For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ப்ரேக்-அப், கிட்னி செயலிழப்பு, மரணத்தின் விளிம்புநிலை... பாடகி நடிகையின் ரணமான வாழ்க்கை!

ப்ரேக்-அப், கிட்னி செயலிழப்பு, மரணத்தின் விளிம்புநிலை... பாடகி நடிகையின் ரணமான வாழ்க்கை!

|

செல் என்று அவளை செல்லமாக அழைப்பார்கள். யாராலும் மறைக்க முடியாத ஒரு பெரும் இரகசியத்தை, அவள் மூன்றாண்டு காலமாக வெளியுலகத்திடம் மறைத்து வந்திருந்தாள்.

Life of Famous Singer and Actress Selena Gomez!

இசை உலகம் எத்தனையோ நட்சத்திரங்களை கண்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு தலைமுறையும் ஒரே ஒரு இசைக் கலைஞரை மட்டும் தான் தலை மேல் வைத்து கொண்டாடும். அந்த வகையில் இந்த இளம் தலைமுறை கொண்டாடும் பெரும் இசை கலைஞி "செல்".

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இனிமையான வாழ்க்கை!

இனிமையான வாழ்க்கை!

யாராலும் மறுக்க முடியாத பெரும் திறமை. இனிமையான குரல், மகிழ்ச்சியான காதல் உறவு, பாடகியாக மட்டுமின்றி, நடிகையாகவும் அவள் வெற்றிப் பெற்றிருந்தாள். ஆனால், வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அல்லவா.

திடுக்கிடும் செய்தி!

திடுக்கிடும் செய்தி!

என்ன தான் பெரிய திறமைசாலி, பிரபலம், நட்சத்திர அந்தஸ்து பெற்றிருந்தாலும், வாழ்வில் சில விஷயங்கள் ஏற்படும் போது உடைந்து போய்விடுவார்கள். அப்படி ஒரு நிகழ்வு செல்லின் வாழ்விலும் நடந்தது. அந்த திடுக்கிடும் செய்தி, செல்லின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்று தான் கூற வேண்டும்.

நோய்!

நோய்!

செல் Lupus எனும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால். இதில் வேதனை என்னவென்றால், இதுவரையிலும் இதற்கு தீர்வு என எந்த மருந்தோ, சிகிச்சையோ இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த நோய் பாதிப்பால் தசை மற்றும் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.

MOST READ: உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற சாய்பாபா கூறும் இந்த வழிகளை பின்பற்றுங்கள்

சிகிச்சை!

சிகிச்சை!

தன்னிடம் வெளிப்படும் அறிகுறிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த செல் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள துவங்கினாள். செல் ஏதோ அபாயமான கட்டத்தில் இருக்கிறாள், ஏதோ பிரச்சனை என்று பலருக்கும் சந்தேகம் எழுந்தது. ஆனால், அதை அவள் இந்த உலகத்திடம் மூன்று ஆண்டுகளாக மறைத்து வந்தாள். தன் நிலை யாருக்கும் தெரியக் கூடாது என்பதில் ஏனோ அவளிடத்தில் ஒரு பிடிவாதம் இருந்தது.

போராட்டம்!

போராட்டம்!

பல உலக சுற்றுலாக்கள் சென்றாள், நிறைய பாடினாள், ரசிகர்களை மகிழ்வித்தாள். ஒரு நொடியும் அவள் தனக்கு ஏற்பட்ட நோய் சார்ந்தோ, அதன் மூலம் ஏற்படும் வலி சார்ந்தோ தளர்ந்துவிட வில்லை. விடா முயற்சியுடன் போராடி வந்தாலள் செல். ஆனால், அவள் எதிர்பாராத அளவிற்கு சோதனைகள் அடுக்கடுக்காய் வரத் துவங்கின. ஒரு தருணத்தில் அவள் போராட்ட குணத்தை சுக்குநூறாக்கி அழ வைத்தது மருத்துவ அறிக்கை.

கொடிய நிலை!

கொடிய நிலை!

இந்தநோய் பாதிப்பு காரணமாக அவளிடம் மன அழுத்தம், பதட்டம், மனநிலை சமநிலை இழத்தல் போன்றவை ஏற்பட்டன. ஆகவே, கொஞ்ச காலம் இசை உலகில் இருந்து ஒதுங்கி, தனது மனநலத்தில் கவனம் செலுத்த முயற்சி செய்தாள் செல். அப்போது தான் மருத்துவர்கள் அந்த கொடிய செய்தியை செல்லிடம் கூறினார்கள்.

சிறுநீரக செயலிழப்பு!

சிறுநீரக செயலிழப்பு!

செல் உடல் நிலை மற்றும் உடல் உறுப்பு செயற்திறன் எதிர்பார்த்ததை விட மோசமாக இருந்தது. மருத்துவர்கள் ஒருமுறை செல்லை பரிசோதனை செய்துவிட்டு. உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை செய்கிசை செய்ய வேண்டும். இல்லையேல், உயிருக்கு ஆபத்து என்று கூறினார்கள். இங்கே ஒரு சிக்கல். பதிவு செய்தவர்கள் பட்டியலில் காத்திருக்க வேண்டும் என்றால், ஏழு முதல் பத்து ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

தோழி!

தோழி!

வீட்டுக்கு பதட்டத்துடன் சென்றாள் செல். அதுவரை தனக்கு ஏற்பட்ட நோய் குறித்து அழுதிடாத செல். அன்று அழுதாள். மனதளவில் மிகவும் உடைந்து போனாள். ஃப்ரிட்ஜில் இருந்து தண்ணீர் பாட்டில் எடுத்து, அதை திறக்க முடியாத நிலை ஏற்பட்டதால், கோபம் கொண்டு பாட்டிலை தூக்கி எறிந்தாள் செல். உடைந்தது பாட்டில் மட்டுமல்ல, அவளது மனதும் தான். கதறி அழுக துவங்கினாள். அப்போது செல்லுக்கு உதவியாக வந்தார் அவளது தோழி ஃபிரான்சியா.

உதவி!

உதவி!

என்ன ஆச்சு, ஏன் இப்படி நடந்துக்குற... என்று தோழி விசாரிக்க... ஆரம்பத்தில் மறுத்து, பிறகு தன் நிலை குறித்து விவரித்தாள் செல். உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என மருத்துவர்கள் கூறியதை சொல்லி அழுதாள். ஒரு நொடி கூட யோசிக்காமல், தான் சிறுநீரகம் தர முன்வருகிறேன் என்று தைரியம் அளித்தார் அந்த தோழி.

MOST READ: உங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களை பற்றி கூறும் ரகசியம் என்ன தெரியுமா?

பரிசோதனை!

பரிசோதனை!

உடனடியாக, தோழிக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து சிறுநீரகம் மேட்ச் ஆகுமா என்று சோதனை செய்தனர். பரிசோதனை முடிவில், தோழியின் சிறுநீரகம் செல்லுக்கு பொறுத்த நூறு சதவிதம் பொருந்தும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். சிறுநீரகம் பொருந்திய போதும், அறுவை சிகிச்சை எளிதாக நடந்து முடிந்திடவில்லை. ஒருக்கட்டதில் செல் இறந்துவிடும் நிலைக்கு சென்றார்.

அறுவை சிகிச்சை!

அறுவை சிகிச்சை!

தன் அறுவை சிகிச்சைக்கு முன்னரே, இந்த சிகிச்சை நூறு சதவிதம் நல்லப்படியாக முடிய வாய்ப்பில்லை என்று ஒரு குறிப்பு எழுதி வைத்திருந்தார் செல்லின் தோழி ஃபிரான்சியா. முதலில் ஃபிரான்சியாவிற்கு அறுவை சிகிச்சை செய்தனர். நல்லப்படியாக முடிந்தது. செல்லுக்கு அறுவை சிகிச்சை செய்துக் கொண்டிருந்த போது பாதி நிலையில் பிரச்சனைகள் எழுந்தன. இரத்த குழாயில் பிரச்சனை ஏற்பட்டது.

அபாயம்!

அபாயம்!

உடனே, மருத்துவர்கள் செல்லின் காலில் இருந்த வேறொரு நரம்பினை எடுத்து வேறொரு சிகிச்சை செய்ய ஆரம்பித்தனர். இந்த அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினமான காரியம். ஆனால், செல் வலிமையுடன் மீண்டு வந்தாள். அப்போது தான் பில்போர்ட் அந்த ஆண்டுக்கான சிறந்த பெண்மணி விருதினை செல்லுக்கு வழங்க முடிவு செய்திருந்தது.

விருது!

விருது!

விழா மேடையில் விருது வாங்க சென்ற செல், மனமுடைந்து அழுதுவிட்டார். தன் நிலை குறித்து முதல் முறையாக மேடையில் பேசினாள். நான் இன்று விருது வாங்க என் தோழி தான் காரணம். அவள் எனக்கு அளித்த பரிசு மிகவும் பெரியது. இந்த விருதை அவள் தான் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று விழா மேடையில் உணர்ச்சிவசமாக கூறினாள்.

விழிப்புணர்வு!

விழிப்புணர்வு!

இன்று, செல் என்று அனைவராலும் அழைக்கப்படும் செலினா கோமஸ் இந்த நோய் குறித்து நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மேலும், மனநல ஆரோக்கியம் குறித்தும் தான் செல்லும் இடங்களில் எல்லாம் பேசி வருகிறார் செலினா.

விலைமதிப்பற்றது!

விலைமதிப்பற்றது!

நம்மிடம் இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை தான். அது விலைமதிப்பற்றது. அதில் நாம் செய்ய வேண்டியது நிறையவே இருக்கிறது. அதில் நிறைய விஷயங்கள் நாம் செய்தே ஆகவேண்டும். என்று தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் கூறி இருக்கிறார் செலினா.

MOST READ: முட்டையில் மட்டும் நாம் கட்டாயமாக மிளகு சேர்த்து சாப்பிடுவது எதற்காக என்ற காரணம் தெரியுமா? இப்ப தெரி

காதல் பிரிவு!

காதல் பிரிவு!

தான் இப்படி ஒரு கடினமான சூழலை கடந்து வந்த போது தான், தன் நீண்ட நாள் காதல் உறவையும் இழந்தார் செலினா. செலினாவும். பிரபல பாடகர் ஜஸ்டின் பைபரும் காதலித்து வந்தனர். தன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மனதளவில் துவண்டு போயிருந்த காலக்கட்டத்தில் தான் காதல் உறவில் ப்ரேக்-அப் ஏற்பட்டது செலினாவிற்கு.

முன்னுதாரணம்!

முன்னுதாரணம்!

செலினா கோமஸ் ஒரு அழகான பாடகி, நடிகை, பார்க்க கவர்ச்சியாக இருக்கிறார் என்றே பெரும்பாலானோர் கருதுகிறார்கள். ஆனால், அவரது அழகிற்கு வெளித் தோற்றத்தை காட்டிலும் தன்னம்பிக்கை தான் முக்கிய காரணம்.

இந்த இளம் வயதில் உயிரை பறிக்கும் நோயுடன் அவர் ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து வருவது, வாழ்வில் எந்த அளவிற்கு தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதனை புகட்டுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Life of Famous Singer and Actress Selena Gomez!

Here we have share some interesting and inspiring facts and incidents about famous singer and actress Selena Gomez.
Desktop Bottom Promotion