For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  அப்படி என்ன செய்துவிட்டார் கருணாநிதி?... படிங்க தெரியும்...

  |

  அப்படி என்ன செய்து விட்டார் கருணாநிதி? என்ற கேள்வி உங்கள் மனதிலும் இருக்கலாம். அதற்கு சில சின்ன சின்ன உதாரணங்களை மட்டும் சொல்கிறேன். சமூக வலைத்தளங்களில் இன்றைய இளம் தலைமுறை கட்டுமரம் என்று கிண்டல் செய்தபோதும் கூட, அவர் சொன்ன அதே கட்டுமரமாய் அந்த இளைஞர்களை தாங்கிப் பிடித்தவர் கருணாநிதி. எல்லா அரசியல் தலைவர்கள் மீது இருப்பது போன்ற விமர்சனங்கள் கருணாநிதி மீதும் உண்டு. ஆனால் கருணாநிதியை விமர்சனம் செய்வதற்கு முன்பாக, அவருடைய முக்கால் நூற்றாண்டு அரசியல் சரித்திரத்தைத் தெரிந்து கொள்ள நாம் முயற்சி செய்வதே இல்லை.

  karunanidhis some achievements for society

  70 ஆண்டு கால கருணாநிதியின் சாதனைகளை இந்த 70 வரிகளில் சொல்லிவிட முடியாது என்றாலும் கூட, எந்த தலைவரும் ஏன் மனிதனும் யோசித்து விட முடியாத சில சாதனைகளை அவர் எப்படி யோசித்தார்?... எப்படி செய்து முடித்தார் என்று நினைவு கொள்ளலாம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  மாநில சுயாட்சி

  மாநில சுயாட்சி

  மாநில சுயாட்சி, மாநில உரிமை என்பவை வெறும் வெற்று வார்த்தைகள் கிடையாது. அதன் கணம் மிக அடர்த்தியானது. அப்படிப்பட்ட மாநில சுயாட்சி என்ற உரிமையை மத்திய அரசிடமிருந்து போராடிப் பெற்றுத் தந்தவர் கருணாநிதி. கல்வி என்பது நம் சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றிச் செல்லும் என்பது நமக்கு நன்கு தெரியும். அந்த கல்விக்கான உரிமையை மாநில சுயாட்சி உரிமைக்குக் கீழ் பெற்று தந்தவர் அவர்.

  கை ரிக்க்ஷா

  கை ரிக்க்ஷா

  ஒரு மனிதனை உட்கார வைத்து, விலங்குகள் இழுத்துச் செல்வதையே இப்போது நாம் மனிதத் தன்மையற்ற செயல் என்றும் விலங்குகளை வதைக்கக் கூடாது என்றும் சட்டம் இயற்றுகின்றோம். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். தன்னுடைய வறுமையின் காரணமான மனிதனை உட்கார வைத்து மனிதனே கை ரிக்க்ஷா இழுப்பது எவ்வளவு கொடுமையான விஷயம் என்று. இன்றும் கூட இந்தியாவின் சில பகுதிகளில் மனிதர்களால் கை ரிக்ஷா இழுக்கப்படுவதைப் பார்த்திருப்போம். ஆனா்ல தமிழன் ஒருநாளும் இத்தகைய மனிதத் தன்மையற்ற செயல்களை செய்துவிடக் கூடாது என்பதற்கான கை ரிக்ஷா இழுப்பதற்குத் தடைவிதித்தவர் கருணாநிதி.

  எமர்ஜென்சி காலம்

  எமர்ஜென்சி காலம்

  இந்தியாவில் எமர்ஜென்சி அமுல்படுத்தப்பட்ட போது, கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பார்த்து வியந்து போகாத, பின்பற்றத் தவறாத அரசியல் பெருந்தலைவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டு, ராணுவ ஆட்சி நடத்தப்பட இருந்த போதும் கூட,அந்த ராணுவ ஆட்சி தமிழ்நாட்டின் மீது பாயாமல் பார்த்துக் கொண்டவர். அதற்கான தன்னுடைய முதலமைச்சர் பதவியையும் துச்சமாக மதித்தவர். முதலமைச்சர் பதவியை இழந்த போதும் கட்டிய லுங்கியுடன் தன் பதின்ம வயது மகளான கனிமொழியையும் உடன் அழைத்து வந்து, முதலமைச்சர் என்ற எந்த தோரணையும் இன்றி சாலையில் அமர்ந்து மாநில சுயாட்சிக்காக் போராடிய போராட்டக்காரர்.

  உள் ஒதுக்கீடு

  உள் ஒதுக்கீடு

  பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு என்பது ஒட்டுமொத்த சமூகத்துக்குமான உயர்வைத் தேடித் தரும் முயற்சி. அரசுத் துறைகள் அத்துனையிலும் பிற்படுத்தப்படுத்தட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் இடம் பெறுவது, அரசு பணிகளில் இருப்பது என தங்களுடைய பொருளாதார, சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள கருணாநிதி எடுத்த முயற்சி அளப்பரியது. அதைவிட, தாழ்த்தப்பட்ட பிரிவுகளிலேயே பொருளாதார, சமூக நிலைகளில் பின் தங்கியிருக்கும் மக்களான அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு ஏற்படுத்தித் கொடுத்தது மிகப்பெரிய சாதனை. அது சாதிய ஒடுக்குமுறை மட்டுமல்ல, மனுதர்மத்தையே எதிர்த்துக் கேள்விக்கேட்ட தருணம் இது. தனி மனிதனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் வலியை தன்னுடைய வலியாக உணர்ந்து, இட ஒதுக்கீட்டை ஏற்படுத்திக் கொடுத்தார்.

  கையால் மலம் அள்ளுதல்

  கையால் மலம் அள்ளுதல்

  ஏதாவது குப்பையைத் தொட்டுவிட்டாலே கையைக் கழுவுவோம். ஆனால் மனிதனுடைய மலத்தை இன்னொரு மனிதன் கையால் அள்ளுவதைப் பற்றி இந்த சமூகத்துக்கு எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் இருந்தது. அந்த வேலையை செய்வது மனுதர்மப்படி அவர்களுடைய விதி என்று ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், அந்த மக்களுடைய வலியை உணர்ந்த கொண்ட கலைஞர், மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளும் கொடுமையை நிறுத்த, தடை விதித்து ஆணையிட்டார்.

  பெண்களுக்கு சொத்துரிமை

  பெண்களுக்கு சொத்துரிமை

  பெண்ணுக்கு கல்வி, பேச்சுரிமை என பல விஷயங்கள் மறுக்கப்பட்ட போதும்கூட, 1986 ஆம் ஆண்டு ஆணுக்குப் பெண் சமம் என்பதை வார்த்தைகளில் மட்டுமல்லாது, சமூகத்தில் கல்வி பெற்று முன்னேறுவது மட்டும் போதாது. பொருளாதார நிலையிலும் பெண்ணை சமமாக பாவிக்க வேண்டும் என்று கூறி, பெண்களுக்கு சொத்தில் சரி சம பங்கு உண்டு என்று சட்டம் இயற்றி, பெண்ணின் பெருமை பேசிய அரிய தலைவர் தான் கருணாநிதி. இது போல ஆயிரமாயிரம் அத்தியாயங்கள் அவருடைய வாழ்வில் உண்டு. அதை இன்றைய தலைமுறை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவரை சமூகப் புரட்சியாளராக முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவே நாம் அவருக்கு செய்யும் சிறந்த அஞ்சலியாக இருக்கும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  karunanidhi's some achievements for society

  here i mentioned karunanidhi's some achievements for society on his political contribution.
  Story first published: Tuesday, August 7, 2018, 21:47 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more