Latest Updates
-
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
இந்த 6 ராசிகளுக்குள் காதல் மட்டுமின்றி, பொருளாதரா ரீதியான பொருத்தமும் ஓஹோன்னு இருக்குமாம்!
உங்க ராசிக்கும், மனைவி ராசிக்கும் பொருத்தம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கனுமா?
ராசிகள் குறித்து ஆராயும் பொழுது ஒரு தனி நபர் வாழ்க்கை பற்றி அனைத்தும் கூறப்படுகிறது. ஒருவரின் பொருளாதார நிலை உயர்வு - வீழ்ச்சி, தொழில் லாப - நட்டம், ஒருவருக்கு திருமணம் யோகம் எப்போது இருக்கும் என்று அனைத்து பற்றியும் கூறப்படுகிறது ராசி ஜோதிடத்தில்.

மொத்தம் இருக்கும் 12 ராசிகளில், அனைத்து வகையிலான ராசி ஜோடிகளும் திருமண பந்தத்திற்கு சரியாக பொருந்துவதில்லை. சில ராசிகள் யோகா பொருத்தமாக இருக்கும். சிலவன பூஜ்ஜியமாக இருக்கும்.
இதில், இந்த ஆறு ராசிகளின் ஜோடியனது இல்லறத்தில் நல்ல பந்தம் மற்றும் ஆரோக்கியம், வெற்றி, லாபத்தை என அனைத்தையும் அள்ளித்தரும் ஜோடிகளாக கருதப்படுகின்றன...

துலாம் - விருச்சிகம்!
துலாம் மற்றும் விருச்சிகம் ஒன்றிணையும் போது, அவர்களுக்கு இடையே உருவாகும் ரொமான்ஸ் ஆனது இருவருக்கு இடையே இரகசியமாக காக்கப்படும். துலாம் காதல் மற்றும் ஆசைகளில் பேரார்வம் கொண்டவர்.
மறுபக்கம் விருச்சிகம் தங்கள் துணை மீது ஈடில்லா பாசம் பொழியும் நபர்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டாலும், இவர்கள் இருவரின் உறவானது கடைசியில் சிறந்த ஜோடியாக திகழவும்.

மீனம் - கடகம்!
உணர்வு ரீதியாகவும், உள்ளுணர்வு ரீதியாகவும் இவர்கள் ஒரு சிறந்த ஜோடி. இவர்கள் இருவரும் உணர்ச்சியின் வலையில் பின்னிப்பிணைந்து இருப்பார்கள். ஒருக்கட்டதில் வெளியுலகை மறந்து ஒருவர் மீதான ஒருவர் காதலில் மூழ்கி திளைப்பார்கள். இருவரும் ஒன்றாக இருக்கும் போது உணர்வு ரீதியாகவும், உறவு ரீதியாகவும் சமநிலையில் இருப்பார்கள். பர்ஃபெக்ட்டான ஜோடியாக திகழ்வார்கள்.

தனுசு - மேஷம்!
இந்த இரு ராசியும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள். இவர்கள் காதலை உலகறிய செய்ய கருதுபவர்கள். அறிவு சார்ந்து மிகவும் கூர்மையாக செயற்பட கூடியவர்கள் இவர்கள். இவர்கள் இருவரும் ஒன்றிணையும் போது அவர்கள் முதலில் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள், பிறகு மெல்ல, மெல்ல காதலில் திளைத்து சிறந்த ஜோடியாக மாறுவார்கள்.

மிதுனம் - கும்பம்!
ஒருவருடன் ஒருவர் சமநிலையில் பழக கூடியவர்கள். மிதுனம் எதிலும் நிச்சயமற்று இருப்பவர்கள், மறுபுறம் கும்பம் எதையும் யோசித்து கவனமாக செய்யக் கூடியவர்கள். ஆனால், இவர்கள் இருவரும் சேரும் போது புரிதல் மற்றும் விட்டுக்கொடுத்து போவது உருவாகும். இதனால், உறவை சமநிலையில் வழிநடத்தி சென்று வெற்றி பாதையை எட்டுவார்கள்.

கன்னி - ரிஷபம்!
கன்னி மற்றும் ரிஷபம் ஒன்றிணையும் போது அவர்களுக்கு வெறும் உறவு மட்டுமின்றி, இவர்கள் ஒரு சிறந்த தொழில் சார்ந்த பார்ட்னர்களாகவும் இருக்க வாய்ப்புகள் உண்டு. இவர்களது கூட்டு லாபகரமான தொழிலை அமைத்துக் கொடுக்கும். இல்லறம், வேலை, தொழில், வெற்றி என்று அனைத்திலும் தங்கள் சமப்பங்கினை அளிக்க இவர்கள் மறுக்க மாட்டார்கள்.

மகரம் - சிம்மம்!
மகரம் எந்த ராசிக்கும் வளைந்துக் கொடுத்து போகக் கூடிய ராசி ஆகும். முக்கியமாக சிம்மம் என்றால் நூறு சதவிதம் பொருந்தும். மகரம் கொஞ்சம் உணர்ச்சி பூர்வமான ராசி. ஆனால், சிம்மம் எதையும் சம அளவில் பார்த்து, ஆராயும் ராசி. இவர்கள் இருவர் மத்தியில் உணர்ச்சி ரீதியான உறவும், பிராக்டிகலான உறவும் சமநிலையில் அமையும். இவர்கள் தங்கள் இல்லறத்தில் ஒரு வெற்றிகரமான ஜோடியாக திகழ்வார்கள்.



Click it and Unblock the Notifications