Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் மற்றவர்களை விட அதிக கஷ்டப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காரசாரமான.. ஆம்லெட் சாப்ஸ் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தவெக மாநாடு வெற்றிக்கு பின் விஜய் - த்ரிஷா பற்றி பரவும் வதந்தி: ரசிகர்கள் ஏன் இப்படி முடிச்சுப் போடுறாங்க? -
உங்க இதயம் ஆபத்திலிருப்பதை வீட்டிலேயே கண்டறியும் 5 நொடி சோதனை - செஞ்சு பார்த்து உயிரை காப்பதிக்கோங்க -
தலைமுடி அதிகமா கொட்டுதா? அப்ப இந்த 5 பழங்களை அதிகமா சாப்பிடுங்க.. -
சுக்கிரன் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ரிஷப ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
அன்னையர் தினத்தில் பூக்களுக்குப் பதில் இதை கொடுங்க… அம்மாவின் ஆரோக்கியமும் அதிர்ஷ்டமும் பலமடங்கு உயரும்! -
ஆந்திரா ஸ்டைல் கொத்தவரங்காய் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காயை சாம்பார் வைக்காம இந்த மாதிரி பொரிச்ச குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
பாலியல் தொழில் செய்யும் இந்திய பெண்களின் அன்றாட வாழ்க்கை - புகைப்படத் தொகுப்பு!
பாலியல் தொழில் செய்யும் இந்திய பெண்களின் அன்றாட வாழ்க்கை - புகைப்படத் தொகுப்பு!
அந்த சாலையில், அந்த ஒரு காம்பவுண்ட் மட்டும் தான் கொஞ்சம் பாழடைந்து காணப்பட்டது. அந்த சுவர்களுக்குள் சொர்க்கம் கிடைப்பதாய் கூறி சிலர் சென்று வந்தனர். அதே சுவற்றுக்குள் இருப்பவர்களுக்கு அது நரகமாக தென்பட்டது.
ஒவ்வொரு நாளும் சூரியன் அஸ்தமனமான பிறகே, அவர்களது நாட்கள் விடியத் துவங்கியது. முழுமையாக இருள் சூழும் வரை கஸ்டமர்களின் வருகை குறைவு தான். திருடர்கள் பிறரிடம் இருப்பதை எடுக்க இரவு முழுக்க விழித்திருப்பர். இவர்கள் இரவு முழுக்க தன்னிடம் இருப்பதை பறிகொடுக்க கண் விழித்து காத்திருந்தனர்.

Image Source and Courtesy: Mary Ellen Makr 1978 | FALKLAND ROAD
சூரிய உதயத்தை காண வேண்டும் என்பது இவளது நீண்ட நாள் கனவு. ஒரு நாள் எதிர்பாராமல் வந்த ரைடு காரணத்தால் வெகுகாலமாக காத்திருந்த அந்த சூரிய விடியலை, கம்பிகளின் இடர்பாடுகளுக்கு நடுவே கண்டு மகிழ்ந்தேன் என அவள் கூறுவதை கேட்டு வியப்பதா, திகைப்பதா?
பாழடைந்த அந்த காம்பவுண்ட் சுவருக்குள் அடுக்கடுக்காய் நெருக்கமான தீப்பெட்டி வீடுகள் மட்டுமே. அவற்றில் சுவாசித்து வந்த ஜீவன்கள், தன் கனவுகளை இழந்து, கருகிய நிலையில் உயிர்வாழ்ந்து வந்தன. தேய்த்து, தேய்த்து, உரசி, உரசி, இரத்தம் கசிய ருசிக்கப்பட்ட, ரசிக்கப்பட்ட அந்த குச்சிகள் இனி எதற்கு பயன்படும்?
தன் பிறவியே இதுக்கு தான் என நம்பிக் கொண்டு வாழ்வோர் சிலர், இதில் இருந்து விடுதலை பெற்றால்... வண்டி கடையில் எச்சில் பிளேட்டுகள் சுத்தம் செய்தாவது வயிறை கழுவிக் கொள்வேன் என குமுறிக்குமுறி அழுத நெஞ்சங்கள் சிலர். உயரம் தாண்டுதல் வீராங்கனையாக தன்னை நினைத்துக் கொண்டு தப்பிக்க முற்பட்டு சூட்டு தழும்புகளும், கை, கால் முறிவுகளும் மட்டுமே பரிசாய் பெற்று முடங்கி கிடந்த உடல்களும் சிலவன ஆங்காங்கே மூலையில் காணப்பட்டன.
நிச்சயம் அது வாடி, வதங்கி, பிய்த்து எறியப்பட போகும் என்பதை அறிந்தும், தினமும் வாசனை குறையாத மல்லிகை செண்டினை கூந்தலில் சூடிக் கொள்ள அவள் மறந்ததே இல்லை. ப்ப்ப்பபா... என கூறும்படியாக தான் சுண்ணாம்பு திட்டு போல மேக்கப் இட்டுக் கொள்வாள். அது அவளை அழகாக காண்பிக்கிறதோ இல்லையோ, இரவு அந்த இருள் சூழ்ந்த சாலையோரத்தில் நிற்கும் போது தன் முகம் தெரிய வேண்டும் என்பதற்காகவே அத்தனை பவுடரை அப்பிக் கொள்வாள் முகம் முழுக்க.
தன்னுடனே முடிந்து போக வேண்டும் இந்த சாபம், என அவள் அம்மா வேண்டிக் கொண்டது போலவே தான் இவளும் வேண்டிக் கொள்கிறாள். ஏனோ, இவளது சாபத்தை போக்க எந்தவொரு பரந்தாமனும் ஆபத்பாந்தவனாக வரவே இல்லை. அனைவரும் வரமாக காணும் குழந்தை மட்டும் இவளுக்கு ஏனோ சாபமாக காணப்படுகிறது. குறிப்பாக மகாலட்சுமி மட்டும் பிறந்தவிட கூடாது என்று தன் இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டு ஒன்னேகால் ரூபாயை முடித்து வைத்திருக்கிறாள்.
அந்த காலணாவை போலவே இவளது வேண்டுதலும் செல்லாமல் போனது...
#1
Image Source and Courtesy: Mary Ellen Mark 1978 |FALKLAND ROAD
#2
Image Source and Courtesy: Mary Ellen Mark 1978 |FALKLAND ROAD
#3
Image Source and Courtesy: Mary Ellen Mark 1978 |FALKLAND ROAD
#4
Image Source and Courtesy: Mary Ellen Mark 1978 |FALKLAND ROAD
#5
Image Source and Courtesy: Mary Ellen Mark 1978 | FALKLAND ROAD
#6
Image Source and Courtesy: Mary Ellen Mark 1978 |FALKLAND ROAD
#7
Image Source and Courtesy: Mary Ellen Mark 1978 |FALKLAND ROAD
#8
Image Source and Courtesy: Mary Ellen Mark 1978 |FALKLAND ROAD
#9
Image Source and Courtesy: Mary Ellen Mark 1978 |FALKLAND ROAD
#10
Image Source and Courtesy: Mary Ellen Mark 1978 |FALKLAND ROAD
#11
Image Source and Courtesy: Mary Ellen Mark 1978 |FALKLAND ROAD
#12
Image Source and Courtesy: Mary Ellen Mark 1978 |FALKLAND ROAD
#13
Image Source and Courtesy: Mary Ellen Mark 1978 |FALKLAND ROAD
#14
Image Source and Courtesy: Mary Ellen Mark 1978 |FALKLAND ROAD
#15
Image Source and Courtesy: Mary Ellen Mark 1978 |FALKLAND ROAD
#16
Image Source and Courtesy: Mary Ellen Mark 1978 |FALKLAND ROAD
#17
Image Source and Courtesy: Mary Ellen Mark 1978 |FALKLAND ROAD
#18
Image Source and Courtesy: Mary Ellen Mark 1978 |FALKLAND ROAD
#19
Image Source and Courtesy: Mary Ellen Mark 1978 |FALKLAND ROAD
#20
Image Source and Courtesy: Mary Ellen Mark 1978 |FALKLAND ROAD

Click it and Unblock the Notifications