இல்லற உறவில் புரட்சி செய்த இந்திய நடிகைகள் #IndianActress #SocietalStereotypes

Posted By: Staff
Subscribe to Boldsky

நமது சமூகத்தில் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகம். முக்கியமாக திருமணம், குடும்பம், குழந்தை, விவாகரத்து, கர்ப்பம் என பெண்களின் பல பர்சனல் விஷயங்களில் சமூகம் மூக்கை நுழைக்கும். இந்த விஷயத்தில் பெண்களுக்கு ஆண்கள் மட்டுமே எதிரி அல்ல, பெண்களும் கூடவே.

தான் இளம் வயதில் அனுபவத்த, கடந்து வந்த அதே கடினமான சூழலை, தன் அடுத்த தலைமுறை பெண் மீது தெரிந்தோ, தெரியாமலோ அதே பெண் திணிக்கிறாள். உதாரணமாக, திருமணமான ஒரே மாதத்தில் விசேஷமா என்று கேட்பது., 20களின் துவக்கத்திலேயே எப்போ கல்யாணம் என்று கேட்டு வாட்டி வதைப்பது. கணவன் இறந்துவிட்டால், அல்லது விவாகரத்து பெற்று பெண் ஒருத்தி தனியாக வாழ முடியாது என்று கூறுவது.

இப்படி, சமூகம் பெண்கள் மீது திணித்திருக்கும் தடைகளை தகர்த்த இந்திய பெண் பிரபலங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்யாணம்!

கல்யாணம்!

சுகாஷினி முலாய் - நான் விரும்பும் போது திருமணம் செய்துக் கொள்வேன்!

இந்தியாவில் ஆண்கள் மட்டும் தான் தாங்கள் விரும்பும் போது திருமணம் செய்துக் கொள்ளலாம். அது 20,30,40 என எந்த வயதாக இருந்தாலும் சரி. ஆனால், பெண் 25வயதை தாண்டிவிட்டாலே, அவள் வயதானவள் ஆகிவிடுகிறாள். பெண் சமூகத்திற்காக திருமணம் செய்துக் கொள்ள தான் வேண்டும்.

குடும்ப சூழல், கடமைகளை முடிக்க ஆண்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது. ஆனால், பெண்களுக்கு அப்படி இல்லை. தனது குடும்பத்தை கடன் காரர் ஆக்கியாவது திருமணம் செய்ய வேண்டும் என்கிறது இந்த சமூகம். இந்த சமூக பார்வையை மாற்றியவர் சுகாசினி. இவர் தனது 60வது வயதில் திருமணம் செய்துக் கொண்டார்.

தத்துப்பிள்ளை!

தத்துப்பிள்ளை!

சுஸ்மிதா சென் - கல்யாணம் செய்துக் கொள்ளாமல், குழந்தைகளை தத்தெடுத்து தனி அன்னையாக இருந்து வளர்த்து வருகிறாள்.

நமது சமூகம் வரையறுத்து வைத்திருக்கும் மற்றுமொரு சட்டம். பெண்ணால் தனியாக வாழ முடியாது. தகப்பன் இல்லாத பிள்ளை ஊதாரியாக தான் வளர்வான்.

தனது 25வது வயதில் முதல் பெண் குழந்தையை தத்தெடுத்தார் சுஷ்மிதா சென். பிறகு பத்து வருடங்கள் கழித்து மற்றொரு பெண் குழந்தையை தத்தெடுத்தார். பெண் என்பவள் வலிமையானவள். அவளால் இந்த சமூகத்தில் தனியாக வாழ்ந்தும், பிள்ளைகளை வளர்க்கவும் முடியும் என்பதை வெளிக்காட்டியுள்ளார்.

விவாகரத்து ஆனாலும்...

விவாகரத்து ஆனாலும்...

சரிகா - விவாகரத்தான பிறகும், தனியாக ஒரு பெண் இரண்டு மகள்களை வளர்க்க முடியும் என நிரூபித்தவர்.

திருமணத்திற்கு முன் அப்பா, சகோதரன் துணை, திருமணத்திற்கு பிறகு கணவன் துணை. ஆண் இல்லாமல் பெண் தனியாக சமூகத்தில் இயங்க முடியாதா? பெண்ணுக்கு ஆண் துணை எதற்கு தேவைப்படுகிறது, வேறொரு ஆணிடம் இருந்த காப்பாற்ற... இதுவே ஒரு மோசமான சூழல் அல்லவா.

திருமணத்திற்கு பிறகு விவாகரத்து ஆகிவிட்டால், அவ்வளவு தான், பெண் மட்டும் வாழாவெட்டி ஆகிவிடுவாள். ஆண் மட்டும் கெட்டியாக இருந்து விடுவான்? இப்படி தான் கூறுகிறது நமது சமூகம்.

கமல்ஹாசனை விவாகரத்து செய்த பிறகும், தனது மகள்களை தனி தாயாக வளர்த்தவர் சரிகா.

திருமணமாகாமல் குழந்தை

திருமணமாகாமல் குழந்தை

நீனா குப்தா - திருமணமாகாமல் குழ்ந்தாவ் பெற்று வளர்ப்பதன் வலிமை, கடுமையை கடந்து வந்தவர்.

நீனா குப்தாவிற்கும் முன்னாள் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி தலைவர் விவியன் ரிச்சர்ட்ஸ்-க்கும் பிறந்தவர் தான் இவரது மகள் மசாபா குப்தா. ஆனால், இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. இவரது மகள் ஒரு ஃபேஷன் டிசைனராக விளங்கி வருகிறார்.

திருமணத்திற்கு முன் கர்ப்பம்!

திருமணத்திற்கு முன் கர்ப்பம்!

கொங்கோனா சென் ஷர்மா - மிக பெருமையாக திருமணத்திற்கு முன்னே தனது கர்ப்பத்தை பற்றி தகவல் வெளியிட்டவர்.

பெங்காலியான கொங்கோனா சென் ஷர்மா தன்னுடன் நடித்த ரன்வீர் ஷோரே என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், இவர் திருமணத்திற்கு முன்பே இவர் மூலம் கருத்தரித்துவிட்டார். இதை மூடி மறைக்காமல், தான் கர்ப்பமாக இருப்பதை திருமணத்திற்கு முன்பே கூறினார் கொங்கோனா சென் ஷர்மா.

ஐ.வி.எப் மூலம் குழந்தை!

ஐ.வி.எப் மூலம் குழந்தை!

ஃபரா கான் - தான் விரும்பும் போது திருமணம் என்றதில் தீர்க்கமாக இருந்தவர், ஐ.வி.எப் மூலம் குழந்தை பெற்றவர்.

திருமணமான ஒரு பெண் இரண்டாவது மாதமே கருவுற்றுவிட்டாள் என்ற செய்தி அறிந்திட வேண்டும். இல்லையேல், ஒவ்வொரு மாதமும், விசேஷம் எதுவும் இல்லையா என்று கேட்டுக் கொண்டு சொந்த, பந்தத்தினர், அக்கம்பக்கத்தினர் வந்துவிடுவார்கள்.

ஃபரா கான் தனக்கு பிடித்த ஆணை தனது 40வது வயதில் தான் திருமணம் செய்துக் கொண்டார். மேலும், ட்ரிப்லெட் எனப்படும் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை இவர் ஐவிஎப் எனப்படும் செயற்கை முறையில் கருத்தரித்து பெற்றுக் கொண்டார்.

தனியாக...

தனியாக...

ரேகா - திருமணமாகி கணவனை இழந்த பெண் தனியாக வாழ்ந்துவிட முடியுமா என்பது பெரும் சவால் இந்த சமூகத்தில். நட்பாக ஒரு ஆண் வீட்டுக்கு வந்து சென்றாலும் கூட, வேறுவிதமாக பேசும் வாய்கள் இங்கே அதிகம்.

இப்படியான சமூகத்தில் இந்தியாவின் முன்னணி நடிகையாக இருந்த ஐகானிக் நடிகை ரேகா, திருமணமான ஒரே வருடத்தில் தனது கணவரை இழந்தார். அவர் லண்டனில் இதற்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த ஜோடிக்கு குழந்தைகளும் இல்லை. அதன் பின் இன்று வரை தனியாக தான் வாழ்ந்து வருகிறார்.

ஓரினச்சேர்க்கை காதல்...

ஓரினச்சேர்க்கை காதல்...

ஷபானா ஆஸ்மி - 1998ல் தான் நடித்த ஃபயர் எனும் படத்தில் ஓரினச் சேர்கையாளர்கள் காதலராக நடித்தவர்.

இந்த படத்தில் இரு பெண்கள் ஒருவர் மீது ஒருவர் காதல்வயப்படுவது போல கதை அமைந்திருக்கும். இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் இல்லை என்று கூறி, இந்த படத்திற்கு தடையும் விதித்தனர்.

ஷபானா ஆஸ்மி ஒரு பெண்ணுரிமை ஆர்வலரும் கூட.

கவர்ச்சி நாயகியின் மறுபக்கம்

கவர்ச்சி நாயகியின் மறுபக்கம்

சில்க் ஸ்மிதா- இவர் கிளாமர் கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடியும் என்று கருதிய திரை உலகினர் முகத்தில் கரியை பூசியவர்.

தனது முதல் கதாப்பாத்திரம் கிளாமர் ரோலாக இருந்த ஒரே காரணத்தால், இவரை அடுத்தடுத்து கவர்ச்சி பாத்திரங்களுக்கும், ஒரு பாடலுக்கும் மட்டும் நடனமாகவே பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவருக்குள் ஒரு திறமையான நடிகையும் இருந்தார். அதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு அலைகள் ஓய்வதில்லை.

கவர்ச்சி நடிகை என்பதால், இவரை சமூகம் பலவகைகளில் ஒதுக்கியப் போதும், மிக தைரியமாக வாழ்ந்தவர். ஆனால், எதிர்பாராத தருணத்தில் தற்கொலை செய்து மரணம் அடைந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Indian Celeb Women Who Defied Societal Stereotypes!

Indian Celeb Women Who Defied Societal Stereotypes!