For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் நினைப்பது போலல்ல எங்கள் வாழ்க்கை - ஃபேஷன் மாடல்கள் கூறும் பகீர் வாக்கு மூலங்கள்!

By John
|

மாடலிங், ஃபேஷன் என்றாலே பெரும்பாலானோருக்கு நினைவிற்கு வருவது கவர்ச்சி தான். ஃபேஷன் என்றாலே கவர்ச்சி என்ற பாய பிம்பம் உலகம் முழுக்க பரவிக் கிடைக்கிறது. சிந்தால் சோப்பில் இருந்து, ஷாம்பூ, கார், பைக், டூத் பிரஷ், சூப்பர் மார்கெட் என எந்த விதமான விளம்பரங்களில் நடித்தாலும் அவர்கள் மாடல் தான்.

ஆனால், ஃபேஷன் என்ற ஒற்றை சொல் முன்னே சேர்ந்துக் கொள்ளும் போது, தானாக கவர்ச்சி என்ற மற்றொரு சொல் பின்னே சேர்ந்துக் கொள்கிறது. இந்தியில் பிரியங்கா சோப்ரா, கங்கனா நடிப்பில் வெளியான ஃபேஷன் என்ற திரைப்படத்தை நீங்கள் பார்த்திருந்தால்... அந்த துறையில் என்னென்ன விஷயங்கள் எல்லாம் நடக்கிறது என்பதை ஏறத்தாழ அறிந்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும்.

அந்த படத்தை தாண்டி, மாடல்கள் மீது நமக்கொரு பொதுவான கருத்துகள் இருக்கும். மாடல்கள் என்றாலே போதை பழக்கம் கொண்டிருப்பார்கள், நிறைய ஊர் சுற்றுவார்கள். அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று நாம் கருத்துக்கள் கொண்டிருப்போம். ஆனால், எங்க வாழ்க்கை எப்படியானது தெரியுமா? என்று தங்கள் வாழ்க்கை குறித்த உண்மைகள் மாடல்கள் சிலர் விவரித்துள்ளனர்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

நான் ஃபேஷன் மாடலாக கடந்த சில ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். எனக்கு இப்போது 25 வயதாகிறது. நான் ஃபேஷன் உலகில் வேலை செய்து வருவதால், நிறையா மாடல் அழகிகளுடன் பணிப்புரிவதால் எனக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருக்கும் என என் தோழர்கள் கருதுகிறார்கள். இதனால், நான் விரும்பும் சில பெண்களும் என்னை தவிர்த்து சென்றுவிடுவதுண்டு. ஆனால், இன்று வரையிலும் நான் ஒரு சிங்கிளாக தான் வாழ்ந்து வருகிறேன்.

#2

#2

நான் ஒரு மாடலாக வேலை செய்து வந்தேன். கைநிறைய பணம், சுகபோகமான வாழ்க்கை என்று தான் வாழ்ந்து வந்தேன். ஆனால், நான் மாடலிங் உலகில் இருந்து விலகி பின் இராணுவத்தில் சேர்ந்துவிட்டேன். இங்கே சம்பளம் குறைவு தான். ஆனால், மனதுக்கு நிறைவாக இருக்கிறது. முன்பை விட இப்போது நான் ஒரு சிறந்த வேலையை செய்வதாக உணர்கிறேன். பெருமை அடைகிறேன்.

#3

#3

நான் பள்ளி படித்து வந்த போது, கொஞ்சம் குண்டாக இருந்ததால் அனைவரின் கேலி, கிண்டலுக்கு ஆளானேன். மேலும் அப்போது நான் ஷார்ட் ஹேர் ஸ்டைல் தான் பின்பற்றி வந்தேன். பள்ளி முடிந்து கல்லூரி காலத்தில் நான் உடல் எடை குறைத்து, முடியை நீளமாக வளர்த்தேன்... இப்போது மாடலாக இருக்கிறேன். தினமும் பல ஆண்கள் நேரிலும், ஆன்லைனிலும் பிரபோஸ் செய்து வருகிறார்கள்.

#4

#4

எனக்கு காது கேட்காது. ஆயினும் ஒரு மாடலாக திகழ்ந்து வருகிறேன். எனக்கு காது கேட்காமல் இருப்பதை எனது பலமாகவே காண்கிறேன். இதனால், யார் என்னை ஏசினாலும், என் இலட்சியத்திற்கு தடையாக பேசினாலும் அது என் காதுகளில் விழாது. எனக்கு இதனால், கவன சிதறல் ஏற்படுவது இல்லை. நான் ஒரு மாடல் என்பதில் பெருமை அடைகிறேன்.

#5

#5

ஒரு கட்டத்தில் என்னுள் தற்கொலை செய்துக் கொள்வதற்கான எண்ணம் நிறையவே இருந்தது. நான் நிறைய போதை உட்கொண்டும் வந்தேன். சில மாதங்கள் நான் மனநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். இப்போது நான் ஒரு மாடல். எனக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு மகன் இருக்கிறான். வாழ்க்கை உங்களுக்கான சிறப்பான பகுதியை கொண்டிருக்கிறது. அதை நாம் தான் தேடி சென்று அடைய வேண்டும்.

#6

#6

நானொரு மாடல், இதுவரை நான் யாரையும் காதலித்ததும் இல்லை, என்னிடம் யாரும் பிரபோஸ் செய்ததும் இல்லை. இவளுக்கு எப்படியும் ஆள் இருக்கும் என்ற எண்ணத்திலேயே யாரும் என்னை நெருங்குவதில்லை. நானும், யாரிடமும் எனக்கு காதலன் இல்லை என்று கூறிக் கொண்டது இல்லை.

#7

#7

நான் ஒரு மாடல், நான் திருமணம் செய்துக் கொள்ளவிருக்கும் நபர் அவ்வளவு ஈர்ப்பானவர் அல்ல (வெளித் தோற்றத்தில்), அதனால் அவர், எனக்கு அவர் ஏற்ற ஜோடி இல்லை என்று கருதினார். ஆனால், அவர் எவ்வளவு அழகானவர் (மனதளவில்) என்று நான் மட்டுமே அறிவேன். என் தோழிகள் சிலரே என் விருப்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், எங்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது என்பது தான் நிதர்சனம்.

#8

#8

மாடலாக இருப்பதில் நிறைய சந்தோஷம் கிடைக்கிறது. கூகுளில் சாதாரணமாக தேடும் போது கூட, அடிக்கடி என் புகைப்படம் தென்படும். அதை எல்லாம் காணும் போது மனதுக்குள் ஒரு பூரிப்பு வெளிப்படும். அந்த பூரிப்பை அதிகரித்துக் கொள்ள தான் நான் மாடலிங் செய்கிறேனே தவிர, வேறு எதற்காகவும் அல்ல.

#9

#9

நான் ஒரு பெண்ணை நேசித்து வந்தேன். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கல்லூரி காலம் முதலே ஆழமாக காதலித்து வந்தோம். கல்லூரி முடித்த பிறகு எனக்கு அவ்வப்போது பார்டைம் மாடலிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. வருவாய்க்காக நானும் அதை ஏற்றுக் கொண்டேன்.

ஆனால், என் காதலிக்கு இதில் விருப்பம் இல்லை. நான் வேறு பெண்ணுடன் நெருக்கமாக பழகுகிறேன் என சந்தேகம் கொள்கிறாள். ஆனால், நான் இந்த வாய்ப்புகள் மூலம் பணம் சம்பாதிப்பதே எங்கள் திருமணம் மற்றும் எதிர்காலத்திற்காக தான் என்பதை அவள் ஏனோ புரிந்துக் கொள்ள மறுக்கிறாள்.

#10

#10

மாடலாக இருந்தாலே அந்த பெண் கற்பற்றவள், அவள் யாருடன் வேண்டுமானாலும் செல்வாள் என்ற கண்ணோட்டம் நம் சமூகத்தில் இருக்கிறது. மாடலிங்கில் பல்வேறு பிரிவுகள், துறைகள் இருக்கின்றன. விளம்பர மாடல்கள், பிராடக்ட் மாடலிங், ஃபேஷன் மாடல்கள், அட்டைப்படங்களில் கவர்ச்சியாக தோன்றுவதற்காக மட்டும் மாடலிங் செய்பவர்கள் என பல பிரிவுகளில் இயங்கி வருகிறார்கள்.

ஆனால், இதை எல்லாம் அறிந்துக் கொள்ளாமல் சாதாரணமாக மாடலிங் செய்தாலும் கூட அந்த பெண்ணை கொச்சைப் படுத்தி தான் பேசுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secret Confessions: Fashion Models

Fashion Models have revealed some shocking confessions from their own experience and struggles they came across.
Story first published: Monday, October 22, 2018, 17:50 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more