For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அறிவார்ந்த தமிழக சமூகம் இங்கே தான் போகிறதா... - விளையாட்டா? வினையா?

அறிவார்ந்த தமிழக சமூகம் இங்கே தான் போகிறதா... - விளையாட்டா? வினையா?

|

ஆர்குட் இருந்தது வரை அதுவொரு சமூக இணையமாகவும், நேரடியாக பார்த்துப் பேசிக் கொள்ள இயலாத நட்புகளை ஒன்றிணைக்கும் கருவியாகவும் மட்டுமே இருந்தது.

ஆர்குட்டுக்கு பிறகு அதே போல பல சமூக இணையங்கள் உருவாகின, உதாரணமாக மை ஸ்பேஸ் போன்ற தளங்களை குறிப்பிடலாம். ஆனால், அதிக கேளிக்கை, விளையாட்டு மற்றும் அனைத்திற்கும் மேலாக யூசர் ஃபிரெண்ட்லியாக வந்தது தான் ஃபேஸ்புக்.

எளிமையாகவும், குதூகலமாகவும் நேரம் செலவழிக்க ஃபேஸ்புக் ஒரு பெரிய கருவியாக அமைந்தது. அதுமட்டுமின்றி, இங்கே ஃபேக் முகவரிகள், முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நடப்பு வட்டாரத்தில் சேர்ப்பது, லைக்ஸ் மோகம் போன்றவை காட்டுத்தீ போல பரவ ஆரம்பித்தது.

அதிகமான நட்புகள் வேண்டும், லைக்ஸ் வேண்டும்... போலியான புகழ் வேண்டும் என தீயாக வேலை செய்ய ஆரம்பித்தனர் சில குமார்கள். இதனால், சாமானிய மக்கள், நடுத்தர வீட்டு பெண்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.

ஃபேஸ்புக் மூலம் நன்கு சம்பாதித்தவர்களும் இருக்கிறார்கள், நேர்மையாக, உண்மையாக புகழ் பெற்றவர்களும் இருக்கிறார்கள்... ஆனால், இதைவிட பன்மடங்கு அதிகமாக திட்டம் போட்டு மக்களை ஏமாற்றும் கூட்டமும் இருக்கிறது....

சிலரது இதயமற்ற பதிவுகள் வாழ்க்கை, பணம், அறிவை கெடுக்கும் அளவிற்கு கொடுமையாக அமைகிறது. சிலர் இதை வேடிக்கைக்காக, கேலி, கிண்டல் என விளையாட்டாக செய்கிறார்கள். சிலர் திட்டமிட்டு டார்கெட் செய்து ஏமாற்று வேலைகளில் ஈடுபட இப்படியான வேலைகளில் இறங்குகிறார்கள்...

அப்படி பல காலமாக ஃபேஸ்புக்கில் பரவிவரும் சில இதயமற்ற பதிவுகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எனக்கு எல்லாம் லைக் கிடைக்குமா?

எனக்கு எல்லாம் லைக் கிடைக்குமா?

ஃபேஸ்புக்கில் இன்னமும் சில பெண்கள் அக்கவுண்ட் துவங்காமல் இருப்பதற்கு காரணம், எங்கே தங்கள் படங்களை திருடி போலி அக்கவுண்டுகள் ஆரம்பித்து தங்கள் பெயரை கெடுத்துவிடுவார்களோ என்ற அச்சம் தான். நீங்களே இதை அதிகமாக பார்த்திருக்கலாம்... நிறைய ஃபேஸ்புக் குழுக்களில் ஏழை அல்லது நடுத்தர பெண்களின் புகைப்படங்களை பகிர்ந்து எனக்கெல்லாம் லைக் கிடைக்குமா? எனக்கு இன்னிக்கி பிறந்தநாள் என்ன நீங்க வாழ்த்துவீன்களா? நாங்க வீட்ட விட்டு வெளிய வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. எங்கள ஆசீர்வாதம் பண்ணுங்க என்று.. யாரோ சிலரது படங்களை திருடி போஸ்ட் செய்வார்கள்.

நம்பர் ஷேர் பண்ணுங்க...

நம்பர் ஷேர் பண்ணுங்க...

இரும்புத்திரை படத்தை பார்த்த பிறகு ஒருவரது மொபைல் நம்பருக்கு எத்தனை மதிப்பு இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. நாம் சாதாரணமாக தூக்கி எரியும் விமான டிக்கெட் கியு.ஆர் கோடில் இருந்து கூட நமது தகவல்கள் திருடப்படுகிறது என்பது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. இன்னும் சிலருக்கு எப்படி எனது நம்பர் இவங்களுக்கு எல்லாம் கிடைக்காது எங்கிருந்த நமக்கு கால் பண்ணி பேசுறாங்க என்று சந்தேகம் எழும். நீங்கள் எங்கோ ஒரு இடத்தில் ஃபேஸ்புக் குழுவில், ஒரு பெண்... உங்க நம்பர கமெண்ட் பண்ணுங்க நாம பேசலாம் என்று போட்ட பதிவில் நீங்கள் நம்பரை பதிவு செய்திருந்தால், அதை ஒரு கூட்டம் திருடி, வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்றுக் கொண்டிருக்கும்.

உங்களுக்கு தெரியுமா?

உங்களுக்கு தெரியுமா?

உங்க டெபிட் கார்டு மாத்த போறோம், கார்டு நம்பர் ஒ.டி.பி சொல்லுங்க என்று கேட்டு... என்று மொபைல் நம்பர் மூலமாக கால் செய்து பணத்தை திருடும் கூட்டம் பெரியளவில் செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு எல்லாம் உங்கள் நம்பர் இப்படியான வழிகளிலும் கிடைக்கிறது என்பது தான் விபரீதத்தின் உச்சம். உங்கள் மொபைல் நம்பர் மட்டுமல்ல, ஆதார் நம்பர், பிற அடையாள அட்டையின் விபரங்கள் என எதையும் துச்சமாக எண்ணி பகிர்ந்துவிட வேண்டாம்.

எப்படி இருந்த இவங்க...

எப்படி இருந்த இவங்க...

சமீபத்தில் கண்ட கொடுமைகள் என்னவென்றால்... கனா படத்தின் சிவ கார்த்திகேயன் படத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சிலர் இவர் கடினமாக உழைத்து இந்திய அணியில் இருந்து இடம் பிடித்தவர் இவரை பாராட்டுங்கள் என்று பதிவிடுகிறார்... சரி! ஒருவேளை அவர் கேலியாக பதிவிட்டார் என்று வைத்துக் கொண்டாலும்.. அதை உண்மை என்று நம்பி ஒரு கூட்டம் அதற்கு வாழ்த்து கூறி கமெண்ட் செய்துக் கொண்டிருக்கிறது.

நிவேதா பெத்துராஜ்!

நிவேதா பெத்துராஜ்!

சிவகார்த்திகேயன் நிலைமை இப்படி என்றால், நிவேதா பெத்துராஜ் நிலைமை இதைவிடவும் கொடுமை... 2004ம் ஆண்டு சுனாமியில் பாதிக்கப்பட்ட பெண் , அப்பா, அம்மாவை இழந்த பெண்... இப்போது தமிழக காவல் துறையில் பணியாற்றுகிறார் என்று திமிரு பிடித்தவன் திரைப்பட புகைப்படத்தை பகிர்ந்து ஷேர் செய்கிறார்கள். இதையும் ஒரு கூட்டம் நம்புகிறது.

புரியவில்லை...

புரியவில்லை...

பதிவிடுபவர் கேலியாக, விளையாட்டாக பதிவு செய்கிறார் என்று வைத்துக் கொண்டாலும்.. அதற்கு கமெண்ட் செய்பவர்கள் மிக சீரியஸாக உண்மை என்று நம்பி வாழ்த்து கூறுகிறார்கள், மனமுருகி கருத்து தெரிவிக்கிறார்கள் என்பதை காணும் போது தான், என் அறிவார்ந்த தமிழ் சமூகம் எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுகிறது. சில சமயம் இப்படி தான் அளவுக்கு மீறிய அமிர்தம் நஞ்சாக மாறுகிறது. கேலி, விளையாட்டு என்று செய்யும் வேலைகள்.. சில நேரம் நஞ்சாக மாறி அதையே ஒரு கூட்டம் உண்மை என்று கருதி நம்ப துவங்குகிறது. ஒரு கட்டத்தில் இது நமது அறிவை மழுங்கடித்துவிடுகிறது என்பது தான் உண்மை.

எத்தனை போலி...

எத்தனை போலி...

இதையும் நீங்கள் உங்கள் நிஜ வாழ்வில் கண்டிருக்க வாய்ப்புகள் உண்டு.. இப்போதெல்லாம் வீட்டில் இருக்கும் தாத்தா, பாட்டி.. அத்தை, மாமா என்று அனைவரும் வாட்ஸ்-அப் , ஃபேஸ்புக் பக்கமாக வந்து வாழ துவங்கிவிட்டனர். குறைந்தபட்சம் உங்கள் உறவினர்களில் யாரேனும் ஒருவராவது.. உங்களுக்கு தொடர்ந்து வாட்ஸ்-அப்பில் போலியான செய்தி / தகவல்களை அனுப்பி கடுப்பாக்கி இருப்பார். அவர்களிடம் எத்தனை தான் இதெல்லாம் போலி என்று கூறினாலும்.. அவர்கள் குருட்டுத்தனமாக நம்பி, மீண்டும், மீண்டும் அவ்வாறான தகவல்களை அனுப்பிக் கொண்டே தான் இருப்பார்கள்.

இப்படியான மக்களை இந்த போலி தகவல்கள் மிக எளிதாக முட்டாளாக்கிவிடுகிறது என்பது தான் உண்மை.

விழித்துக்கொள் தமிழா...

விழித்துக்கொள் தமிழா...

விழித்துக்கொள் தமிழா... ஒரு வாசகத்தை பயன்படுத்தி அதிகமாக போலி செய்திகள் பரப்பப்பட்டன என்ற கின்னஸ் உலக சாதனை விருது வழங்க வேண்டும் என்றால்.. அதை இந்த வாசகத்திற்கு தான் வழங்க வேண்டும்... அவ்வளவு போலி தகவல்களை இந்த விழித்துக்கொள் தமிழா என்ற வாசகத்தை வைத்து பரப்பி இருக்கிறார்கள்.

போதுமடா தமிழா... உன்னை... உன்னவனே ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்... வெறும் லைக்ஸ் எனும் போலி பிம்பத்திற்காக உன் மூளையயை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறான்... நிஜமாகவே நீ சீக்கிரம் விழித்துக் கொள்ள தான் வேண்டும். இல்லையேல்... சரியான தலைவனை மட்டுமல்ல... உனக்கான தேவைகளை கூட உன்னால் தேர்வு செய்ய முடியாத நிலை உண்டாகலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Heartless Facebook Post That Gone Viral!

Here we have listed some Heartless Facebook Posts which spreads more fake news and how it affects people in real life. Take a look on it.
Story first published: Thursday, January 3, 2019, 13:16 [IST]
Desktop Bottom Promotion