மாறு வேடத்தில் வரும் என்னை யாரும் கண்டுபிடிக்க முடியாது! - ரஜனி WonderWomen #006

Posted By:
Subscribe to Boldsky

ஒரு தவறையோ அல்லது ஒரு குற்றத்தையோ துப்பறியும் வகையிலான கதையென்றால் எல்லாருக்கும் பிடிக்கும். வழக்கமான கதையோட்டமாக இல்லாமல் அதில் நாம் எதிர்பாராத திருப்பங்களுடன் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

அதே போல , டிடெக்டிவ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நமக்கே தெரியாமல் நம்மைப் பற்றி உளவு பார்க்கும் நபர். திரைப்படங்களில் இது மிகவும் சுவாரஸ்யமான கேரக்டெராக வடிவமைக்கப்பட்டிருக்கும் உண்மையில் அவர்களின் வாழ்க்கை, அவர்கள் சந்திக்கும் பிரச்சனை எல்லாம் மிகவும் சுவரஸ்யமானதாக இருக்கிறதா என்று பார்க்கலாம்.

உங்களுக்கு ஷெர்லாக் ஹோம்ஸ் கதை தெரியும் தானே... அதே போல இந்தியாவிலும் ஒருவர் இருக்கிறார். இந்தியாவிலேயே முதல் பெண் டிடெக்டிவ் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் தான் அவர்! இத்துறையப் பற்றி முழு விவரமும் தெரியாது 1983 ஆம் ஆண்டு இதற்குள் நுழைந்தவரைப் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரஜனி பண்டிட் :

ரஜனி பண்டிட் :

கடந்த இருபத்தைந்து வருடங்களாக ரஜனி தனியாக ஒரு துப்பறியும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது நீங்கள் பார்ப்பது போலவோ அல்லது நினைப்பது போலவோ மிகவும் எளிமையான பணி கிடையாது. சவால்கள் நிறைந்த பணியாகவே இது இருக்கிறது.

ஒரு பெண்ணாக அத்தனையையும் கடந்து வந்திருக்கிறார் ரஜனி. தானேவில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ரஜனி, ரூபரெல் என்ற கல்லூரியில் மராத்தி மொழி பாடத்தை படித்திருக்கிறார். கல்லூரி படிப்பு முடித்த பின்னர் மூன்று மாதங்கள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு அதன் பின்னர் தான் தனியாக துப்பறியும் நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார்.

Image Courtesy

அப்பா :

அப்பா :

ரஜனியின் இந்த விருப்பதிற்கு காரணம் அவருடைய அப்பா சாந்தாராம் பண்டிட் தான். இவர் மும்பை போலீஸில் க்ரிமினல் புலன் விசாரணைத்துறை அதிகாரியாக இருந்தார். ரஜனி சிறுவயதிலிருந்தே தந்தையிடம் வழக்குகள் பற்றியும் அதனை எப்படி போலீஸ் அணுகுகிறது என்று கேட்டு கேட்டே வளர்ந்திருக்கிறார்.

Image Courtesy

போலீஸ் :

போலீஸ் :

அதோடு, குழந்தையாக இருந்த ரஜனிக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. மக்களுக்கு போலீஸிடமிருந்தே ஏன் நேரடியாக நீதி கிடைக்கவில்லை? போலீஸ் என்பது விசாரிக்க மட்டும் தானா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

இதனை மாற்ற நினைத்தவர், தான் ஒரு துப்பறியும் நிபுணராக வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்காக தன்னை இளவயதிலிருந்தே மெருகேற்றிக் கொள்ள ஆரம்பித்தார்.

கூர்ந்து கவனிப்பது, எத்தகைய சூழலிலும் போராட தயாராக இருப்பது, எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை வளர்ப்பது என மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயாரானார்.

Image Courtesy

 திருமணங்கள் :

திருமணங்கள் :

ரஜனியின் ஸ்பாஷிலிட்டியே திருமணமான தம்பதிகள் தங்களது இணை குறித்து, திருமணத்திற்கு முன் மற்றும் திருமணத்திற்கு பின் என அவர்களது நடவடிக்கைகளை கண்காணிப்பது தான்.

சந்தேகப்பட்டு அடிக்கிறார், அவர் மீது எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்று யார் எதைச் சொன்னாலும், அதனை ஆராய்ந்து உண்மை நிலவரம் என்ன என்பதை கண்டுபிடித்துச் சொல்லி விடுகிறார் ரஜனி.

Image Courtesy

வளர்ச்சி :

வளர்ச்சி :

மும்பையில் இருக்கக்கூடிய மஹிம் என்ற பகுதியில் இருபது பேருடன் இணைந்து இந்த துப்பறியும் நிறுவனத்தை ஆரம்பித்தார் ரஜனி. எழுபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கேஸ்களை விசாரித்திருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் ரஜனியின் வாடிக்கையாளர்கள் வட்டம் பெரிதானது. பொதுமக்களைத் தாண்டி பெரிய பெரிய பிஸ்னஸ்மேன்கள், அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள் என ஏராளமானோர் ரஜனியைத் தேடி வர ஆரம்பித்தனர். மும்பையைத் தாண்டி, இந்தியாவைத் தாண்டி இவருடை பணி துபாய்,லண்டன் மற்றும் ஸ்வீடன் என்று விரிந்தது.

Image Courtesy

அடையாளம் :

அடையாளம் :

இந்த துப்பறியும் பணிக்காக ரஜனி பல்வேறு வேடங்களை தரித்திருக்கிறார்.தன்னை அலுவலகத்தில் வந்து சந்திக்கும் நபர், வெளியில் எங்காவது பார்த்தாலும் அடையாளம் காண முடியாதாம். அந்த அளவுக்கு தத்ரூபமாய் இவருடைய வேடம் இருக்குமாம்.

வீட்டுப் பணியாளர்,கண் பார்வையற்ற பெண், கர்பிணிப் பெண்,தெருவோரத்தில் காய்கறி விற்ப்பவர் என பல்வேறு கெட்டப்புகளில் ரஜனியைப் பார்க்க முடியும்.

Image Courtesy

புத்தகம் :

புத்தகம் :

ரஜனி இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இரண்டுமே தன்னுடைய அனுபவத்தைக் கொண்டு அதன் தாக்கத்தினால் எழுதியது. இரண்டு புத்தகங்களும் சேர்த்து இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை குவித்திருக்கிறது.

Image Courtesy

ஆண்கள் :

ஆண்கள் :

துப்பறியும் பணி என்பது மிகவும் சவாலானது, இது ஆண்களுக்கான பணி என்று ஒதுக்கப்பட்டு வந்த காலத்தில் இது பெண்களாலும் முடியும் என்று சொல்லி தனி முத்திரை பதித்திருக்கும் ரஜனி சந்தித்த பிரச்சனைகள் ஏராளம்.

ஆணாதிக்கம் நிறைந்த துறையில் நுழைந்து இப்போது தனி முத்திரை பதித்திருக்கும் ரஜனி பண்டிட் போற்றுதலுக்குரியவர்!

Image Courtesy

மரணம் :

மரணம் :

இவரிடம் பலரும் கேட்கிற கேள்வி உங்களுக்கு பயமாக இல்லையா? என்பது தான், அதிகாரத்தில் இருப்பவர்களை எல்லாம் பகைத்துக் கொள்கிற இது போன்ற விஷயத்தால் உங்களை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுவார்களே என்று கேட்பவர்களுக்கு ரஜனி சொல்லும் பதில் என்ன தெரியுமா?

எனக்கு எதைப் பற்றிய பயமும் இல்லை. மரணம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். பாதுகாப்பான இடம் என்று நினைக்கும் என் வீட்டு அறையில் உட்கார்ந்திருக்கும் போது மேற் கூரை இடிந்து விழுந்து கூட நான் இறக்கலாம் தானே.... அதனால் மரணம் குறித்து பயப்படத் தேவையில்லை அது ஒரு நாள் நிகழும் அது எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதை நான் புரிந்து கொண்டு விட்டேன்.

Image Courtesy

எங்கே செல்ல :

எங்கே செல்ல :

தான் ஒரு துப்பறிவாளர் ஆக வேண்டும் என்ற கனவுடன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார் ரஜனி. உங்களைச் சுற்றி நடக்கிற விஷயங்களை கண்காணிக்கத்துவங்கினாலே பல்வேறு பிரச்சனைகள் உங்கள் கண்களுக்கு தெரிய ஆரம்பிக்கும், சில பிரச்சனைகள் அவர்களாகவே சமாளிக்க முடியும், சிலருக்கு என்ன பிரச்சனை? இந்த பிரச்சனையின் ஆரம்பம்,மையப்புள்ளி என்ன என்று கண்டறிவதில் சிரமங்கள் இருக்கும்.

தவறு, குற்றம் என்று தெரிந்துமே அதற்கான ஆதாரம் இருக்காது, இருந்தால் எங்கே யாரிடம் செல்வது என்று தெரியாது. இவை எல்லாவற்றையும் விட என்னிடம் கேட்க்கப்பட்டதைப் போல அவர்களுக்கு மரணம் குறித்த பயம் இருக்கலாம். அவர்களுக்கான ஓர் இடமாக தான் என்னுடைய துப்பறியும் நிறுவனம் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தேன் என்கிறார்.

Image Courtesy

 முதல் கேஸ் :

முதல் கேஸ் :

ரஜனியின் முதல் கேஸ் அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது வந்துவிட்டிருக்கிறது. யாரும் ரஜனியிடம் வந்து, இதை கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று கேட்டிருக்கவில்லை, ஆரம்பத்தில் அவர் சொன்னாரே... உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கண்காணித்திடுங்கள் நிறைய பிரச்சனைகள் உங்கள் கண்களுக்கு தெரிய ஆரம்பிக்கும் என்று சொன்னது போலவே... தன் கல்லூரித் தோழி ஒருத்தியின் நடவடிக்கைகளில் தெரிந்த திடீர் மாற்றமே அதைப் பற்றி துப்பறிய தூண்டியிருக்கிறது.

Image Courtesy

வெற்றி! :

வெற்றி! :

அந்த தோழியை தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பித்தார். அவர் சட்டவிரோதமாக ஏதோ செய்கிறார் என்பது ரஜனிக்கு தெரியவந்தது. அதோடு அவரது நடவடிக்கைகள் குறித்து, தோழியின் பெற்றோருக்கு எந்த விவரமும் தெரிந்திருக்க வில்லை. அன்னிய ஆண் ஒருவன் தோழி மீது அதீத உரிமை செலுத்தி வருவதும் கண்டுபிடித்தார்.

விவரங்களை சாட்சியங்களுடன் தோழியின் பெற்றோருக்கு நிரூபித்து தோழியை மீட்டுக் கொண்டு வந்தார் ரஜனி. அந்த சம்பவத்தின் போது தான், தோழியின் தந்தை.... நீ உளவுத்துறையில் பணியாற்றுகிறாயா என்று கேட்டிருக்கிறார்.... அதிலிருந்து தான் உளவுத் துறை அதிகாரியாக வேண்டும் என்று உறுதியேற்றிருக்கிறார்.

Image Courtesy

உங்களுக்காக! :

உங்களுக்காக! :

நீங்கள் ஏதாவது செய்ய நினைத்தால் உடனே செய்திடுங்கள். உங்களது விருப்பத்தினால் பிறருக்கு எந்த தீங்கும் ஏற்படாது எனும் பட்சத்தில் அதனை நிறைவேற்றுவதில் எந்த தவறும் கிடையாது.

அதே போல பெண்களாலும் எல்லாத்துறையிலும் சாதிக்க முடியும் என்பதை உணர வேண்டிய காலமிது என்கிறார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, life, wonder women
English summary

First Women Investigator in India

First Women Investigator in India
Story first published: Wednesday, January 31, 2018, 10:38 [IST]
Subscribe Newsletter