For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுப்பிரமணியன் கருப்பையா கவுண்டமணி ஆன கதை தெரியுமா? கேட்டா ஆச்சர்யப்படுவீங்க...

தமிழ் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். படித்து மகிழுங்கள். அதில் வெறும் மணி எப்படி கவுண்டமணி ஆனார் என்பது பற்றி பார்க்கலாம்.

By Mahibala
|

கவுண்டமணி என்று பேரைச் சொன்னாலே அவரா காமெடி ஜாம்பவான்ப்பா. அவர மாதிரி இன்னொரு ஆள் தமிழ் சினிமாவுக்கு இனிமேல் வர முடியாது என்று சொல்லுகிற அளவுக்கு தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையே கட்டிப் போட்டவர். தமிழில் ஹீரோக்களுக்கு இணையாக, ஏன் அவர்களை விட அதிகம் புகழ் பெற்றவர். இவருடைய கால்சீட்டுக்காக டைரக்டர்கள் தவம் கிடந்த கதையெல்லாம் பல உண்டு. இப்படி சாதா மணியா இருந்த அவர் கவுண்டமணி ஆன கதை தெரியுமா உங்களுக்கு. இன்னும் அவரைப் பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி இந்த பகுதியில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பும் இயற்பெயரும்

பிறப்பும் இயற்பெயரும்

கோயம்புத்தூர் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டைக்கு அருகில் இருக்கிற வல்லகுண்டாபுரம் கிராமத்தில் தான் நம்ம கவுண்டமணி 1939 ஆம் ஆண்டு மே 25 ஆம் நாள் பிறந்தார். இவரோட இயற்பெயர் என்ன தெரியுமா? சுப்பிரமணியன் கருப்பையா என்பது தான் கவுண்டமணியின் இயற்பெயர்.

MOST READ: உங்களுக்கு 100% செட் ஆகுற மாதிரி ஆளை எப்படி கண்டுபிடிக்கிறது? இந்த 10 விஷயம் இருந்தா போதும்

நாடக அனுபவம்

நாடக அனுபவம்

ஆரம்ப காலங்களில் இவர் நடிப்பில் ஆர்வம் கொண்டதால் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேடை நாடகங்களில் இவர் பெற்ற அனுபவங்கள் நிறைய. அந்த அனுபவங்களைக் கொண்டு தான் திரைப்பட உலகுக்குள் நுழைய ஆரம்பித்தார்.

திரையில் தோன்றிய முதல் படம்

திரையில் தோன்றிய முதல் படம்

கவுண்டமணி நடித்த முதல் திரைப்படம் எது என்று கேட்டால் எல்லோரும் சொல்வது ராமன் எத்தனை ராமனடி என்னும் திரைப்படத்தைத் தான். ஆனால் அவர் நடித்த முதல் திரைப்படம் எது தெரியுமா? நாகேஷ் நடித்த மிக பிரமாண்ட வெற்றி பெற்ற சர்வர் சுந்தரம் என்னும் திரைப்படம் தான் இந்த மகா நடிகனின் முதல் திரைப்படம். அதில் டிரைவராக வருவார். அதன் பிறகு, எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன், செல்வ மகள் ஆகிய திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

MOST READ: இந்த 6 காய்களை சாப்பிட்டா தொப்பை போடுமாம்? அதுல முட்டைகோசும் ஒன்னு... அத சாப்பிடாதீங்க

நடித்த படங்கள்

நடித்த படங்கள்

கிட்டதட்ட 450 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவர் நடித்ததில் என்றைக்கும் மறக்க முடியாத படங்களாக இருப்பவையும் பல. கரகாட்டக்காரன், சின்னக்கவுண்டர், உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, சூரியன், நடிகன், தங்கம், மன்னன், இந்தியன், நாட்டாமை, மாமன் மகள், உனக்காக எல்லாம் உனக்காக, உள்ளத்தை அள்ளித்தா, முறை மாமன் இப்படி இன்னும் நிறைய படங்களை அடுக்கிக் கொண்டே போக முடியும். சில திரைப்படங்களில் இவர் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். அவற்றில் சில நூற் நாட்களைத் தாண்டியும் ஓடியிருக்கின்றன.

கவுண்டமணி - செந்தில் ஜோடி

கவுண்டமணி - செந்தில் ஜோடி

செந்தில் மிகச்சிறப்பானதொரு இணையாக இல்லாமல் போயிருந்தால் கவுண்டமணி தனித்து நின்று இந்த அளவுக்கு தன்னுடைய நகைச்சுவையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டிருக்குமா என்பது யோசிக்க வேண்டிய விஷயம் தான். கவுண்டமணி என்று சொன்னாலே அதில் செந்திலுக்கும் பாதி இடம் உண்டு. செந்திலை அடித்து திட்டி தான் கவுண்டமணி பெரிய ஆள் ஆனார் என்ற விமர்சனங்களும் வரத்தான் செய்தது. அதன்பின் மேட்டுக்குடி, மன்னன் போன்ற பல திரைப்படங்களில் பின்னாட்களில் தனியாக நடித்து தன்னை நிரூபித்தும் காட்டியிருக்கிறார்.

சூப்பர்ஹிட் டயலாக்ஸ்

சூப்பர்ஹிட் டயலாக்ஸ்

பெரிய நடிகர்கள் பேசும் பஞ்ச் டயலாக்கிற்கு எடுத்துக் கொள்ளும் சிரத்தைகள் அதிகம். ஆனால் கவுண்டமணியின் பல பஞ்ச் டயலாக்குகள் இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றதோடு அதை தங்களுடைய அன்றாட வாழ்க்கையிலும் பேசி பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில்,

நாதர்ஸ் வாழைப்பழ காமெடியை இன்றளவும் யாராலும் அடித்துக் கொள்ள முடியாது.

அய்யோ ராமா என்ன ஏண்டா இந்த மாதிரி கழிசட பசங்களோடல்லாம் சேர வைக்கிற...

நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா

அடேங்கப்பா இது உலக மகா நடிப்புடா சாமி

ஆமா இவரு பெரிய கப்பல் வியாபாரி

நாலு வீட்ல பிச்சை எடுத்து திங்கிற நாய்க்கு பேச்ச பாரு, எகத்தாலத்த பாரு

டேய் தகப்பா

நாட்டாமை தம்பி பசுபதி டீச்சர் வெச்சிருக்காங்கோ

டேய் தீஞ்ச மண்டையா

நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடியலப்பா

காந்தக்கண்ணழகி! ஆ இங்க பூசு...

நான் ரொம்ப பிஸி

சொரி புடிச்ச மொன்ன நாயி

இதுக்கு தான் ஊருக்குள் ஒரு ஆஸ் இன் ஆள் அழகு ராஜா வேணும்ங்கிறது

பெட்ரமாஸ் லைட்டே தான் வேணுமா? கூட வெச்சிருக்கிறவங்களுக்கு பெட்ரமாஸ் லைட் குடுக்கறதில்ல.

நீ வாங்குற அஞ்சு பத்துக்கு இதெல்லாம் தேவையா

இப்படி அவருடைய சூப்பர் ஹிட் வசனங்களை அடுக்கிக் கொண்டே போக முடியும்.

MOST READ: மூக்குகிட்ட உங்களுக்கும் இப்படி இருக்கா? இதோ இத தேய்ங்க உடனே வெளிய வந்துடும்...

“கௌண்டர்“ மணி

“கௌண்டர்“ மணி

இவர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் கவுண்டமணி என பெயர் மாற்றிக் கொண்டதாக தப்பான வதந்தியும் உண்டு. ஆனால் இவர் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது ஒரு நாடகத்தில் ஊர் கவுண்டர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்ததால் இவருக்கு இந்த பெயர் வந்ததாக தெரிந்தவர்கள் பலரும் குறிப்பிடுகிறார்கள். இதெல்லாம் விட அவருக்கு நெருக்கமான நண்பர்களுள் ஒருவரான இயக்குநர் மனோபால ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்த பெயர் பற்றிய உண்மையான விளக்கத்தைக் கூறினார்.

அது என்னவென்றால், ஆரம்ப காலத்தில் இருந்தே கவுண்டமணி யார் என்ன சொன்னாலும் எதை பார்த்தாலும் கொஞ்சம் கூட யோசிக்காமல் நம்முடைய யார் மனதுக்கும் தோன்றாத ஒரு விஷயத்தை வைத்து டக்கென்று கௌண்டர் கொடுப்பாராம். அதனால் தான் சுப்பிரமணியான அவரை அவருடைய நண்பர்கள் தொடங்கி எல்லோரும் கௌண்டர் மணி என அழைக்கத் தொடங்கியிருக்கிறார். அந்த கௌண்டர் தான் பின்னாளில் கவுண்டர் மணி என்றும் கவுண்டமணி என்றும் மாற்றம் பெற்றுவிட்டதாகக் கூறியிருந்தார். இந்த பேருக்குப் பின்னாடி இப்படி ஒரு சரித்திரமே இருக்கிறதாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: life
English summary

interesting facts about comedy actor goundamani

Subramaniyan Karuppaiya (born 25 May 1939), known by his stage name Goundamani, is an Indian film actor and comedian. He is known for his comic duo partnership in Tamil films with fellow actor Senthil.
Story first published: Monday, March 11, 2019, 15:03 [IST]
Desktop Bottom Promotion