For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளம்பெண்கள், குழந்தைகள் தாய்லாந்தில் படும் அவஸ்தை - Photos

|
Slavery and Forced Labor in The Thai Fishing Industry!

democracyforburma

ஜீன் மைக்கல் க்லாஜட் (Jean-Michel Clajot) கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக டாக்குமென்ட்ரி புகைப்படக் கலைஞராக பணியாற்றி வருகிறார். இவரது புகைப்படத் தொகுப்புகள் சர்வதேச அரங்கில் விருதுகள் வாங்கி குவித்துள்ளன.

பொதுவாக தாய்லாந்து என்றாலே எல்லாருக்கும் கேளிக்கை, சுற்றுலா, இன்பமான வாழ்க்கை, ஜாலியாக இருக்கலாம் என்று தான் நாம் கருதுவோம். ஆனால், அங்கேயும், ஏழ்மை, அகதிகள் என்று வாழ்க்கையை தொலைத்துவிட்டு மீட்டெடுக்க எதையாவது செய்து தப்பித்துவிடலாம், பிழைக்க வழித் தேடலாம் என்ற கூட்டம் இருக்கிறது.

ஜீன் மைக்கல் க்லாஜட் கடலில் கொத்தடிமை (Slavery at Sea) என்ற பெயரில் ஒரு போட்டோ டாக்குமென்ட்ரி எடுத்து வெளியிட்டார். அதில் நாம் அறியாத தாய்லாந்து மற்றும் அங்கே இல்லீகலாக வாழ்ந்து வரும் பர்மா மக்கள் மற்றும் அவர்கள் வாழும் முறை போன்றவை பதிவு செய்யப்பட்டன.

கடந்த 2012ம் ஆண்டு அமெரிக்காவின் டிப்பார்ட்மெண்ட் ஆப் ஸ்டேட் வெளியிட்ட அறிக்கைப்படி உலகம் முழுவதும் 2.7 கோடி இளம் பெண், குழந்தைகள் ஆட்கடத்தலில் சிக்கி உலகின் பல பகுதிகளில் அடிமைகளாக வாழ்ந்து வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

உலகிலேயே சீனா மற்றும் நார்வேவிற்கு பிறகு கடல் உணவு ஏற்றுமதியில் மூன்றாம் இடத்தில் இருப்பது தாய்லாந்து. கடல் வால் உயிரினங்கள் வளர்ப்பு மற்றும் கடல் உணவு ஏற்றுமதி என்று எடுத்துக் கொண்டால் 2011ம் ஆண்டின் கணக்கின் படி வருடத்திற்கு 7.3 பில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டுகிறது தாய்லாந்து.

ஆனால், தாய்லாந்தின் இந்த மீன்பிடி தொழிலானது பெரும்பாலும் கட்டாயப் படுத்தி வேலைக்கு ஆல் அமர்த்துவது மற்றும் அடிமைகளை வைத்து தான் நடத்தப்படுகிறது என்பது உலகம் அறியாத கொடூரமான உண்மை.

தாய்லாந்தில் வசித்து வரும் இருபது இலட்சம் மியான்மார் மக்களில், பத்து இலட்சம் பேர் இல்லீகலாக வசித்து வருவோர். தாய்லாந்தில் குறைந்த விலையில் கடல் உணவு ஏற்றுமதி நடக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அடிமைகளாக பயன்படுத்தப்படும் பர்மா மக்கள். இவர்களை ஒரு மாடர்ன் கொத்தடிமைகளாக நடத்தி வருகிறார்கள்.

கொத்தடிமைகளாக அழைத்து வரப்படும் மக்களுக்கு 95% குறைவான சம்பளம் தான் தரப்படுகிறது. இது 19 நூற்றாண்டில் நடந்த கொத்தடிமையை விட கொடுமையானது என்கிறார்கள் சில புள்ளியல் நிபுணர்கள்.

லிட்டில் மியான்மார் என்று அழைக்கப்படும் இடம் Mahachai, இது பாங்காக்கின் தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கிறது. இல்லீகலாக இடம்பெயர்ந்து வந்த அகதிகள் இங்க தான் அதிகளவில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தாய்லாந்து மீன்பிடி தொழிலில் இருப்பவர்கள் தான் வேலை தருகிறார்கள்.

மிக குறைந்த அளவில் ஊதியம் கொடுத்து இவர்களிடம் வேலை வாங்கி வருகிறார்கள். மேலும், இவர்களை அடிமைகளை போல கொடுமைப்படுத்துவதும் உண்டு. சில சமயங்களில் அவர்களுக்கான அடிப்படை தேவைகள் கூடப் பூர்த்தி செய்துத் தரப்படுவதில்லை.

சிலருக்கு அவர்களுக்கான அடிப்படை உரிமை, தகுதி கூட கொடுக்கப்படாமல் கொத்தடிமை போல வாழ்ந்து வருகிறார்கள். வெகு செயலர் எப்படியோ கிடைக்கும் பணத்தை வைத்து வேறு சில வேலைகள் அல்லது சாப்பாட்டு கடை, புத்தக விற்பன கடை, ஹேர் சலூன் போன்ற சிறுசிறு தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

இவையும் மிகுந்த அச்சத்துடன் தான் நடத்தி வருகிறார்கள். எப்போது வேண்டுமானாலும் இவர்கள் இங்கிருந்து விரட்டப்படலாம், அல்லது மீண்டும் அடிமைகளாக கட்டாயப்படுத்தி வேலைக்கு அழைத்து செல்லப்படலாம்.

அதிகாரப்பூர்வமாக இந்த ஏரியா தாய்லாந்து காவல் துறை கட்டுப்பாட்டின் கீழே தான் இருக்கிறது. ஆனால், அகதிகளாக வந்து இந்த அடிமை வாழ்க்கை நடத்தி கொஞ்சம் சம்பாதிக்கும் பணத்தில் அவர்களுக்கு லஞ்சம் கொடுத்து அங்க வசித்து வருகிறார்கள் மியான்மார் மக்கள். ஆகையால், தாய்லாந்து போலீஸ் இவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பது இல்லை.

ஒருவேளை தங்களுக்கு வரும் லஞ்சம் நின்றுவிட்டால், உடனே துரிதமாக நடவடிக்கை எடுக்க துவங்கிவிடும் தாய்லாந்து போலீஸ். அப்படி இல்லீகல் குற்றச்சாட்டு மூலம் கைது செய்ய போலீஸ் வரும் பட்சத்தில், உட்கார்ந்து பேசி ஒரு தொகையைக் கொடுத்து போலீஸ் வாயை அடைத்து, தப்பித்துவிடுகிறார்கள் இந்த மக்கள்.

இந்த 21ம் நூற்றாண்டில் இப்படி ஒரு மாடர்ன் கொத்தடிமைத்தனம் நடந்துக் கொண்டிருப்பது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

Jean-Michel Clajot

பாங்காக்கின் ஸாஃபன் ப்ளா மீன் மார்கெட்டில் இல்லீகலாக வேலை செய்து வரும் பர்மாவை சேர்ந்த ஆண்.

#2

#2

Jean-Michel Clajot

தாய்லாந்து மீன்பிடி தொழில் நடக்கும் இடமான சமுத் சகன் எனும் இடத்தில் வசித்து வரும் பர்மாவை சேர்ந்த பெண் மற்றும் அவரது குழந்தை.

#3

#3

Jean-Michel Clajot

தாய்லாந்து மீன்பிடி தொழில் நடக்கும் இடத்தில் கைக் குழந்தையுடன் குடித்தனம் நடத்தி வரும் பர்மாவை சேர்ந்த தாய்.

#4

#4

Jean-Michel Clajot

தாய்லாந்தில் இல்லீகலாக வேலை செய்துவரும் பர்மா மக்கள்...

#5

#5

Jean-Michel Clajot

படகில் பிடித்துவரப்பட்ட மீன்களை கீழே இறக்கும் வேலையில் பர்மா அகதிகள்...

#6

#6

Jean-Michel Clajot

ஸாஃபன் ப்ளா மீன் மார்க்கெட்டில் இரவில் இல்லீகலாக வேலை செய்து வரும் பர்மா மக்கள்...

#7

#7

Jean-Michel Clajot

சமுத் சகன் எனும் இடத்தில் பர்மாவில் இருந்து அகதிகளாக வந்த மற்றும் இல்லீகலாக வேலை செய்து வரும் மக்கள்...

#8

#8

Jean-Michel Clajot

தாய்லாந்தில் கிடைத்த இடத்தில் வாழ்க்கை நடத்தி வரும் பர்மா மக்கள்

#9

#9

Jean-Michel Clajot

மீன் பிடித்துவிட்டு துறைமுகம் திரும்பும் பர்மா மக்கள்...

#10

#10

Jean-Michel Clajot

சமுத் சகன் இடத்தில் நெரிசலான தீப்பெட்டி போன்ற வீடுகளில் வசித்து வரும் பர்மா மக்கள்...

#11

#11

Jean-Michel Clajot

முந்தைய இரவு பிடித்து வந்த மீன்களை அன்லோட் செய்துக் கொண்டிருக்கும் பர்மா வேலை ஆட்கள்..

#12

#12

Jean-Michel Clajot

கடலில் மீன் பிடித்துவிட்டு, Mahchai துறைமுகத்திற்கு திரும்பும் வகையில், அசதியில் தூங்கிக் கொண்டிருக்கும் பர்மா நபர்...

#13

#13

Jean-Michel Clajot

ஸாஃபன் ப்ளா மீன் மார்கெட்டில் புகைத்துக் கொண்டிருக்கும் பர்மாவை சேர்ந்த வயதான பெண்...

#14

#14

Jean-Michel Clajot

தாய்லாந்தில் இல்லீகலாக வேலை செய்து வரும் பர்மா மக்கள்... மீன் பிடித்தல் என்று மட்டுமின்றி, இவர்கள் கிடைக்கும் வேலைகளை பிழைப்பிற்காக செய்து வருகிறார்கள்.

#15

#15

Jean-Michel Clajot

மீன் பிடித்தல் வேலை முடிந்து துறைமுகம் திரும்புகையில் படகினுள்...

#16

#16

Jean-Michel Clajot

மீன் பிடிக்க செல்லும் போது, படகினுள்...

#17

#17

Jean-Michel Clajot

ஏற்றுமதிக்கு மீன்களை தயார்நிலைப் படுத்த வேலை செய்துக் கொண்டிருக்கும் பர்மா நபர்கள்..

#18

#18

Jean-Michel Clajot

இவர்கள் பர்மாவில் இருந்தும் குடும்பம், குடும்பமாக இங்கே இல்லீகலாக வந்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

#19

#19

Jean-Michel Clajot

சமுத் சகன் எனும் மீன் பிடி தொழில் நடக்கும் இடத்தில், கூட்டம், கூட்டமாக பர்மா மக்கள் வசித்து வரும் இடம்...

#20

#20

Jean-Michel Clajot

#21

#21

Jean-Michel Clajot

மீன் பிடித்து முடித்த பிறகு, mahchai துறைமுகம் ததிரும்புகையில், அசதியில் உறங்கி கொண்டிருக்கும் பர்மாவை சேர்ந்த அகதி ஒருவர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Slavery and Forced Labor in The Thai Fishing Industry!

Thailand is the third-largest seafood exporter in the world, after China and Norway, with exports valued by the Food and Agriculture Organization at around $7.3 billion in 2011. The Thai fishing industry extensively relies on slavery and forced labor.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more