ஜானகி பெண்கள் கலை அறிவியல் கல்லூரி, சென்னையிலுமு் அதையடுத்து 2012 - 14 ஆம் ஆண்டு எம்எஸ்சி சைக்காலஜி எஸ்ஐடி (SIT) காலேஜ் சென்னையிலும் முடித்திருக்கிறார். இவர் பரம்பரையிலேயே (குடும்பம்) முதல் பட்டதாரி இவர் தானாம். எவ்வளவு பெருமையான விஷயம்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர்
தான் முதுநிலை எம்எஸ்சி படித்துக் கொண்டிருந்த நேரத்திலேயே மாடலிங் மற்றும் டீவி நிகழ்ச்சிகளில் ஆங்கராகப் பணியாற்றத் தொடங்கினார். முதன் முதலாக இவர் விஜே வாக சேர்ந்தது மக்கள் தொலைக்காட்சியில் தான். இவருடைய முதல் நிகழ்ச்சி என்றால் அது மக்கள் டீவியில் பத்து நிமிடக் கதைகள் என்னும் நிகழ்ச்சி தான். அதைத் தொடர்ந்து ஷாப்பிங் ஜோன் போன்ற நிகழ்ச்சிகளில் விஜேவாகப் பணியாற்றினார்.
அடுத்தடுத்து சட்டம் சொல்வது என்ன?, நண்பேன்டா, ஊர் சுத்தலாம் வாங்க, நொடிக்கு நொடி அதிரடி, என் சமையலறையில், விளையாடு வாகை சூடு போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்தார்.
இவர் நல்ல தமிழ் உச்சரிப்பு செய்யத் தெரிந்த தொகுப்பாளினி, பல அலுவலக ரீதியான வலைத்தளங்களிலும் இவர் தொகுப்பாளராக இருக்கிறார்.

விளம்பரப் படங்கள்
சித்ரா நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். அதில் மிக முக்கியமானவையாக சொல்ல வேண்டுமென்றால் ஜெயச்சந்திரன் சில்க்ஸ், சென்னை சில்க்ஸ், சில எண்ணெய் கம்பெனி விளம்பரங்கள், காவேரி மருத்துவமனை பற்றிய விளம்பரம் ஆகிய விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார்.

சீரியல்கள்
நிறைய பிரபலமாக ஓடிய மெகா தொடர்களில் சின்னத் திரை நடிகையாக மாறினார் சித்ரா. அதில் குறிப்பாக, 2014 ஆம் ஆண்டு முதன் முதலில் ஜெயா டீவியில் மன்னன் மகள் என்னும் சீரியலில் வைஷாலி என்னும் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, சன் டீவியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் பெரிய பாப்பா கதாபாத்திரம் ஏற்று நடித்தார்.
அடுத்ததாக மிக பிரபலமான விஜய் டீவி சீரியலான சரவணன் மீனாட்சி சீசன் 2 -இல் வேட்டையனின் தோழி கதாபாத்திரத்திலும் சீசன் 3 இல் பேய் கேரக்டரிலும் நடித்திருக்கிறார். அடுத்து ஜீ தமிழில் டார்லிங் டார்லிங் சீரியல், கலர்ஸ் தமிழில் வேலுநாச்சி சீரியல் என சீரியல்களில் பிஸியான தேர்ந்த நடிகையாக மாறியிருக்கிறார். தற்போது இவர் நடித்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கும் இவரும் இவருடைய ஜோடியான கதிரையும் பார்ப்பதற்காகவே இந்த சீரியலை பலரும் பார்க்கிறார்கள்.

டான்சர்
சீரியலில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தாலும் இவர் மிகச்சிறந்த டான்சர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஜீ தமிழில் நடத்தப்பட்ட டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் அதைத் தொடர்ந்து நண்பேன்டா மற்றும் ஜீ டான்ஸ் லீக் போன்ற நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராகப் பங்கேற்றிருக்கிறார். அதோடு, சமீபத்தில் விஜய் டீவியில் நடந்து முடிந்திருக்கிற ஜோடி (fun unlimited) நிகழ்ச்சியில் பைனல்ஸ் வரைக்கும் வந்திருக்கிறார். மிக நனிளத்துடன் நேர்த்தியாக ஆடக் கூடியவர்.

சிலம்பம் சுற்றுவது
இவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை மாதிரி ரொம்ப சாதுவாக பெண்ணாக நினைத்துவிடாதீர்கள். இவருக்கு மிக நன்றாக சிலம்பம் சுற்றத் தெரியும். அது எப்ப கத்துக்கிட்டாங்கன்னு கேட்கறீங்களா? அது அவர் ஜீ தமிழில் நடித்த வேலுநாச்சி என்னும் சீரியலில் வேலுநாச்சியாக நடித்த போது அந்த கதாபாத்திரத்துக்கு தேவை என்பதற்காக முறையாக சிலம்பம் கற்றிருக்கிறார். அதேபோல் மரம் ஏறவும் கற்றுக் கொண்டிருக்கிறார்.

கோவக்கார கிளி
சித்துவுக்கு பார்க்கத்தான் சிரிச்ச முகத்தோட இருக்காங்க. ஜாலியா பொண்ணு தான். ஆனால் அம்மணிக்கு மூக்குக்கு மேல கோவம் வருமாம். அப்படி வந்தால் யார்னு கூட பாக்க மாட்டாங்களாம். நடு ரோடா இருந்தா கூடு சட்டைய பிடிச்சு அடிச்சிடுவாங்களாம். அப்படி அவர் காரில் போகும்போது பின்னால் வந்து தெரியாமல் இடித்து பலமா அடி வாங்குன பசங்க லிஸ்ட் ரொம்ப பெரிசாம்.

விஜய் ரசிகை
நம்ம சித்ரா இளைய தளபதி விஜய்யோட தீவிர ரசிகையாம். இவர் டீவிக்குள் நுழைவதற்குள முன்னால், நண்பர் படம் ரிலீசான புதிதில் விஜய் டீவியில் விஜய்யை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள். அதை கேள்விப்பட்டு எப்படியாவது அந்த நிகழ்ச்சியில் கலந்து ஒரு பிரேமிலாவது வந்துவிட வேண்டும் என்று ஓடி வந்து கலந்து கொண்டாராம்.

பாடகி
சித்து இனிமையாகப் பாடுவாராம். அதனால் கூடிய விரைவில் பிரபல இசையமைப்பாளர் ஒருவரின் இசையில் சினிமாவில் ஒரு பாடல் பாடப் போவதாகவும் செய்திகள் கசியுது.

கவுன்சிலிங் சித்ரா
இதெல்லாம் கூட பரவாயில்ல. நம்ம சித்து சிறந்த கவுன்சிலர் என்று பெயர் வாங்கியிருக்கிறாராம். அது உங்களுக்குத் தெரியுமா, கவுன்சிலர் என்றதும் ஏதோ வார்டு கவுன்சிலர்னு நெனச்சிடாதீங்க. இவர் எம்எஸ்சி சைக்காலஜி படிச்ச சைக்காலஜிஸ்ட். மன அழுத்தத்தில் இருக்கிறவர்களுக்கு சிறப்பாக கவுன்சிலிங் கொடுப்பாராம். சமீபத்தில் மர்மமான முறையில் சின்னத்திரை நடிகர்களின் தற்கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் மன வருத்தத்தில் இருக்கும் சின்னத்திரை நடிகர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கிறாராம். அதனால் சின்னத்திரை நடிகர்கள் பிரச்சினை என்றால் சித்துவைத் தேடி ஓடுகிறார்களாம்.



Click it and Unblock the Notifications












