லாலுவின் மூத்த மகனுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் திருமணம்!

Posted By:
Subscribe to Boldsky

பாலிவுட் பிரபலங்கள் பற்றிய செய்திகள் சமீபத்தில் பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கான் மான் வேட்டையாடிய வழக்கின் தீர்ப்பு வெளியானதிலிருந்து இன்னும் பரபரப்பு கூடிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான ஒரு திருமண செய்தி பாலிவுட் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியுடன் ஒரு கணம் பார்க்க வைக்கிறது. என்ன தெரியுமா அந்த செய்தி ? ஐஸ்வர்யா ராய்க்கும் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும் வருகின்ற மே மாதம் திருமணம் என்பது தான் அந்த செய்தி.

படிக்கும் போதே திக்கென்று இருக்கிறது தானே..... தொடர்ந்து படியுங்கள் விஷயம் புரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லல்லு பிரசாத் :

லல்லு பிரசாத் :

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான லல்லு பிரசாத் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி. இன்று மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை சென்றாலும் மக்கள் இவரை தங்களது ஹீரோவாகவே பார்க்கிறார்கள். நஷ்டத்தில் இருந்த ரயில்வே துறை இவர் அமைச்சராக இருந்த போது லாபத்தில் இயங்க வைத்து சாதனை படைத்திருக்கிறார். இவரிடம் அரசியல் பயில வெளிநாட்டிலிருந்து கூட மாணவர்கள் வந்திருக்கிறார்கள்.

ஊழல் வழக்கில் கைதாகி சிறை சென்ற போது தனது மனைவி ராப்ரி தேவியை தேர்தலில் நிற்க வைத்து முதலமைச்சர் ஆக்கினார்.

Image Courtesy

பால்காரன் :

பால்காரன் :

என்ன தான் முதலமைச்சராக இருந்தாலும் லாலு பிரசாத் வீட்டில் இன்றளவும் நூறு மாடுகளுக்கும் அதிகமாக இருக்கின்றன. மாடுகள் மீது தீரா காதல் கொண்டவர். அவர் ஒரு முறை பேசும் ஓஒது என்னை முதலமைச்சர் என்றோ அரசியல்வாதி என்றோ அழைப்பதை விட பால்காரன் என்று கூப்பிடுவதை பெருமையாக நினைக்கிறேன் என்றிருக்கிறார்.

தனது மகனக்கு திருமணம் செய்யும் போது பெண் வீட்டாரிடம் சீதனமாக ஒரேயொரு பசுமாட்டினை தான் கேட்டிருக்கிறார் லாலு.

Image Courtesy

குடும்பம் :

குடும்பம் :

1977 ஆம் ஆண்டு தன்னுடைய 29 வயதில் அரசியலில் நுழைந்து விட்ட லாலு பிரசாத் யாதவ் 1990 ஆம் ஆண்டு பிகார் மாநில முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஜனதா தளத்திலிருந்து பிரிந்து வந்த இவர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்ற கட்சியை ஆரம்பித்தார்.

இவருக்கு ராப்ரி தேவி என்ற மனைவியும் மிஷா பாரதி, ரோஹினி ஆச்சார்யா, சந்தா, ராகினி, தானு, ஹேமா, லக்‌ஷ்மி ஆகிய மகள்களும் தேஜ் பிரதாப் மற்றும் தேஜஸ்வி ப்ரதாப் ஆகிய மகன்களும் இருக்கிறார்கள்.

Image Courtesy

தேஜ் பிரதாப் :

தேஜ் பிரதாப் :

லாலு மற்றும் ராப்ரியின் மூத்த மகனான தேஜ் பிரதாப் 2015 ஆம் ஆண்டு ராஷ்டிரி ஜனதா தளம் சார்பாக மஹூவா தொகுதியில் போயிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அதோடு சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

முப்பது வயதான தேஜ் பிரதாபிற்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் பேசியிருக்கிறார்கள். அதன் படி பெற்றோர் சம்மதத்துடன் இவருக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டிருக்கிறது.

Image Courtesy

 ஐஸ்வர்யா ராய் :

ஐஸ்வர்யா ராய் :

ஐஸ்வர்யா ராய் என்றதும் பாலிவுட் நட்சத்திரமும் அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய் அல்ல இவர் பெயர் மட்டுமே ஐஸ்வர்யா ராய் டெல்லி பல்கலைகழகத்தில் வரலாற்று பட்டப்படிப்பினை படித்திருக்கிறார்.

அரசியல் குடும்பமான லாலுவின் குடும்பத்தின் மருமகளும் அரசியல் பின்புலம் கொண்டவர். இவருக்கு ஒரு தங்கையும் தம்பியும் உண்டு.

Image Courtesy

வாரிசு :

வாரிசு :

அம்மா சந்திரிகா ராய் ராஸ்டிரிய ஜனதா தளத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். தாத்தா தரோகா பிரசாத் ராய் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். 1970களில் பதினோறு மாதங்கள் பிஹார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்திருக்கிறார்.

யாதவ் குடும்பத்திலிருந்து முதலமைச்சரான முதல் நபர் இவர் தான்! இவரது பேத்தி ஐஸ்வர்யா ராயைத் தான் தற்போது லாலுவின் மகனுக்கு பேசி முடித்திருக்கிறார்கள்.

Image Courtesy

அரசியல்வாதிகள் சங்கமம் :

அரசியல்வாதிகள் சங்கமம் :

2014 ஆம் ஆண்டுக்கு பிறகு லாலு குடும்பத்தில் நடக்கிற திருமண வைபம் இது.லாலுவின் இளைய மகளான லக்‌ஷ்மிக்கும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாய்ம் சிங் யாதவின் நெருங்கிய உறவினருக்கும் திருமணம் நடந்தது.

பிஹார் மற்றும் உத்திரபிரதேசத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய அரசியல் செல்வாக்கு கொண்ட யாதவ் குடும்பத்திற்கு இடையில் நடைப்பெற்ற திருமணம் இது.

அதே போல லாலுவின் மகள்கள் மூன்றுக்கும் மேற்பட்டோரை டெல்லி மற்றும் ஹரியானாவில் இருக்கும் அரசியல்வாதிகள் குடும்பத்தில் தான் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

Image Courtesy

திருமணம் நடக்கும் இடம் :

திருமணம் நடக்கும் இடம் :

இவர்களது திருமணம் மே மாதம் பன்னிரெண்டாம் தேதி நடக்கவிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது, பீகார் மாநிலத்தில் இருக்கிற கால்நடை பல்கலைக்கழகத்தின் மைதானத்தில் தான் இவர்களது திருமணம் நடக்கப்போகிறது.

அதே இடத்தைத் பா.ஜ.க.,வைச் சேர்ந்தவரும் தற்போது துணை முதலமைச்சரான சுஷில் மோடி தனது மகன் உத்கர்ஷ் மோடியின் திருமணத்திற்கும் தேர்ந்தெடுத்திருந்தார்.

Image Courtesy

மருமகள் :

மருமகள் :

தனக்கு எப்படிப்பட்ட மருமகள் வேண்டும் என்பதற்கு ராப்ரி தேவி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? வீட்டினை பராமரித்து பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கக்கூடிய எளிமையான பெண் தான் வேண்டும், சினிமாவிற்கும் மால்களுக்கும் செல்லக்கூடிய பெண் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.

சுஷில் மோடி உதவி :

சுஷில் மோடி உதவி :

முன்னதாக கடந்தாண்டு நடைப்பெற்ற சுஷில் மோடியிம் மகன் திருமணத்தின் போது தேஜ் பிரதாப் மிரட்டல் விடுத்திருந்தார். அதன் பிறகு அவரே மன்னிப்பு கேட்டுக் கொண்டதால் விஷயம் சுமூகமாக முடிந்து விட்டது. இந்நிலையில், சுஷில் மோடி தான் ஐஸ்வர்யா ராய் குறித்து ராப்ரி தேவியிடம் சொல்லி இந்த திருமணம் நடக்க முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.

 மூன்று விதிமுறைகள் :

மூன்று விதிமுறைகள் :

முன்னதாக தேஜ் பிரதாப்பும் மோடி அங்கிள் எனக்கு நல்ல பெண்ணாக பார்த்து சொல்லுங்கள் என்று கேட்டிருந்திருக்கிறார் அதற்கு பதிலளித்த சுஷில் மோடி தான் விதிக்கும் மூன்று விதிமுறைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அவை என்னென்ன தெரியுமா?

1. வரதட்சணை கேட்கக்கூடாது.

2.உடலுறுப்பு தானம் செய்ய வேண்டும்.

3. எந்த திருமணத்தின் போதும் இடைஞ்சலோ மிரட்டலோ விடுக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse wedding marriage life
English summary

Lalu Prasad Yadav Son Marries Aiswarya Roy

Lalu Prasad Yadav Son Marries Aiswarya Roy
Story first published: Saturday, April 7, 2018, 14:29 [IST]