For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விஜய்சேதுபதியுடன் நடிக்கும் குட்டி சொர்ணாக்கா... இன்னும் என்னலாம் பண்றார்? முழு விவரம் உள்ளே...

By Mahi Bala
|

தங்களை எப்படியாவது பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும் லட்சக்கணக்கில் செலவு செய்து அலப்பறைகள் கூட்டுவதைப் பார்த்திருப்போம்.

ஊரில் நாலு பேர் தன்னைப் பற்றி பேச வேண்டும் என்பதற்காக அவர்கள் கொடுக்கும் அலம்பல், சலம்பல்களுக்கு அளவே இருக்காது. ஆனால் சிலரோ திடீரென வெளி உலகத்தில் பயங்கர பேமஸ் ஆகிவிடுவார்கள்.

அப்படி ஆவோமென்று அவர்களும் நினைத்திருக்க மாட்டார்கள். பைசா செலவில்லாமல் தன்னிடம் இருக்கும் ஏதோ ஒரு ஈர்ப்பால் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டுவிடுவார்கள். அப்படி திடீரென பேமஸாகி நம் எல்லோர் மனதையும் கட்டிப் போட்டவர்தான் நம்ம குட்டி சொர்ணாக்கா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குட்டி சொர்ணாக்கா

குட்டி சொர்ணாக்கா

Image Courtesy

நம் எல்லோராலும் செல்லமாகக் குட்டி சொர்ணாக்கா என்று அழைக்கப்படுவபவர் தான் இந்த சுட்டிப்பெண். இவர் திடீரென சுாசியல் மீடியாக்களில் யாரோ ஒருவரால் எடுத்து வெளியிடப்பட்ட விடியோ மூலம் ஓவர் நைட்டில் படு பேமஸாகிவிட்டார். நிறைய பேர் சமூக வலைத்தளங்களில் இந்த பெண் இப்படி அறிவாக பேசுகிறாரே இவர் உண்மையிலேயே சிறுமியா என்றெல்லாம் சந்தேகத்தை எழுப்பி, தங்களுடைய உற்சாாகத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

MOST READ: இந்த 2019 இல் மோடி அல்லது ராகுல் - யாரோட ஜாதகம் (நட்சத்திரம்) ஜோரா இருக்கு?

முதல் விடியோ

முதல் விடியோ

Image Courtesy

நம்ம சொர்ணாக்கா இப்ப தான் திடீர்னு பேமஸாகிட்டாங்க. ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே நம்ம சொர்ணாக்காவின் முதல் விடியோ வெளியானது. அதில் அழகான குட்டிப்பெண் போல பிங்க் கலர் கௌன் அணிந்து கொண்டு, என்னை போட்டோ எடுக்கணும்னா என்னை கல்யாணம் பண்ணிக்கோ இல்லையென்றால் போட்டோ எடுக்காத என்று தன்னை விடியோ எடுக்கும் நபரிடம் கூறுகிறார்.

சொர்ணாக்காவின் பெயர்

சொர்ணாக்காவின் பெயர்

Image Courtesy

இந்த பெண்ணை குட்டி சொர்ணாக்கா என்றே நாம் அழைத்து அவருடைய பெயரைக் கேட்கத் தவறிவிடுகிறோம். நம்ம குட்டி சொர்ணாக்கா பேரை கேட்டீஞ்கன்னா அசந்து போய்டுவீங்க. அவருடைய பெயர் ஜெயலலிதாவாம். இது அவர் பேமஸான பின் வைத்த பெயர் இல்லை. இவருடைய முதல் விடியோவிலேயே விடியோ எடுக்கும் நபர் உன் பெயர் என்ன என்று கேட்டதற்கு ஜெயலலிதா என்று தான் குறிப்பிடுகிறார்.

யார்? எந்த ஊர்?

யார்? எந்த ஊர்?

Image Courtesy

நம்ம சொர்ணாக்காவை பலரும் சிறுமி என்று நினைத்துக் கொண்டு தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம்ம இவருக்கு வயது 22 ஆகிறதாம். உடல் வளர்ச்சி குன்றியதால் சிறுமி போன்ற தோற்றத்தில் இருக்கிறார். இவருடைய ஊர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி. எதார்த்தமாக விடியோ எடுத்து வெளியிட அது வைரலாகி இப்போது டிரெண்டிங் பர்சனாலிட்டியாக மாறிவிட்டார் நம்ம சொர்ணாக்கா.

காதல்னா என்ன?

காதல்னா என்ன?

Image Courtesy

தன்னை வீடியோ எடுக்கும் அதே ஊர் நபரைப் பார்த்து உனக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என்றும் அவர் தன்னை காதலிக்கும்படி கேட்டதற்கு மஞ்சள் தாலி வாங்கி வந்து கட்டு, காதல்னா என்ன அர்த்தம் கல்யாணம் முடிக்கணும்னு அர்த்தம் என்று மிகத் தெளிவாகவும் அழகாகவும் பேசுகிறார். திருமணமெல்லாம் வேண்டாம் லவ் மட்டும் போதும் என்று அவர் மீண்டும் சொல்ல, அது முடியாது மூடிக்கிட்டு போ, கண்ட கண்ட நாயெல்லாம் என்னால கல்யாணம் முடிக்க முடியாது என்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகப் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடித்துவிட்டார் நம்ம சொர்ணா.

MOST READ: "நான் ஒரு ஏமாந்த கோழி" தன்னை பற்றி புட்டு புட்டு வைக்கும் கவர்ச்சிப்புயல் ஷகீலா

அடுத்தடுத்த விடியோக்கள்

சொா்ணாக்காவின் இந்த இரண்டாவது விடியோ செம வைரலாகிவிட அடுத்தடுத்த நிறைய வீடியோக்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. அவரைத் தேடிப்போய் வீடியோ எடுத்து பதிவிடத் தொடங்கிவிட்டார்கள்.

செல்பி எடுக்க 50 ரூபாய் டிக்கெட்

செல்பி எடுக்க 50 ரூபாய் டிக்கெட்

Image Courtesy

தான் வெளி உலகத்துக்கு பயங்கரமாகி விட்டோம் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட சொர்ணாக்கா தன்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பி யாரேனும் வந்து குட்டால் என்கூட போட்டோ எடுக்கணும்னா 50 ரூபாய். முதல்ல காச கொடுத்து டிக்கெட்ட வாங்கு என்று போட்டோவுக்கு கையில் பர்ஸ் வெச்சுகிட்டு காச கொடு, 60 ரூபாய் உனக்கு தள்ளுபடி 10 ரூபாய் என்கிறார். அவர் 10 ரூபாய் தருகிறேன் என்று சொல்பவரிடம் என்ன பிச்சையா? என்று அசத்தலாகக் கேள்வி கேட்கிறார்.

லவ்வர் திட்டுவார்

லவ்வர் திட்டுவார்

Image Courtesy

நீ என்கூட வர்றியா என்று ஒருவர் கேட்க நோ என்னோட லவ்வர் திட்டுவார். கையை பிடிக்காத சும்மா இரு என்று முகத்தில் வெட்கத்தோடு பேசுகிறார். இந்த விடியோவில் டிரஸ் கூட செம ஸ்மார்ட்டாக அணிந்திருக்கிறார்.

கால்சீட்

கால்சீட்

Image Courtesy

அதே ஊரைச் சேர்ந்த ஒரு வளர்ந்து வரும் புதிய இயக்குநர் சொர்ணாக்காவின் பக்கத்தில் உட்கார்ந்திருக்க, அவருடைய அம்மாவோ எழுந்து வாடா என்று அதட்டுகிறார். ஆனால் அவரோ நம்ம சொர்ணாக்காவிடம் என்னோட படத்துக்கு கால்சீட் தர்றீயா என்று கேட்க, அந்த பெண்ணும் தருகிறேன். உன்னோட போன் நெம்பர் கொடுத்துட்டு போ என்கிறார். போற போக்க பார்த்தா நம்ம சொர்ணாக்காவை சீக்கிரமாவே பெரிய திரையிலும் பார்த்து ரசிக்கலாம் போல.

டிக்டாக்

டிக்டாக்

Image Courtesy

அந்த ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் தங்களுடைய சொர்ணாக்காவுக்கு புது டிரஸ் வாங்கிக் கொடுத்து, நகைகள் எல்லாம் போட்டு, நெற்றியில் திருறீநு பூசிக் கொண்டு. தங்களுடைய காரில் ஏற்றி உட்கார வைத்து, போனை கையில் கொடுத்து டிக்டாக் வீடியோ எடுக்கிறார்கள். சொர்ணாக்காவும் வடிவேலுவின் டயலாக்கைப் பேசி டிக்டாக் விடீயோ செய்கிறார்.

குடிகாரர்கள் பற்றி பேசுவது

குடிகாரர்கள் பற்றி பேசுவது

Image Courtesy

குடிகாரர்களைத் திருத்தவே முடியாது. குடிப்பதை நிறுத்துவதை விட்டு அரசை கடையை மூடு என்று சொல்வது, நீ குடித்துவிட்டு மல்லாக்க விழுந்தா நாங்களா பலி, அடிக்க வேண்டியது தான் அதுவும் ஒரு அளவு தான் என்று ரொம்ப பொறுப்பான பெண்ணாக பேசுகிறார். குடிப்பவர்களை கொன்றுவிடலாம். இப்போல்லாம் போலீஸ்காரங்க சினன் பிள்ளைகள் சொல்றத தான் நம்புறாங்க என்று சொல்ல, விடியோ எடுப்பவரோ யாரு நீ சின்ன பிள்ளையா என்று கேட்கிறார். இல்ல. அவங்க தான் அப்படி சொல்றங்கனு அலப்பறையாக சொல்கிறார்.

MOST READ: 'பேட்ட' யில ரஜினி போட்ற டிரஸ் உங்களுக்கு பிடிச்சிருக்கா? யார் டிசைன் பண்ணது தெரியுமா?

விஜய் சேதுபதியுடன்

விஜய் சேதுபதியுடன்

Image Courtesy

நடிகர் விஜய் சேதுபதியுடன் படம் நடிப்பதாகவும் அந்த படத்தின் பெயர் கடைசி விவசாயி என்றும் அதில் தான் நடித்த அனுபவங்கள் பற்றியும் தன் ஊரில் உள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் ஜெயலலிதா. அதில் தன்னுடைய கேரக்டரின் பெயர் வசந்தா என்று ககலப்பாக பகிர்ந்து கொண்டார். அடுத்து பெரிய திரையில் ஒரு வலம் வந்து நம்மையெல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தப் போகிறார் சொர்ணாக்கா.

இந்த எல்லா வீடியோக்களையும் சேர்த்துப் பார்த்தால் உங்களுக்குப் புரியும் நம்ம சொர்யணாக்காவுக்கு எம்புட்டும் அறிவும் சமூக நலனும் இருக்கு என்பது உங்களுக்குப் புரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Facts About Viral Girl Kutty Sornakka

kutty sornakka is a viral girl on social media. she was 22 years old girls. but she is looking like a baby girl. 2 years bach her first video released in facebook. now she is a very famous viral girl in tamil,
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more