எவ்ளோ தான் சம்பாதித்தாலும் வீட்டில் காசு தங்கலையா? இந்த பொருளை வீட்டில் வைங்க!

Written By:
Subscribe to Boldsky

என்ன தான் பாடுபட்டு உழைத்தாலும் அதிஷ்டம் என்ற ஒன்று இருக்க வேண்டும் அல்லவா...? நான் மற்றவர்களை விட அதிகமாக சம்பாதிக்கிறேன்.. கடினமாக வேலை செய்கிறேன்.. அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறேன் ஆனால் என்னிடம் பணம் தங்கலையே..? என்னை விட குறைந்த சம்பளம் வாங்குபவன் எல்லாம் சொந்த வீடு, கார் என்று இருக்கிறான்.. ஆனால் என்னால் உயர முடியவில்லை.. தொடர்ந்து நஷ்டம், பொருள் சேதம், மருத்துவ செலவு என்று அழைந்து கொண்டே இருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா?

அனைத்திற்கும் அதிஷ்டம் தான் காரணம். ஒருவர் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார் என்பது பெரிய விஷயம் அல்ல.. எவ்வளவு பணம் சேமிக்கிறார் என்பது தான் பெரிய விஷயம்.. கோடி கோடியாக சம்பாதித்தாலும் கையில் பைசா தங்கவில்லை என்றால் என்ன சம்பாதித்து என்ன பலன்..? தடைப்பட்ட காரியங்கள், பெயர், புகழ் என அனைத்து செல்வங்களும் பெருக வீட்டில் இந்த பொருட்களை எல்லாம் வைத்து பாருங்கள்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புல்லாங்குழல்

புல்லாங்குழல்

பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றான புல்லாங்குழல், மனதுக்கு இனிமையான இசையைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வீட்டுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கிறது. புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பதால், பொருளாதாரக் கஷ்டங்கள் தீரும். வீட்டில் லட்சுமிதேவி குடிகொண்டிருப்பாள். அதோடு வீட்டில் இருக்கும் அத்தனை வாஸ்து தோஷங்களையும் தீர்க்கவல்ல சக்திகளையுடையது புல்லாங்குழல்.

நாட்டிய கணபதி

நாட்டிய கணபதி

வீட்டில் பணக்கஷ்டம் உள்ளவர்கள் கஷ்டத்தோடு கஷ்டமாக, நாட்டிய கணபதி சிலை ஒன்றை வாங்கி வீட்டில் வையுங்கள். அத்தனை பணக்கஷ்டமும் காணாமல் போய்விடும். குறிப்பாக, வீட்டின் வாசலுக்கு நேராக இருக்கும்படி, இந்த சிலையை வைப்பது வீட்டுக்குச் சுபிட்ஷத்தை அள்ளித் தரும்.

சங்கு

சங்கு

எத்தகைய வாஸ்து தோஷங்களாக இருந்தாலும் நிவர்த்தி செய்யக்கூடிய சக்தி சங்குக்கு உண்டு. லட்சுமி தன்னுடைய கையில் சங்கினை வைத்திருப்பது போன்ற படங்களோ சிலையோ வைத்திருப்பது இன்னும் சிறப்புக்குரியது.

ஒற்றைக்கண் தேங்காய்

ஒற்றைக்கண் தேங்காய்

ஒற்றைக்கண் தேங்காய்க்கு அபரீதமான சக்தி உண்டு. இதை வீட்டின் முன்புறம் மஞ்சள் துணியில் கட்டித் தொங்கவிட்டு பூஜை செய்து வந்தால், வீட்டில் லட்சுமி கடாட்ஷம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். வீட்டில் உள்ள எதிர்மறை அதிர்வுகள் அத்தனையும் விலகும்.

குபேரன் சிலை

குபேரன் சிலை

குபேரன் சிலை வீட்டில் மட்டுமல்லாது தொழில் செய்யும் இடத்திலும் வைத்திருத்தல் வேண்டும். அது தொழிலில் லாபத்தைக் கொடுக்கக்கூடியது. குபேரன் சிலையை எப்போதும் வீட்டில் வடக்கு திசை பார்த்து வைத்திருக்க வேண்டும்.

கடிகாரம்

கடிகாரம்

நம் அனைவரது வீட்டிலும் கடிகாரம் நிச்சயமாக இருக்கும். இந்த கடிகாரத்தை சரியான திசையில் வைத்தால் தான் நேர்மறை ஆற்றல் வீட்டில் நிறைந்திருக்கும். தவறான திசையில் வைத்தால் எதிர்மறை ஆற்றல் தான் வரும்.

முக்கியமாக கடிகாரத்தை கதவின் மேலே தொங்கவிட கூடாது. வீட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுவற்றில் கடிகாரத்தை மாட்ட கூடாது. கடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவற்றில் தொங்க விடுவது நல்லது.

கண்ணாடி

கண்ணாடி

வீட்டில் இருக்கும் கண்ணாடியானது சதுரம் அல்லது செவ்வக வடிவத்தில் இருக்க வேண்டியது அவசியமாகும். கண்ணாடியை வடக்கு-கிழக்கு திசையில் வைப்பதே சிறந்ததாகும். குறிப்பாக தரையில் இருந்து 4-5 அடி உயரத்தில் கண்ணாடி இருக்க வேண்டியது அவசியமாகும்.

குதிரைகள்

குதிரைகள்

வீட்டில் பலரும் குதிரைகள் கொண்ட ஓவியங்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இந்த 7 குதிரைகள் ஓடும் படியாக உள்ள ஓவியமானது வீட்டில் எதிர்மறை சக்திகள் வருவதை தடுத்து, நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும். அதுமட்டுமின்றி வீட்டில் செல்வ செழிப்பை அதிகரிக்கும். குதிரை ஓவியத்தை வீட்டின் நுழைவாயிலில் தொங்கவிட கூடாது. ஜன்னலுக்கு எதிர்புறத்தில் தொங்கவிட வேண்டும்.

மணி பிளாண்ட்

மணி பிளாண்ட்

இந்த மணி பிளாண்ட் கொடியை ஒருவர் வீட்டில் வளர்த்தால், செல்வ வளம் அதிகரிக்கும். அதேப் போல் இந்த மணி ப்ளாண்ட்டை வடக்கு-கிழக்கு திசையை நோக்கி வைத்து வளர்ப்பதே சிறந்தது.

தங்கமீன்கள்

தங்கமீன்கள்

வீட்டில் தங்க மீன்களை வளர்ந்தால் உங்களை அதிஷ்டம் தேடி வரும். இந்த தங்க மீன்கள் உங்களுக்கு மகிழ்ச்சியையும், வீட்டினுள் நேர்மறை ஆற்றலையும் பெருக செய்யும்.

வானவில்

வானவில்

வீட்டில் வானவில் உள்ள படங்களை வாங்கி வைக்கலாம். இந்த வானவில் படத்தை நீங்கள் வீட்டில் வாங்கி வைக்கும் போது இது உங்களுக்கு அதிஷ்டத்தை தருவதோடு மட்டுமல்லாமல், இந்த படத்தை பார்க்கும் போது மனதில் மகிழ்ச்சியும் உண்டாகிறது.

குட்டை மூங்கில் மரங்கள்

குட்டை மூங்கில் மரங்கள்

குட்டை மூங்கில் மரங்கள் இப்போது பலராலும் வாங்கி வளர்க்கப்படும் ஒன்றாக உள்ளது. இந்த குட்டை மூங்கில் மரங்களை வீட்டில் வளர்த்து வந்தால் உங்கள் வீட்டிற்கு அதிஷ்டம் தேடி வரும். இது உங்களுக்கு ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை தரவல்லது.

பூக்கள்

பூக்கள்

தினமும் உங்களது வீட்டில் பிரஷ் ஆன பூக்களை பிளவர்பாஷில் வைக்க வேண்டும். தினமும் இதனை மாற்ற தவர கூடாது. வாடிய பூக்களையும் வைக்க கூடாது. செயற்கையான பூக்களையும் வைக்க கூடாது.

மாவிலை தோரணம்

மாவிலை தோரணம்

வீட்டின் வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகளைத் தீர்க்கும் எளிய வழி என்கிறது சாஸ்திரம். வாஸ்து பகவானுக்குப் பிடித்த இலையான மாவிலை வாஸ்துவைச் சீராக்குகிறது. மேலும், வீட்டில் நுழையும் எதிர்மறை எண்ணங்களை இவை நீக்கும். சுற்றுப்புறத்தில் உள்ள நச்சுக் காற்றை தூய்மையாக்கும்.

அணில் மற்றும் குருவி

அணில் மற்றும் குருவி

வீட்டில் அணில் மற்றும் சிட்டுக் குருவிகள் கூடு கட்டினால் வீட்டினுள் நேர்மறை சக்திகள் அதிகமாக வரும். உங்களது வீட்டை அதிஷ்டம் தேடி வரும்

நான்கு இலை

நான்கு இலை

இந்த நான்கு இலைகளை வீட்டில் வைத்துக் கொண்டால் செல்வம், மகிழ்ச்சி, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என உலகம் முழுவதும் பரவலாக நம்பப்படுகிறது..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: வீடு insync happy
English summary

Keep These Best Vaastu Objects In Your Home For Happiness

Keep These Best Vaastu Objects In Your Home For Happiness