TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
சங்கமா சாப்பாடா - வைரல் வீடியோவுல வர்ற சுட்டிப்பையன் யார்? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ
எனக்கு சாப்பாடு தான் முக்கியம் என்று அழுதுகொண்டே பேசும் ஒரு குட்டிப்பையனின் வீடியோவைப் பார்த்து ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. சங்கமா சாப்பாடா? சாப்பாடுதான் முக்கியம் பசிக்குமில்ல என்று அந்த சிறுவன் பேசிய வரிகள் இன்று சமூக வலைத்தளங்களைப் பின்தொடர்பவர்கள் மத்தியில் டிரெண்டிங் பஞ்ச் டயலாக் ஆகவே மாறிவிட்டது.
இந்த சிறுவனின் பேச்சுக்கு இடையில் ரஜினியின் பேட்ட வசனங்கள் எல்லாம் காணாமலே போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
சாப்பாடு தான் முக்கியம் என அண்மையில் வலைத்தளங்களைக் கலக்கோ கலக்கென்று கலக்கினான் சிறுவன் ஒருவன். அப்படி எதையும் யோசிக்காமல் வியாக்ஞானம் பேசால் உண்மையை பட்டென்று போட்டு உடைத்து எல்லோருக்கும் உண்மையை உரைக்க வைத்தான், யார் அந்த சுட்டிப் பையன்? என்ன செய்கிறார், எந்த ஊர் போன்ற விவரங்களைத் தான் இந்த தொகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம்.
பேரும் ஊரும்
தன்னுடைய வீடியோ மூலம் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து நம் அனைவரையும் வசீகரித்த இந்த செல்லக்குட்டியின் பெயர் பிரணவ். திருநெல்வேலியைச் சேர்ந்த ஃபிரடி, நிம்மி தம்பதியரின் செல்லக்கழந்தை தான் இவன். நான்கே வயதாகின்ற பிரணவ் ரோஸ்மேரி பள்ளியில் எல்கேஜி படிக்கிறார்.
MOST READ: ஆண் குழந்தை பலசாலியா இருக்க நீங்க வைக்க வேண்டிய 50 ஹனுமான் பெயர்கள் இதோ உங்களுக்காக...
என்ன சங்கம் அது?
புனித சேவியர் பாய்ஸ் என்னும் ஒரு சங்கத்தில் பிரணவின் மாமா டிராவிட் உறுப்பினராகவும் முக்கியப் பொறுப்பிலும் செயல்பட்டு வருகிறார். இது அப்பகுதியில் உள்ள இளைஞர் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த சங்கத்தில் தான் உண்மை உறுப்பினராக சேர்க்கிறேன் என்று சொல்லி உறுதிமாழியெல்லாம் எடுக்கச் செய்கிறார். இந்த குழந்தையும் அவர் சொல்வதைத் திரும்பச் சொல்லி உறுதிமொழி எடுத்தது.
சங்கமா சாப்பாடா?
சங்க உறுப்பினராக உறுதிமொழி ஏற்றபின், வீட்டுக்குப் போய் உன் அப்பாவிடம் சங்கத்தின் உறுப்பினர் கட்டணமாக 2000 ரூபாய் வாங்கி வா என்று அனுப்புகிறார். அந்த பிரணவும் தலையை ஆட்டிக் கொண்டே வீட்டுச் செல்ல முற்படும்போது, அவனுடைய மாமா அவனை தடுத்து நிறுத்தி, வாங்கிட்டு வருவியா என்று கேட்கிறார். அதற்கு நம்முடைய பிரணவ் குட்டி சாப்பிட்டு வர்றேன் என்று சொல்கிறான். உடனே டேவிட் நான் சங்கத்தை பத்தி பேசுறேன் நீ சாப்பிட்டு வர்றீயா? சங்கம் முக்கியமா சாப்பாடு முக்கியமா என்று கேட்கிறார். அதற்கு சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு, சாப்பாடு தான் முக்கியம், அப்புறம் எனக்கு பசிக்குமில்ல என்று சொல்லிக் கொண்டே அழத் தொடங்கிவிட்டான். அவனை சமாதானம் செய்து சாப்பாடு தான் முக்கியம் என்னப்பா என்று அனுப்புகிறார் டேவிட்.. இதுதான் நீங்கள் வலைத்தளங்களில் பார்த்த வீடியோ.
சுட்டிக்குழந்தை
தன்னுடைய ஒரே வீடியோவில் உலகைச் சுற்றி வைரலாகி வந்த பிரணவ் அந்த வீடியோவில் மட்டுமில்ல. அவர் செய்யும் எல்லா செயல்களுமே பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறார். ஒரே நாளில் உலகத்தையே தன்னுடைய மழலைப் பேச்சில் தன் வசம் ஆக்கிக் கொண்டவர். 2018 ஆம் ஆண்டின் இறுதியில் பெரிய வைரலான வீடியோவுக்குச் சொந்தக் காரர் நம்ம பிரணவ் தான்.
சமத்து குழந்தை
பிரணவ் பற்றி பேசும் அவருடைய தாய் கூறும்போது, அதிகமாக சேட்டையெல்லாம் பிரணவ் செய்ய மாட்டான், எல்லோரையும் புரிந்து கொண்டு, என்ன கேள்வி கேட்டாலும் அந்த கேள்வியைப் புரிந்து கொண்டு பதில் சொல்லுவான். அவனுடைய அப்பா என்ன சொன்னாலும் அதைக் கேட்டு நடப்பான் என்று கூறுகிறார். இவனால் எனக்கு பெருமை தான் கிடைத்திருக்கிறார். இப்போது ஊரில் உள்ள எல்லோரும் தன்னுடைய பெயரை மறந்துவிட்டு, பிரணவ்வின் அம்மா என்று தான் சொல்கிறார்கள் என்று பெருமைப்படுகிறார்.
MOST READ: உறவின்போது ஆணுறுப்பு சீக்கிரமா சுருங்கிடுதா? அதுக்கு இதுதான் காரணம்...
மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வேட்டை
எப்போது என்ன விஷயம் வைரலாகுமோ அதை வைத்து மீம்ஸ்களை அள்ளித் தெளிக்கும் மீம்ஸ் கிரியேட்டர்களும் மிகப்பெரிய கொடையை நம்முடைய வடிவேலு தான் செய்து வந்தார். நம்முடைய பிரணவ்வின் விடியோ வெளியான பின் மீம்ஸ் கிரியேட்டர்களின் வேட்டைக்கும் பெரும் தீணி கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
டிக்டாக், மியூசிக்கலி, டீவி
டிக்டாக், மியூசிக்கலி அப்ளிகேஷன்கள் பற்றி தான் உங்களுக்குத் தெரியுமே? தமிழ்நாட்டில் பாதி பேர் இதே வேலையாகத் தான் திரிகிறார்கள் என்று. அவர்களும் விட்டு வைக்கவில்லை நம்முடைய பிரணவை. டிக்டாக்கில் இபபோது டாப் ரேங்கிங்கில் இருப்பது நம்ம பிரணவ்வின் சாப்பாடு முக்கியம் டயலாக் தான். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவனைப் போல மிமிக்ரி செய்து அப்லாஸை அள்ளுகிறார்கள் நகைச்சுவை நடிகர்கள்.
பிரணவ் ஆர்மி
சமீப காலங்களில் தொலைக்காட்சிகளில் வலம் வருகின்ற மக்களுக்குப் பிடித்த ஆட்களின் பேரில் ஆர்மி ஆரம்பிக்கப்படுகிறது. அப்படி ஆரம்பித்து பிரபலமானது என்றால்ஈ முதலில் நம்ம அழகி ஓவியா தான். ஆம் ஓவியா ஆர்மிக்குப் பிறகு பிரபாலமானது ஐஸ்வர்யா ஆர்மி, துரைமுருகன் ஆர்மி. அதுக்குப் பிறகு வாய்ல குணமா சொல்லணும் போன்று நிறைய சுட்டிக்குழந்தைகள் தங்கள் வீடியோக்கள் மூலம் பிரபலமானாலும் இப்போது பிரணவ்வுக்கு தான் புதிதாக ஆர்மி தொடங்கப்பட்டிருக்கிறது.
பேஸ்புக் பேஜ்
ஒன்று தெரியுமா எந்த பேஸ்புக் மூலம் தன்னுடைய டயலாக்கால் பிரபலமானாரோ அதே டயலாக்கை பெயராகக் கொண்டு சாப்பாடா - சங்கமா - பசிக்கும்ல என்ற பெயரில் ஒரு பேஸ்புக் பக்கம் ஒன்று தொடங்கப்பட்டு இருக்கிறது. அதை 950 பேருக்கு மேல் பின்தொடர்கிறார்கள். அந்த பக்கத்தில் பிரணவ்வின் வேறு வேறு விடியோக்கள், பிரபலமான மீம்ஸ்கள் ஆகியவை பகிரப்படுகின்றன.
பிடித்த சாப்பாடு
சாப்பாடு தான் முக்கியம். பசிக்குமில்ல சாப்பிட வேண்டாமா என்று அறிவோடு சொன்ன நம்ம பிரணவ்வுக்கு பிடித்த சாப்பாடு எது என்று கேட்டால், பிரியாணி, சிக்கன் என்று எதையாவது சொல்வார் என்று பார்த்தால் பொசுக்குனு எனக்கு தயிர் சாதம் தான் பிடிக்கும் என்று சொல்லிவிட்டார்.
பிடித்த நடிகர்
உனக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்ட கேள்விக்கு எனக்கு யாரையும் பிடிக்காது என்று சொல்லிவிட்டு இடத்தை விட்டு நகர்ந்து விட்டான். இந்த சின்ன வயசுல என்ன ஒரு அறிவு பாருங்களேன்.
பிடித்த பாடல்
நிறைய சினிமா பாட்டுக்களைப் பாடிக் கொண்டிருந்த பிரணவ்விடம் உங்களுக்கு பிடித்த பாடல் எது என்று கேட்டால், இரண்டு பாடல் பிடிக்கும் ஒன்று செந்தூராாாா பாடல் என்ற சொன்னார். மற்றொரு பாடல் எது தெரியுமா? ஷாக் ஆவீங்க. நம்ம இந்தியாவின் தேசிய கீதமான ஜன கண மன தான் பிடிக்குமாம். சொன்னது மட்டுமில்ல. முழு பாட்டையும் சூப்பரா பாடுறாரு.
ஒரே நாள்ல உலக பேமஸ் ஆகிறது இதுதானோ!