For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் என் படங்கள் எந்த இணையத்தில் பதிவாகி இருக்கும் என்ற அச்சத்துடன் வாழ்கிறேன் - My Story #292

By Staff
|

நான் ஒரு எம்.என்.சி தரத்திலான விளம்பர நிறுவனத்தில் உயரிய பதவி வகித்து வருகிறேன். எனது துறை மற்றும் என் வாழ்வியல் முறை காரணத்தால் நாம் மாடர்ன் உடைகளே உடுத்தி வளர்ந்துவிட்டேன். இதில் எனக்கு எந்த ஒரு கூச்சமும் இல்லை. அதற்காக நான் மோசமானவள் என்று யாரும் கருத முடியாது. என் அலுவலகத்தில், பள்ளி, கல்லூரி தோழமை மத்தியில், எனக்கென ஒரு தனி அந்தஸ்தும், மரியாதையும் உண்டு. அது என் பெற்றோர், உறவினர்கள் கொடுத்து வந்ததல்ல.. என் குணாதியங்கள் மற்றும் பழக்க, வழக்கங்களால் நானாக வளர்த்துக் கொண்டது.

மாடர்ன் என்பது 90, 2000களில் இருந்த வாழ்க்கை. இன்று நாம் வாழ்ந்துக் கொண்டிருப்பது டிஜிட்டல் யுகம். நமது தனிப்பட்ட வாழ்க்கை என்பது இங்கே சூறையாடப்பட்டு வருகிறது. ப்ரைவேட் லைப் என்றால் என்ன என்று கேள்வி தான் கேட்க வேண்டும். நம் கையில் ஸ்மார்ட் போன்கள், நம் வாழ்க்கையை கொல்லும் கத்தியாக மாறி வருகிறது. புகைப்படம், விடியோக்கள் மூலமாக கொலைகள் நடக்கின்றன என்றால் நீங்கள் நம்புவீர்களா?

நான் ஒரு தைரியமான பெண்மணி... இன்டர்நெட் இன்றி என்னால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. ஆனால், இன்று அந்த இன்டர்நெட்டை எப்போது திறந்தாலும் என்னால் ஒரு அச்சம் தொற்றிக் கொல்கிறது. அதற்கு காரணம்.. என் வாழ்வில் நான் கடந்து வந்த அந்த ஒரு நாள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெட்ரோ பயணம்!

மெட்ரோ பயணம்!

நான் வசித்து வருவது ஒரு பெரும் நகரம். இங்கே இரு சக்கர வாகனத்தில் பயணிப்பதே கடினம். நான்கு சக்கர வாகனங்களில் பயணித்து அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை சூரியன் கண்விழிக்கும் போதே நாம் வீட்டை விட்டு கிளம்பி இருக்க வேண்டும். ஆனால், பல நாள் இரவு வரை நீடிக்கும் துறையில் பணிபுரியும் நான் சூரிய உதயத்தை காண்பதே அரிய நிகழ்வு. ஆகவே, பெரும்பாலும் என் இரு சக்கர வாகனத்தை மெட்ரோ நிலையத்தின் அருகே இருக்கும் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, மெட்ரோவில் பயணிப்பது தான் வாடிக்கை.

ஸ்கர்ட்!

ஸ்கர்ட்!

அன்று நான் நீண்ட இடைவேளைக்கு பிறகு என் சொந்த ஊருக்கு பிராயணம் செய்ய வேண்டி இருந்தது. என்னை பொறுத்தவரையில் ஜீன்ஸ், டாப்ஸ் அணிவதே ஒரு பாரம்பரிய உடை என்று தான் கூறுவேன். பெரும்பாலும் இந்த பெரும் நகர் என்னை மாடர்ன் உடையில் தான் தரிசனம் கண்டிருக்கிறது. ஸ்கர்ட் எனக்கு பிடித்தமான உடை. இந்த வெயிலுக்கு மட்டுமல்ல, என் உடல்வாகுக்கும் கூட அதுவே எனக்கு பொருத்தமாக இருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

சுதந்திரம்!

சுதந்திரம்!

என் வீட்டிலும் அப்பா, அம்மாவும் நான் எந்த உடை உடுத்த வேண்டும் என்று வற்புறுத்தியது இல்லை. ஆனால், ஊரில் இருக்கும் பெருசுகள் முதல் சிறுசுகள் வரை அனைவரும் என்னை ஏதோ லண்டன், நியூயார்க்கில் இருந்து குதித்தது போல காண்பார்கள் என்பதால், ஊருக்கு செல்லும் போது மட்டும் ஜீன்ஸ் டாப்ஸ் மட்டுமே எனது பிரத்தியேக உடையாக இருக்கும்.

நேர தாமதம்!

நேர தாமதம்!

அன்று ஒரு முக்கியமான விளம்பர ஷூட்டிங் மற்றும் கிளைன்ட் மீட்டிங் இருந்ததால். எப்போதும் என் உறுதுணையாக இருக்கும் ஸ்கர்ட் அணிந்து வேலைக்கு சென்றிருந்தேன். இரவு 11.30 மணிக்கு பேருந்து. நான் அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது மணி 9. அவசர அவசரமாக கிளம்பி கொண்டிருந்தேன். மெட்ரோ நிலையத்தில் ரயிலுக்காக காத்திருக்கிறேன். எப்போதுமே கூட்டம் அலைமோதும் ஆனால், அன்று அந்நேரத்தில் பெரிதாக கூட்டம் எதுவும் இல்லை. வார இறுதி அனைவரும் ஏற்கனவே மூட்டை முடிச்சு கட்டிக்கொண்டு கிளம்பி இருப்பார்கள் என்று கருதினேன்.

நெருடல்!

நெருடல்!

கூட்ட நெரிசல் இல்லாத அந்த நேரத்தில்.. திடீரென ஏதோ ஒரு நெருடல். என்னருகே யாரோ இருப்பது போல திடீர் உணர்வு. திரும்பி பார்த்தேன். யாரோ ஒரு இளம் வயது ஆண். என் பின்னால் நின்று கொண்டிருந்தான். சரி! இங்கே பெண்களை உரசி ருசி காணும் மிருகங்கள் அதிகமே என்று கொஞ்சம் நகர்ந்து நின்றேன். இப்போது என் ஸ்கர்ட்டை பிடித்து யாரோ இழுப்பது போன்ற உணர்வு.. சடாரென்று திரும்பி பார்த்ததில் அதிர்ச்சி அடைந்தேன். என் பின்னால் நின்றுக் கொண்டிருந்த அந்த இளைஞன், என் ஸ்கர்ட் கீழே மொபைல் மூலமாக படம் பிடித்துக் கொண்டிருந்தான்.

கண்ணீர் பதில்!

கண்ணீர் பதில்!

ஒரு நொடி இதயம் துடிப்பது நின்றது போன்ற உணர்வு. நான் கண்டதை அறிந்ததும் அவன் தட்டித்தடுமாறி ஓட துவங்கினான். நானும் அவனை விரட்டினேன். சிறிது தூரம் ஓடிய பிறகு அவன் மாயமானான். என்னை எதிரே வந்த ஒரு முதியவர் தடுத்து நிறுத்தி என்னம்மா ஆச்சு என்று வினவினார்... அவர் கெட்ட கேள்விக்கு என் இதழ்களில் இருந்து பதில் வரவில்லை. என் கண்களில் இருந்து நீர் மட்டுமே வழிந்தன.

பல கேள்விகள்!

பல கேள்விகள்!

மாடர்ன் உடைகள் உடலை மறைக்கலாம்... மனதை மறைக்காது அல்லவா.. என் சமூகம் ஆண்கள் தவறு செய்தால்... பெண்கள் அழ வேண்டும் என்றே கற்றுக் கொடுத்திருந்தது. நான் ஒரு தைரியமான பெண் என்பதை ஏனோ அந்த சமயத்தில் நான் முற்றிலும் மறந்துவிட்டேன். ஒரு ஓரமாக அமர்ந்து தரை ஈரமாகும் அளவிற்கு அழுது தீர்த்தேன். மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள், கேள்விகள், அவன் எத்தனை நேரமாக என் அருகே நின்றுக் கொண்டிருந்தான்.. எத்தனை நேரமாக படம் எடுத்துக் கொண்டிருந்தன.. இவை யாரும் என் கண்களை மீண்டும், மீண்டும் ஈரமாக்கி கொண்டே இருந்தன.

எதற்கு?

எதற்கு?

மொபைல் கேமராவை நாசா விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்தனர் என்று எங்கோ படித்த ஞாபகம். விண்வெளியில் ஆராய்ச்சியாளர்கள் எடை மிகுந்த கேமராவை சுமக்க முடியாது என்பதால் எடை குறைவான சிறிய வகையிலான கேமாராக்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன. இவை பின்னாட்களில் மொபைலில் கூடுதல் அம்சமாக இடம் பிடித்தன என்று படித்து அறிந்திருக்கிறேன். ஆனால், இப்போது கேமரா எதற்கு எல்லாம் பயன்படுத்த கூடாதோ அதற்கு எல்லாம் தான் பயன்படுத்த படுகின்றன.

பெண்கள்!

பெண்கள்!

பெண்கள் குளிப்பதை, பேருந்து, ரயிலில் கூட்ட நெரிசலில் பயணிப்பதை, அவர்களது அந்தரங்க பாகங்களை படம்பிடிக்க என்று தான் நிறைய பயன்படுத்துகிறார்கள். மேலும், இந்த டிஜிட்டல் யுகத்தில் எண்ணிலடங்கா இணையங்களில் தினந்தோறும் திறக்கப்படுகின்றன. அவற்றில் பெண்களின், படங்களும், விடியோக்களும் பத்வேற்றவென்றே சில தளங்கள் முளைக்கின்றன. இன்று, அவற்றில் எத்தனையில் என் படங்கள் பதிவாகி கொண்டிருக்கும் என்ற அச்சம் என்னுள் அனுதினமும் எழுகிறது.

அப்ஸ்கர்ட்டிங், டவுன் ப்லௌசிங்!

அப்ஸ்கர்ட்டிங், டவுன் ப்லௌசிங்!

இங்கே இப்படி என்றால்.. மேற்கத்திய நாடுகளில் அப்ஸ்கர்ட்டிங், டவுன் ப்லௌசிங் என்ற சில கேவலாமா சமாச்சாரங்களில் ஈடுபடுகிறார்கள். பெண்கள் ஸ்கர்ட் அணிந்து சென்றால், தொலைவில் இருந்து ஒருவன் கேமராவுடன் காத்திருப்பான்.. இன்னோருடன் அந்த பெண் பின்னே சென்று ஸ்கர்ட்டினை கீழே / மேலே இழுத்துவிட்டு ஓடிவிடுவான். டவுன் ப்லௌசிங் என்பதும் இதே வகையிலானது தான். பின்னர் அந்த படங்கள் பல்வேறு பார்ன் தளங்களில் பதிவேற்றப்படும். இதை கண்டு ரசிக்க ஒரு பெரும் ரசிகர் கூட்டமே இருக்கிறது.

Image Source: sydneycriminallawyers

Voyeurism

Voyeurism

ஆங்கிலத்தில் voyeurism என்று கூறுவார். அதாவது மற்றவரின் நிர்வாண உடல் அல்லது உடை நீக்கும் காட்சிகளை கண்டு இன்பம் காணுவதை voyeurism என்று கூறுவார்கள். இன்று இணைய மக்களில் பெரும்பாலானோர் voyeurismத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள். இதற்கு அப்பாவி பெண்கள் பலிகடாவாகிறார்கள். இதற்கு எது தீர்வு என்று தெரியவில்லை. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி வீழ்ச்சியை தான் அதிகம் விளைவிக்கிறது என்பதை மட்டும் அறிகிறேன்.

Image Source: kickstarter

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: I Do Not Have Any Idea, How Long He Was Standing Behind Me and Taking Photos!

Real Life Story: I Do Not Have Any Idea, How Long He Was Standing Behind Me and Taking Photos!
Story first published: Monday, August 13, 2018, 12:02 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more