Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
விந்தணு தானம் பெற்று கருத்தரித்த பெண்கள், தங்கள் அனுபவம் குறித்து கூறிய இரகசிய உண்மைகள்!
விந்தணு தானம் பெற்று கருத்தரித்த பெண்கள், தங்கள் அனுபவம் குறித்து கூறிய இரகசிய உண்மைகள்!
ஆரம்பத்தில் விந்தணு தானம் என்பது கொடிய காரியமாக, சமூகத்தின் பாவச் செயலாக காணப்பட்டது என்றாலும்.., இன்று விந்தணு தானம் என்பது சாதாரணமாகி வருகிறது. விந்தணு தானம், ஐ.வி.எப் எனப்படும் செயற்கை முறையில் கருத்தரித்தல் போன்றவை மீது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

நமது உணவு பழக்க மாற்றங்கள், வாழ்வியல் மற்றும் வேலை குறித்த மாற்றங்கள் என பலவற்றால் ஆண், பெண் கருவள குறைபாடு அதிகரித்து வருகிறது. போதை பழக்கம், உட்கார்ந்தே நாள் முழுக்க வேலை செய்வது, உடல் சோர்வு, உடல் பருமன், சர்க்கரை நோய், இரத்த ஓட்ட குறைப்பாடு போன்ற பல காரணங்கள் கருவள குறைபாட்டை ஏற்படுத்துகிறது.
கருவள குறைபாடு என்ற காரணம் மட்டுமின்றி, திருமணத்தில் நாட்டமின்றி குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெண்களுமே கூட விந்தணு தனத்தை குழந்தை பெற்றுக் கொள்ள ஒரு வழிமுறையாக பின்பற்றுகிறார்கள். இப்படி விந்தணு தானம் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் தங்கள் அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்ட தகவல்கள்...

#1 விவாகரத்தான பெண்...
விவாகரத்தான பிறகு, இரண்டாம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பி விந்தணு தானம் பெற்ற பெண் பகிர்ந்து கொண்ட அனுபவம்...
விவாகரத்துக்கு பிறகு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால், திருமணம் செய்துக் கொள்ள வேண்டியது தான் வழி என்று பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். நான் இளம் வயதிலேயே குழந்தைகள் பெற்றுக் கொள்ள விரும்பிய பெண்.
என் முதல் குழந்தையின் தந்தையும் நானும் விவாகரத்து செய்துக் கொண்டோம். விவாகரத்துக்கு பிறகு நான் இரண்டாம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினேன். ஆனால், அதற்காக நான் தேர்வு செய்தது மற்றொரு திருமணம் அல்ல, விந்தணு தானம்.

விந்தணு வங்கி!
முறையாக விந்தணு தானம் பெற்று குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால், விந்தணு சேமிப்பு வங்கியை தான் அணுக வேண்டும். அவர்களிடம் நிறைய விந்தணு தானம் செய்தவர்களும் கோப்புகள் இருக்கும்.
நீங்கள் தானம் பெரும் விந்தின் உரிமையாளர் யார், அவரது பின்புலம் என்ன? நடவடிக்கை, மரபணு சோதனை, மருத்துவ வரலாறு போன்றவை விந்தணு சேமிப்பு வங்கியில் இருந்து தான் சரியாக பெற முடியும்.

முறையாக...
ஒரு சிங்கிள் மதராக இருந்துக் கொண்டு... விந்தணு தானம் பெற்று குழந்தை பெற்றுக் கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
ஆனால், நான் செய்ய வேண்டிய அனைத்து முறையான கடமைகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றி என் இரண்டாம் குழந்தைக்கான விந்தணு தானம் பெற்றேன். முறையான வழியில் செல்வது தாமதம் ஆனாலும் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்.

#2 சிங்கிள் பெண்மணி...
35 வயதான பிறகும் தான் விரும்பும் வகையிலான துணை கிடைக்காத பெண்மணி, விந்தணு தானம் பெற்றது குறித்து பகிர்ந்து கொண்ட அனுபவம்...
எனக்கு வயது 35 (விந்தணு தானம் பெற்ற போது). எனது அனைத்து தோழிகளும் திருமணமாகி இரண்டாவது குழந்தை பெற்றிருந்தனர். சிலர் இரண்டாவது குழந்தைக்கு தயாராகி இருந்தனர்.
ஆனால், நான் சிங்கிள் பெண்ணாக இருந்தேன். நான் எத்தனையோ டேட்டிங் இணையங்கள் மற்றும் பல வழியில் தேடியும் கூட நான் விரும்பும் வகையிலான ஆண் துணை கிடைக்கவில்லை.

ஐ.வி.எப் முறை
எனது இளம் வயதில் இருந்து குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. நான் முப்பதுகளுக்குள் நுழைந்ததில் இருந்து இனி, குழந்தை பெற்றுக் கொள்வது கடினம் என அனைவரும் கூற ஆரம்பித்துவிட்டனர்.
ஆகையால், ஒருவேளை சிங்கிளாகவே இருந்துவிட்டால், ஐ.வி.எப் முறை பின்பற்ற பணம் தேவைப்படும். என்னிடம் அத்தனை பணம் இல்லை. ஆகையால், ஒருவருட காலம் ஐ.வி.எப் முறைக்கான கட்டண பணத்தை சேமித்து பிறகு ஒரு விந்தணு சேமிப்பு வங்கியை அணுகினேன்.

குழந்தைக்கு பின் திருமணம்!
ஏறத்தாழ நான்கு வருடங்களுக்கு பிறகு எனக்கு ஒரு அழகிய ஆண் மகன் பிறந்தான். அவன் தான் எனது பெருமை மற்றும் சந்தோஷம், வாழ்க்கை. என் வாழ்க்கை கொஞ்சம் ரிவர்ஸாக அமைந்தது.
என் முதல் மகனை விந்தணு தானம் மூலம் பெற்ற பிறகே, எனக்கான துணையை நான் தேர்வு செய்து திருமணம் செய்துக் கொண்டேன். இதை நான் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் கருதுகிறேன்.

#3 வேலை வளர்ச்சியால் தடை...
வேலை வளர்ச்சி காரணமாக வாழ்க்கை துணை தேடுதலை மறந்து, பிறகு விந்தணு தானம் பெற்ற பெண் பகிர்ந்த அனுபவம்...
முப்பது வயதில் தான் நான் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினேன். நான் எனது வேலை மற்றும் அதன் வளர்ச்சியின் பின்னே ஓடிக் கொண்டிருந்தேன். ஐந்தாண்டுகளில் மூன்று முறை பிரமோஷன் வாங்கி இருந்தேன்.
போதுமான அளவு நான் சம்பாதித்துவிட்டேன். நான் அதுவரை எந்தவொரு ஆணுடனும் டேட்டிங் சென்றதில்லை. ஆகவே, வேலை வளர்ச்சியின் கவனத்தில் வாழ்க்கை மற்றும் வாழ்க்கை துணை சார்ந்த தேடுகளில் ரிலாக்ஸாக இருந்துவிட்டேன்.

30க்கு மேல்...
முப்பது வயதுக்கு மேல் தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகரித்தது. மேலும், நான் இளம் வயதில் இருந்தே குழந்தைகளை பராமரிப்பதில் ஆர்வம் கொண்டிருந்ததால், நிறைய குழந்தைகள் எனக்கு பழக்கம்.
அவர்கள் எல்லாம் என்னை ஆண்ட்டி என்று அழைக்கும் போது எனக்கென ஒரு குழந்தை வேண்டும் என்ற எண்ணம் என்னுள் அதிகரிக்கும்.

டேட்டிங் முடியாது...
பிறகு, விந்தணு தானம் பெற்று குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தேன். 32 வயதில் என் முதல் குழந்தையை பெற்றெடுத்தேன். முப்பதுகளின் பாதியை எனது மகனை வளர்க்கவே செலவழித்து விட்டேன். இனிமேல் டேட்டிங் செய்வது எல்லாம் மிகவும் கடினம். எனக்கு ஒரு மகன் வேறு இருக்கிறான்.
என் வயதில் இருக்கும் ஆண்கள் இளம் பெண்களை டேட் செய்யத் தான் விரும்புகிறார்கள். அவர்களது தேவை இளமையான, ஆர்வம் மிகுந்த, சுதந்திரமான பெண். இது யாவும் என்னிடம் இல்லை.

#4 நினைத்ததை விட....
ஒரு வழக்கறிஞர் பெண்மணி விந்தணு தானம் பெற்றது குறித்து பகிர்ந்த அனுபவம்...
நான் ஒரு வழக்கறிஞர் பெண்மணி. எனது வேலை சார்ந்து அதிக கவனத்தில் இருந்த எனக்கு.. எப்படி வருடங்கள் உருண்டோடியது என்ற தெரியவில்லை. எனக்கு வயதாகி கொண்டிருக்கிறது என்பதை அறிந்தேனே தவிர, நான் திருமணத்தை பற்றி பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை.
ஒரு கட்டத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறந்தது. ஒரு விந்தணு சேமிப்பு வங்கியை தொடர்பு கொண்டேன். ஐ.வி.எப் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள சில காலம் ஆகும் என்று கருதினேன்.

கவலை இல்லை.!
ஆனால், நான் எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் பிடித்தது. நான்கு ஆண்டுகளில் 14 முறை ஐ.வி.எப் முறையை பின்பற்றி கருத்தரித்தேன். இப்போது எனது மகளுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறன்.
என் வாழ்வின் பெரும் மகிழ்ச்சியான தருணம் என் மகள் தான். திருமணம் செய்துக் கொள்ளமால் விந்தணு தானம் மூலம் குழந்தை பெற்றதை குறித்து எனக்கு துளி அளவும் கவலை இல்லை.



Click it and Unblock the Notifications











