For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பிரபலங்கள் தங்கள் வாழ்வில் கடந்து வந்த மீளாத்துயர் சம்பவங்கள்!

  |

  வாழ்க்கை அனைவருக்கும் சுலபமாக அமைந்துவிடுவதில்லை. கோடீஸ்வரனாகவே இருந்தாலுமே கூட, அவர்களுக்கு இருக்கும் வலி என்ன, அவர்கள் கடந்து வரும் கடினமான சூழல் என்ன என்பது குறித்து நாம் அறிய இயலாது.

  பொதுவாகவே, ஒரு தொழிலதிபர் அல்லது நடிகராக இருந்தால், அவங்களுக்கே என்னப்பா சொகுசான வாழ்க்கை, ஆடம்பரமா இருக்காங்க... என்று நாம் இயல்பாக கூறுவதுண்டு. ஆனால், அந்த இடத்தைப் பிடிக்க அவர்கள் எத்தனை துயரங்களை, தோல்விகளை, தடைகளை கடந்து வந்தார்கள். அவர்களது கடந்த கால வாழ்க்கையானது எத்தகையதாக இருந்தது என நாம் அறிந்திருக்க மாட்டோம்.

  இதோ! வரலாற்றில் சூப்பர்ஸ்டாராக தங்கள் பெயரை பதித்திருந்தாலும். கடந்த காலத்தில் மீளாத்துயரில் சிக்கி தவித்த நட்ச்சத்திரங்கள் பற்றிய தொகுப்பு...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  சார்லி சாப்ளின்!

  சார்லி சாப்ளின்!

  உலக சினிமா ரசிகர்கள் இன்றும் கண்டு ரசிக்கும் கிளாஸிக் படமான 'சிட்டி ஆப் லைட்ஸ்' கொடுத்த உலகின் மாபெரும் நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளின். இவருக்கு அறிமுகமே தேவையில்லை. பல நடிகர்கள் வசனம் பேசி, கவுண்டர் கொடுத்து, அடிவாங்கி சிரிக்க வைத்துக் கொண்டிருக்கையில்... தனது உடல் மொழி மற்றும் முக பாவனைகளால் மட்டுமே உலகை சிரிக்க வைத்த ஜாம்பவான் சார்லி சாப்ளின்.

  தெருக்களில் உறங்கி...

  தெருக்களில் உறங்கி...

  இவர் தனது சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். ஆகையால் பத்து வயதில் வேலைக்கு செல்ல வேண்டிய சூழல். தன் இளம் பருவத்தில் எண்ணற்ற இரவுகளை லண்டன் தெருக்களில் உறங்கி கழித்தவர் சார்லி சாப்ளின். ஏறத்தாழ 75 ஆண்டுகள் நடிப்பு துறையில் இருந்து பெரும் பணியாற்றிய ஜாம்பவனாக திகழ்ந்தார் சாப்ளின்.

  ஸ்டீவ் ஜாப்ஸ்!

  ஸ்டீவ் ஜாப்ஸ்!

  பெரும்பாலானோருக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் என்றாலே முதலில் எண்ணத்தில் உதிப்பது ஆப்பிள் தான். இவர் உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலுக்கு முந்தியடிக்கும் போட்டியில் கலந்துக் கொண்டவர் அல்ல. தனது வாழ்வில் எண்ணற்ற தடைகளை, தோல்விகளை, முயற்சிகளை, வெற்றிகளை கடந்து வந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

  எழு மைல் தூரம் ...

  எழு மைல் தூரம் ...

  தனது வாழ்வின் சில கட்டங்களில் ஸ்டீவ் ஜாப்ஸ் பொருளாதார ரீதியாக மிகவும் கீழ் மட்டத்திற்கு சென்றுள்ளார். இது பலரும் அறியாத உண்மை. வாரம் ஒரு முறையாவது நல்ல உணவு கிடைக்கும் என்பதால் சில நாட்கள் ஏழு மைல் தூரம் நடந்து சென்று ஒரு இந்துக் கோவிலில் வழங்கப்படும் உணவை உண்டுள்ளாராம் ஸ்டீவ் ஜாப்ஸ்.

  ஜிம் கேரி!

  ஜிம் கேரி!

  ஜிம் கேரி எனும் பெரும் மதிப்பு கொண்டிருந்த காமெடி நடிகர் நடித்த தி மாஸ்க் யாராலும் மறக்க முடியாத திரைப்படம். இவரது இன்றைய சொத்து மதிப்பு 150 மில்லியன் டாலர்களை தாண்டுகிறது. ஆனால், இவரது குழந்தை பருவம் அவ்வளவு மகிழ்ச்சிகரமானது அல்ல. தனது 15 வயதிலேயே வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார் ஜிம் கேரி.

  வாயிற்காவலர் வேலை...

  வாயிற்காவலர் வேலை...

  ஜிம் கேரியின் இளம் வயதில் இவரது தந்தைக்கு வேலை பறிபோனது. ஆகையால் வாழ்க்கையில் துன்பம் அருவி போல கொட்ட ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் தங்குவதற்கு வீடு இல்லாமல் ஒரு வேனில் தங்கி வந்தனர். பொருளாதார சிக்கல் காரணமாக படிக்க இயலா நிலை ஏற்பட்டு பள்ளியில் இருந்து டிராப் ஆவுட் ஆனார் ஜிம் கேரி. வாயிற்காவலராக தனது முதல் வேலை பார்த்துள்ளார் இவர்.

  சில்வெஸ்டர் ஸ்டலோன்

  சில்வெஸ்டர் ஸ்டலோன்

  ராக்கி என்ற படத்தின் மூலமாக பெரிய நட்சத்திரமாக வளர்ந்தார் சில்வெஸ்டர் ஸ்டலோன். இவரது வாழ்வில் நடந்த ஒரு பெரிய மாற்றம், நல்வழி ராக்கி என்று கூறலாம். பல வருடங்கள் எடுத்துக் கொண்டு தான் ராக்கியை எழுதினார் சில்வெஸ்டர் ஸ்டலோன். ராக்கியை உருவாக்க மிகவும் சிரமப்பட்டார் சில்வெஸ்டர் ஸ்டலோன். திரைக்கதையை எழுதி முடிக்கும் போது தனது வாழ்வின் விளிம்பில் நின்றுக் கொண்டிருந்தார் சில்வெஸ்டர் ஸ்டலோன்.

  ஒருவேளை உணவு...

  ஒருவேளை உணவு...

  பொருளாதார ரீதியாக கடைநிலையில் இருந்த சில்வெஸ்டர் ஸ்டலோன், தனது குடும்பத்திற்கு உணவளிக்க வேண்டும் என்பதால் தான் ஆசையாக வளர்த்த நாயை விற்றார். பிறகு படம் மாபெரும் வெற்றி பெறவே... அந்த நாயை மீண்டும் போய் வாங்கி வந்தார். தனது இரண்டு படங்களில் அந்த நாயை நடிக்க வைத்திருக்கிறார் சில்வெஸ்டர் ஸ்டலோன்.

  டேவிட் லெட்டர்மேன்!

  டேவிட் லெட்டர்மேன்!

  டேவிட் லெட்டர்மேன் ஒரு பிரபல அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளர், எழுத்தாளர், காமெடியன் மற்றும் தயாரிப்பாளர். இவர் தொடர்ந்து 33 ஆண்டுகளாக ஒரு பிரபல லேட் நைட் ஷோ நடத்தி வந்தார். 1982 பிப்ரவரி மாதம் இந்த நிகழ்ச்சியை துவக்கினார் டேவிட் லெட்டர்மேன்.

  காரே வீடு!

  காரே வீடு!

  தனது லேட் நைட் ஷோ மூலமாக வருடத்திற்கு ஐம்பது மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கும் டேவிட் லெட்டர்மேன். 1973களில் லோடு ஏற்றும் வண்டியில் படுத்து உறங்கி வந்தார். கிட்டத்தட்ட தங்க வீடு இல்லாத நிலை தான். வாழ்க்கை அனைவருக்கும் எடுத்தவுடன் லாட்டரி சீட்டை நீட்டிவிடுவதில்லை. சோற்றுக்கே லாட்டரி விற்க செய்யவும் வைக்கும்.

  வில்லியம் ஷாட்னர்!

  வில்லியம் ஷாட்னர்!

  இவர் ஒரு கனடியன் நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர். எழுபது ஆண்டு காலம் தொலைகாட்சியில் பணியாற்றியுள்ளார். பெரும் நடிகர் என்ற பெயர் பெற்ற போதிலும், ஆரம்பக் காலத்தில் தனது காரிலேயே தங்கி, ஒவ்வொரு தியேட்டர் படியேறி நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தார் வில்லியம் ஷாட்னர். பொருளாதார ரீதியாக பெரும் சிக்கல்களையும் சந்தித்துள்ளார். காரிலேயே தங்கி, உறங்கி, எழுந்து ஒவ்வொரு இடமாக பயணித்து வாய்ப்பு தேடி வெற்றி கண்டவர் இவர்.

  Image Source: Commons.Wikimedia

  கிறிஸ் ப்ராட்!

  கிறிஸ் ப்ராட்!

  வான்டட், கார்டியன்ஸ் ஆப் கேலக்ஸி, ஜுராசிக் பார்க் போன்ற படங்களில் நடித்தவர் கிறிஸ் ப்ராட். தனது குழந்தை பருவத்தில் இவருக்கு ஒரே ஒரு கனவு தான் இருந்தது. புகழ் அடைய வேண்டும். இவர் ஒரு காலேஜ் டிராப் அவுட். இரண்டு வேலைகளை ஒரே வேளையில் செய்து வந்தார். தங்குவதற்கு சொந்த இடம் என்று எதுவும் இல்லாத சூழல் அது. தனது வேனுக்கு கேஸ் நிருப்பவதற்கு பணம் ஈட்டவே பெரும்பாடு படவேண்டும் என்ற நிலை.

  ரெஸ்டாரண்ட் சர்வர்...

  ரெஸ்டாரண்ட் சர்வர்...

  19 வயதில் ஹவாயில் இருந்த போப்பா கும்ப் ஷ்ரிம்ப் என்ற ஒரு ரெஸ்டாரண்ட்டில் சர்வராக வேலை செய்து வந்தார். அந்த ரெஸ்டாரண்ட்டில் தான் நடிகை ரே டான் இவரை கண்டு ஒரு ஹாரர் படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றுக் கொடுத்தார். இன்று இவரது சொத்து மதிப்பு முப்பது மில்லியன் டாலர். 2016ம் ஆண்டு அதிக சம்பளம் பெரும் நடிகர்கள் பட்டியலில் 16 இடத்தை பிடித்திருந்தார் கிறிஸ் ப்ராட்.

  ஜூவல் க்ளிச்சர்!

  ஜூவல் க்ளிச்சர்!

  இவர் ஓர் அமெரிக்க பாடகி, நடிகை, தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் ஆவார். இவர் பிரபலம் அடையும் முன்னரே இறந்திருக்க வேண்டியவர். இவரது முதலாளி, இவர் தன்னுடன் படுக்கைக்கு வரவில்லை என்ற காரணத்தால் பதவி விலக செய்தார். அவர் ஏற்கனவே தங்கியிருந்த வீட்டில் இருந்து விரட்டினார். பிறகு இவர் தங்கியிருந்த வேறொரு வீட்டிலும் வாடகை தர முடியாத சூழல் ஏற்பட்டது.

  மரணத்தின் விளிம்பில்...

  மரணத்தின் விளிம்பில்...

  ஆகையால் தற்காலிகமாக தனது காரிலேயே தங்கியிருந்தார் ஜூவல். இந்த காலக்கட்டத்தில் தனக்கு தனக்கு சிறுநீரக கோளாறு இருப்பதை கண்டறிந்தார். இதனால் ஒரு வேலையில் நீண்ட நேரம் இருக்க முடியாத சூழலும் ஏற்பட்டது. இவரிடம் மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லாத காரனத்தால் மருத்துவ செலவு கடினமாக மாறியது. ஒரு கட்டத்தில் தான் இறக்கும் தருவாயில் இருந்துதாக கூறியிருந்தார் ஜூவல்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  These World Famous Hero's Who Were Started as Zero in Their Life!

  These World Famous Hero's Who Were Started as Zero in Their Life!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more