For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மேல்சாதியினர் மலத்தை அள்ளி வீசியும் தொடர்ந்து பாடம் நடத்திய ஆசிரியர் - மறைக்கப்பட்ட வரலாறு

|

இன்று செப்டம்பர் 5. ஆசிரியர் தினம். ஆசிரியப் பணி என்பது மிகவும் ஆத்மார்த்தமான, அறப்பணி என்பது நம் எல்லோருக்குமே தெரியும். வாழ்க்கையில் ஒருவன் முன்னேறுகிற பொழுது, தன்னுடைய கடந்த காலத்தை நினைத்துப் பார்த்து மகிழ்ச்சி அடைவதுண்டு.

unknown facts about savithribhai phule

Image Courtesy

அந்த கடந்த கால வாழ்க்கைக்குள் யார் இருக்கிறார்களோ இல்லையோ நிச்சயம் நம்முடைய ஆசிரியர்களின் கால் தடம் கட்டாயம் அதில் இருக்கும். அப்படிப்பட்ட ஆசிரியர் தொழிலில் ஆண் ஆசிரியர்கள் நம் ஞாபகத்தில் வைத்துக் கொள்கிறோம். ஆனால் பெண் ஆசிரியர்களை அவ்வளவாக நாம் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. அப்படித்தான் நம்முடைய வரலாறும் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மறைக்கப்பட்ட வராறு

மறைக்கப்பட்ட வராறு

Image Courtesy

இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் யார்? முதல் பெண் மருத்துவர் யார் என்று கேட்டால் உடனே கண்ணை மூடிக்கொண்டு பதில் சொல்லும் நமக்கு இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யார் என்று கேட்டால் தெரியாது. ஆனால் டாக்டர் ராதா கிருஷ்ணனின் நினைவாகக் கொண்டாடப்படும் இந்த ஆசிரியர் தினம் கட்டாயம் இவரை வரலாற்றுப் பக்கங்களில் மறைத்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அத்தகைய பெருமைக்கு உரிய பெண் ஆசிரியர் தான் சாவித்ரிபாய் பூலே. இவர் செய்த சமூகப் புரட்சிகளையெல்லாம் கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள். அவரைப் பற்றி இந்த ஆசிரியர் தினத்திலாவது நினைவு கூர்வோம்.

பிறப்பு

பிறப்பு

Image Courtesy

சாவித்ரிபாய் பூலே 1831 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சதாரா என்னும் இடத்தில் பிறந்தார். அடிப்படையில் இவர் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே, அக்கால வழக்கத்தின் படி மிகச் சிறு வயதிலே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

திருமணம்

திருமணம்

தனக்கு 9 வயது இருக்கும்பொழுதே, 13 வயதே ஆன ஜோதிராவ் புலே என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஜோதிராவ் புலே சமூகப் புரட்சி, சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபாடு உடையவர் என்பதால், தன்னுடைய மனைவியையும் சாதீயம் மற்றும் பெண்கள் ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டத்தில் தன்னுடன் இணைத்துக் கொண்டார். இவர்களுக்கென்று குழந்தை எதுவும் பிறக்காததால், ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.அந்த குழந்தையின் பெயர் யஸ்வந்த் ராவ்.

பள்ளிக்கூடம் தொடங்குதல்

பள்ளிக்கூடம் தொடங்குதல்

கல்வி தான் சமூக விடுதலையை சாத்தியப்படுத்தும் என்று நம்பினார் சாவித்ரிபாய். அதனால், 1846 ஆம் ஆண்டு ஒரு பள்ளிக் கூடத்தைத் தொடங்கி, அதில் தனக்குத் துணையாக பாத்திமா ஷேக் என்னும் பெண்ணையும் சேர்த்துக் கொண்டு, யாருக்கெல்லாம் கல்வி மறுக்கப்பட்டதோ அந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கல்வி கற்றுத் தந்தார். இதற்கு இடையில், 1848 ஆம் ஆண்டு சாவித்ரிபாய் முறையான ஆசிரிய பயிற்சியெல்லாம் பெற்று, அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் ஆகிவிட்டார்.

இதைத்தொடர்ந்து, 1848 லேயே தான் தொடங்கிய பள்ளியில் 9 மாணவிகளுடன் முறையாக, தான் தலைமையாசிரியாகப் பொறுப்பேற்று பள்ளியை நிர்வகித்து வந்தார்.

ஆதிக்க அராஜகம்

ஆதிக்க அராஜகம்

Image Courtesy

ஆனால் பள்ளி தொடங்கிய 6 மாதத்திலேயே அந்த பள்ளியை மூடிவிட்டு, வேறு ஒரு இடத்துக்கு மாற்றப்பட்டது. காரணம், அந்த ஊரில் உள்ள ஆதிக்க சாதி வெறியர்களின் அட்டகாசம் தான். ஆம். பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்ரிபாய் ஒடுக்கப்பட்டோருக்கான கல்விப்பணி செய்ததை மிகக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினை மட்டுமல்லாது, மலத்தினையும் வீசி பல தொல்லைகள் செய்து வந்தனர். தினமும் பள்ளிக்கு வீட்டிலிருந்து கிளம்பும்போது, பழைய ஆடையை அணிந்து கொண்டு செல்வார். வழியில் எல்லோரும் சுறும் மலமும் வீசுவார்கள். பள்ளிக்குச் சென்ற பின் வேறு நல்ல ஆடையை அணிந்து கொண்டு, பாடம் நடத்த ஆரம்பிப்பார். 1892 ஆம் ஆண்டு சாவித்ரிபாய் கல்வியின் தேவை, சாதி எதிர்ப்பு ஆகிய கருத்துகளை வலியுறுத்தும் கவிதைகளான 'கவிதை மலர்கள்' என்ற நூலை வெளியிட்டார்கள்.

 விதவைப் பெண்களுக்கு ஆதரவு

விதவைப் பெண்களுக்கு ஆதரவு

விதவைப் பெண்களுக்கு அந்த காலத்தில் மொட்டை அடிக்கும் பழக்கம் இருந்தது. இந்த கொடுமையை எதிர்த்துப் போராட முடிவு செய்தார் சாவித்ரிபாய். அதற்கான 1863 ஆம் ஆண்டு, சுற்று வட்டாரத்தில் உள்ள நாவிதர்கள் அனைவரையும் ஒன்றாகத் திரட்டி பெரிய போராட்டத்தை நடத்தினார்.

அநாதை குழந்தை

அநாதை குழந்தை

1870 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. அந்த பஞ்சத்தில் பல பேர் இறந்துவிட்டனர். பலர் இடம் பெயர்ந்துவிட்டனர். அந்த சூழலில் கிட்டதட்ட அந்த ஊரில் 52 குழந்தைகள் அநாதைகளாக பாதுகாப்பின்றி, நிர்கதியாக நின்றார்கள். அவர்களுக்காக ஒரு உறைவிடப் பள்ளியை உருவாக்கி, அந்த குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்து வந்தார்.

தொற்றுநோய் மருத்துவமனை

தொற்றுநோய் மருத்துவமனை

1897 ஆம் ஆண்டு பிளேக்கு தொற்றுநோய் நாடு முழுவதும் பெருகியிருந்தது. அந்த சமயத்தில் சாவித்ரிபாய் பூலே அவருடைய வளர்ப்பு மகனும் மருத்துவருமான யஷ்வந்த் ராவ்வும் இணைந்து ஒரு மருத்துவமனையை ஆரம்பித்தனர். இந்த மருத்துவமனை புனேவுக்கு அருகிலுள்ள சாசனே மலா (ஹடாப்சர்) என்னும் இடத்தில் தொற்றுநோய் குறைவாக உள்ள பகுதியில் இருந்தது. நோயால் பாதிக்கப்பட்டவர்களை அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை கொடுத்தார் சாவித்ரி. இதை வெகுநாளாகத் தொடர்ந்து செய்து வந்ததால், சாவித்ரிபாய்க்கும் நோய்த்தொற்று ஏற்பட்டு 1897 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் நாள் உயிர் இழந்தார்.

அரசு மரியாதை

அரசு மரியாதை

Image Courtesy

சமூக சீர்த்திருத்தத்துக்காகக போராடுகிற பெண்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு தனி விருதினை மகாராஷ்டிரா அரசு அறிவித்திருக்கிறது. அந்த விருதினுடைய பெயரே சாவித்திரிபாய் புலே சமூக சீர்த்திருத்த விருது என்பது தான்.

2015 ஆம் ஆண்டு புனே பல்கலைக்கழகத்தின் பெயர் சாவித்திரிபாய் புலே பல்கலைக் கழகம் என்று மாற்றப்பட்டது.

1998 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் நாள் அவருடைய நூற்றாண்டு நினைவு நிறைவு நாளில் இந்திய அஞ்சல் துறையானது சாவித்திரிபாய் புலேவின் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிட்டு, பெருமை தேடிக் கொண்டது.

ஆசிரியர் தினத்தன்று ஒடுக்கப்பட்ட மக்களுடைய கல்விக்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்த சாவித்ரிபாய் பூலேவை நினைத்துப் போற்றுவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync teachers day
English summary

hidden histroy: india's first woman teacher and social activist before dr.radhakrishnan

we are unknown about savithribhai phule. india's first woman teacher and social activist before dr.radhakrishnan
Story first published: Wednesday, September 5, 2018, 16:10 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more