அடல்ட் படங்களில் நடித்த நடிகர், நடிகைகள் கூறிய அதிர்ச்சியளிக்கும் 15 வாக்குமூலங்கள்!

By Staff
Subscribe to Boldsky

அடல்ட் படங்களில் நடிப்பவர்ககளை வெறும் கவர்ச்சி பொருளாக மட்டுமே நாம் கண்டிருப்போம். எப்படி பாலியல் தொழில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு பின் ஒரு சோக கதை இருக்கிறதோ, அதே போல தான் இவர்களில் சிலரது வாழ்க்கை பின் சில தேவைகள், சில அவசரம், சில புறக்கணிப்புகள், சில கண்ணீர் இருக்கின்றன.

சிலர் அடல்ட் படங்களை தங்கள் விருப்ப தேர்வாகவே பார்க்கிறார்கள். காரணம் அடல்ட் படங்களில் நடிப்பதன் மூலம் நிறைய சம்பாதிக்கலாம், குறுகிய காலக்கட்டத்தில் செட்டிலாகி வேறு வேலை பார்த்துக் கொண்டு வாழ்க்கை பயணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்கள்.

அதே சமயத்தில் அவசரக் காலத்தில் பணம் சீக்கிரம் தேவை என்ற காரணத்தாலும் மேற்கத்திய நாடுகளில் பல மாணவர்கள் அடல்ட் படங்களில் நடிக்கிறார்கள். இப்படியாக அடல்ட் படத்தில் நடத்த நடிகர் நடிகைகள் தாங்கள் எதற்காக, எந்த சூழலில் இந்த துறைக்குள் வந்தோம் என்பது குறித்து வெளிப்படையாக கூறிய வாக்கு மூலங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை தான் மக்கள் முதலில் நினைவில் கொள்ள வேண்டும். அனைவருக்கும் கடந்த காலம் என ஒன்று இருக்கிறது. எனக்கும் அது இருந்தது, நான் எரோடிக் படங்களில் நடித்து வந்தேன், போதை பழக்கமும் இருந்தது. ஆனால், இப்போது நான் ஒரு கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். என் கடந்த காலம் பலருக்கும் தெரியாது.

#2

#2

நான் என்ன கூற வருகிறேன் எனில், தொழில் சார்ந்த நான் மற்றும் சுய வாழ்க்கை சார்ந்த நான் என்ற மாறுபட்ட வாழ்க்கையை யாரும் பிரித்து காண்பதில்லை. நான் ஒரு அடல்ட் படத்தில் நடிக்கும் நட்சத்திரம் என்று கூறியவுடன் பெண்கள் என் மீது தவறான ஈர்ப்பு கொள்கிறார்கள். அது தொழில், என் தனிப்பட்ட விருப்ப, வெறுப்பு வேறு என்பதை பிறர் அறிவதில்லை.

#3

#3

நான் எனது கல்லூரி கட்டணம் மற்றும் படிப்பு செலவுகளுக்காக தான் அடல்ட் படங்களில் நடிக்க துவங்கினேன். அதன் மூலம் சம்பாதித்த பணத்தை கொண்டு எனக்கான, எனக்கு பிடித்த தொழில், வேலையை அமைத்துக் கொண்டேன்.

இதில் விசித்திரம் என்னவெனில், நான் படித்து, விரும்பி செய்யும் வேலையில் நான் சம்பாதிப்பதை காட்டிலும், எனக்கு பிடிக்காமல் செய்த அடல்ட் படங்கள் மூலம் நான் சம்பாதித்த பணம் தான் அதிகம். பணத்தில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும் மன நிம்மதி என்பது தான் முக்கியம்.

#4

#4

நான் எப்போதுமே என்னை விரும்பும் ஆண்களிடம் எனது கடந்த காலத்தை மறைப்பது இல்லை. நான் ஒரு அடல்ட் படத்தில் நடித்த நடிகை என்பதை அவர்களிடம் கூறிவிடுவேன். நான் எதிர்பார்ப்பது எல்லாம் என்னையும், எனது கடந்த காலத்தையும் புரிந்து கொண்டு ஏற்கும் ஒரு மனதை தான். சில சூழலின் காரணத்தால் அடல்ட் படத்தில் நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன். என்னை முழுமையாக ஏற்கும் ஒருவருடன் உறவில் இணைய, காதல் கொள்ள காத்திருக்கிறேன்.

#5

#5

நான் ஒரு ஓரினச் சேர்க்கையாளன். இதை அறிந்த பிறகு என் பெற்றோர் என்னை வீட்டை விட்டு வெளியே விரட்டி விட்டார்கள், படிப்பு, உணவு, தங்க இடம் என அனைத்திற்கும் பணம் தேவை. எப்போது தான் என்னை போன்ற இன்னொரு சகோதரை அடல்ட் படங்களில் நடிப்பதை அறிந்தேன். அவர் மூலமாக தான் ஓரினச் சேர்க்கையாளர் அடல்ட் படங்களில் நடித்தேன். ஓரினச் சேர்க்கையாளனாக இருந்தாலும், எனக்கும் உறவு சார்ந்த நேர்மை கொள்கைகள் இருக்கின்றன. நான் இப்போது அடல்ட் படங்களில் நடித்ததை எண்ணி வருந்துகிறேன்.

#6

#6

என்னுடன் நட்பாக பழகி வரும் ஆண் ஒருவர் என்னை நேசிப்பதாக பிரபோஸ் செய்தார், அவரிடம் நான் கடந்த காலத்தில் அடல்ட் படங்களில் நடித்திருக்கிறேன் என்பதை கூறிவிட வேண்டுமா? அல்லது நான் இதை மறைத்துவிட்டால், எதிர்காலத்தில் இது ஒரு பிரச்சனையாக அமையுமா என்பது குறித்து அச்சம் கொள்கிறேன். நான் அவனை இழக்கவும் தயாராக இல்லை.

#7

#7

நான் இப்போது எனக்கு பிடித்த ஒரு வேலை செய்து வருகிறேன். என்னுடன் பலர் பணிப்புரிந்து வருகிறார்கள். நான் எனது கடந்த காலத்தில் அடல்ட் படங்களில் நடித்து வந்தேன் என்பதை கூறினால், அவர்கள் என்னை இப்போது ட்ரீட் செய்வதை போலவே ட்ரீட் செய்வார்களா என்பது பெரிய கேள்விக்குறி...

#8

#8

அடல்ட் படத்தில் நடித்து வந்த போது நான் ஒரு சிறந்த வேலை செய்து வருவதாக கருதி வந்தேன். ஆனால், எனக்கான ஒரு உண்மையான உறவை தேடி கண்டுபிடிக்க முடியாத நிலை உருவான போதே, நான் எவ்வளவு மோசமான வேலை செய்து வந்தேன் என்பதை உணர முடிகிறது. இப்போது அதை எண்ணி நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.

#9

#9

நான் பல்கலைகழகத்தில் படித்து வந்த போது, படிப்பிற்கான கட்டணம் செலுத்த இயலாத நிலை உருவானது. அப்போது வேறு வழியின்றி நான் அடல்ட் படங்களில் நடிக்க துவங்கினேன். எட்டே மாதங்களில் நான் கட்ட வேண்டிய பணத்தை விட அதிகமான பணம் எனக்கு கிடைத்தது.

#10

#10

நான் எனக்கான வேலை மற்றும் தொழிலை அமைத்துக் கொள்ள பணம் வேண்டும் என்பதாலேயே அடல்ட் படங்களில் நடிக்க துவங்கினேன். ஆனால், நான் இந்த காரணத்திற்காக தான் அடல்ட் படங்களில் நடிக்க வந்தேன், என் தேவை முடிந்துவிட்டால் விலகிவிடுவேன் என அறிந்த அந்த நிறுவனம், என்னை நீக்கிவிட்டனர்.

#11

#11

நானும் படிப்பு செலவுகளுக்காக தான் அடல்ட் படங்களில் நடிக்க துவங்கினேன். ஆனால், இது பெண்களை மிகவும் பாதிக்கும். என்னை போன்ற பெண்களுக்கு நான் கூறும் ஒரே அறிவுரை. கல்வி செலவுக்காக இந்த துறைக்குள் வரவேண்டாம். இது உங்கள் உடலையும், மனதையும் பாதி கொன்றுவிடும். அதன் பிறகு, நாம் கனவு கண்ட துறையில் ஜொலிக்க முடியும் என்பது பாதி கனவாகவே போய்விடும்.

#12

#12

நான் படிக்கும் போது வாங்கிய கல்வி கடனை அடைக்கவே அடல்ட் படங்களில் நடிக்க துவங்கினேன். எனக்கு வேறு வேலை கிடைக்கவில்லை. அந்த வேலை மூலம் கிடைத்த பணத்தை கொண்டு என் கல்வி கடனையும் கட்ட முடியவில்லை அதற்காகவே அடல்ட் படத்தில் நடிக்க துவங்கினேன். மூன்று ஆண்டுகள் தான் அடல்ட் படங்களில் நடித்தேன். அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு கல்வி கடன் அடைத்தது மட்டுமின்றி, சொந்த வீடும், காரும் வாங்கிவிட்டேன்.

#13

#13

பெண்கள் மட்டும் தான் கல்வி கடன் அல்லது கட்டணம் செலுத்த அடல்ட் படங்களில் நடிக்கிறார்கள் என்று கருத வேண்டாம். என்னை போன்ற ஆண்களும் இப்படியான துறையில் இதற்காக வேலை செய்ய சேர்வதுண்டு. எனது முதலாம் ஆண்டு கல்லூரி தொகை கட்டவே என்னிடம் பணம் இல்லை. வேறு வழி தெரியாமல் இதில் நுழைந்தேன்.

#14

#14

எனது கடந்த காலத்தில் எனது தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதற்காக நான் சில அடல்ட் படங்களில் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதில் இருந்து நான் மிக விரைவில் வெளிவந்துவிட்டேன். அதன் பிறகு, என் வேலை, திருமணம் என அனைத்தையும் ஏற்படுத்திக் கொண்டேன்.

ஆனால், சில ஆண்டுகளுக்கு பிறகு எனது மகன் எனது அடல்ட் வீடியோவை இணையத்தில் கண்டறிந்த போதுதான். நான் அன்று எவ்வளவு பெரிய தவறை செய்தேன் என்பதை உணர்ந்தேன்.

#15

#15

எனது பணத் தேவைக்காக ஏறத்தாழ ஒருவருட காலம் அடல்ட் படங்களில் நடித்தேன். அதன் பிறகு உடனே எனக்கான வேலையை தேடிக் கொண்டு நான் ரெகுலரான வேலை செய்ய துவங்கிவிட்டேன்.

இப்போது நான் செய்யும் வேலை கொஞ்சம் வித்தியாசமானது என்றாலும், சென்ற வேலையை போன்ற சுவாரஸ்யம் எதுவும் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Scandalous Confessions: I Used To Perform In Adult Films

    Although watching adult entertainment is an escape for those who enjoy it, it's created with real people. These entertainers have families, friends and a life outside of their sexy films. Here is their Scandalous Confessions.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more